பாக்கியலட்சுமி: நிதிஷ் பற்றி தெரிந்த உண்மை, இனியாவை கூட்டிட்டு போகும் கோபி.. அதிர்ச்சி கொடுத்த சுதாகர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஜூன் 25 ஆம் தேதிக்கான எபிசோடில் நிதிஷ் பற்றிய உண்மைகள் இனியா மூலமாக கோபிக்கு தெரிய வருகிறது. இதனால் இனியாவை தன்னுடைய வீட்டிற்கு கூட்டிட்டு போவதாக கோபி சொல்கிறார். அதற்கு சுதாகர் என்ன சொன்னார் என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் இனியாவிற்கு எல்லா உண்மைகளும் தெரிந்தாலும் பிறந்தநாள் பார்ட்டியில் அமைதியாக இருக்கிறார். சோகமாகவே நிதிஷை பார்த்து முறைக்கிறார். பிறகு கேக் வெட்டி இனியா குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ஊட்டி விடுகிறார். அப்போது எல்லோரும் நிதிஷை கூப்பிட்டு இனியாவிற்கு ஊட்டி விடுவதற்கும், இனியாவை நித்திஷ்க்கு ஊட்டி விடுவதற்கும் சொல்ல, அதேபோல இனியா செய்கிறார்.

vijay TV Baakiyalakshmi serial Highlights and Review of 25th June 2025 Episode

பிறகு எழில் அங்கிருந்து கிளம்புகிறார். அதை தொடர்ந்து பாக்யாவும் ஈஸ்வரியும் கிளம்புகின்றனர். அப்போது கோபி மட்டும் வந்து இருக்க சொந்தக்காரர்கள் எல்லோரும் போன பிறகு கோபியிடம் இனியா என்னை எங்கேயாவது கூட்டிட்டு போங்க டாடி என்று சொல்ல, இப்ப எப்படிம்மா கூட்டிட்டு போக முடியும் எதாவது சொன்னா தப்பா நினைச்சுக்குவாங்க என்று கோபி சொல்ல, இல்லப்பா வெளியே போய் பேசலாம் என்று இனியா கோபியை வெளியே கூட்டிக்கொண்டு வந்து பேசுகிறார்.

அப்போது ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுக்கறதுக்கு முன்னாடி மாப்பிள்ளை எப்படிப்பட்டவர் என்று எல்லோரும் விசாரிப்பாங்க.. நீங்க ஏன் ஒழுங்கா விசாரிக்கல? என்று கேட்க என்ன ஆச்சுமா? ஆகாஷை வைத்து மாப்பிள்ளை எதுவும் பிரச்சனை பண்ணுகிறாரா? என்று கேட்க, அது முடிஞ்சு போன விஷயம் அதை பற்றி பேச இல்ல. ஆனா நிதிஷ் வீட்ல இருந்து வந்து பொண்ணு கேட்டா கூட அவங்க பணக்காரங்கன்னு தெரிஞ்சதும் என்னை கல்யாணம் பண்ணி கொடுத்துட்டீங்க.

நீங்க நிதிஷ் பற்றி சரியா விசாரிக்கல. அவர் போதை பழக்கத்துக்கு அடிமையாகி ஜெயிலுக்கு போயிட்டு வந்திருக்கிறார். அவங்க அப்பா பணத்தை கொடுத்து வெளியே எடுத்து இருக்காரு என்று சொன்னதும் கோபி அதிர்ச்சி ஆகிறார். இதெல்லாம் யார் சொன்னா என்று கேட்க தான் கண்டுபிடித்தேன் என்று ஆதாரத்தை இனியா காட்டுகிறார். உடனே கோபி அதிர்ச்சியாக நிற்கிறார். இப்ப நான் என்ன பண்ணனும் சொல்லுங்க டாடி? நான் நிம்மதியா சந்தோசமா என்னுடைய வேலையை பார்த்துட்டு இருந்தேன். ஆனா உங்க சந்தோசத்துக்காக கல்யாணம் பண்ணி வச்சி இருக்கீங்க. இப்போ என்னுடைய வாழ்க்கை கேள்விக்குறியா இருக்கு என்று இனியா அழுது கொண்டிருக்கிறார்.

vijay TV Baakiyalakshmi serial Highlights and Review of 25th June 2025 Episode

இனியாவை கூட்டிக்கொண்டு கோபி உள்ளே வந்து ஏன் சம்மந்தி உங்க பையனை பற்றிய உண்மையை என்கிட்ட சொல்லாம மறைச்சீங்க? என் பொண்ணோட வாழ்க்கை எப்படி போனாலும் பரவால்லனு நீங்க நினைச்சீங்களா? என்று கோபி கேட்க அதற்கு சுதாகர் அதிர்ச்சியாகி நிற்கிறார். அதற்கு உங்க பையன் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவன் என்ற உண்மையை எல்லாம் புரிஞ்சுடுச்சு என்று சொன்னதும், அது எப்பவோ பண்ணின தப்பு உங்க பொண்ணு கூட தான் ஏற்கனவே ஒருத்தர காதலிச்சா என்று சொல்ல அது பழைய அதை இப்ப பேச வேண்டாம் என்று சொல்ல, அதேபோலத்தான் நிதிஷ் பண்ணுனது பழைய கதை. இப்போ ஒழுங்கா தான் இருக்குறான் என்று சுதாகர் சொல்ல, கோபி இனி எதுவும் தேவையில்லை நான் என்னுடைய பொண்ணை கூட்டிட்டு வீட்டுக்கு போறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+