பாக்கியலட்சுமியில் அடுத்த வாரம்: போதை பொருள் வழக்கில் கைதாகும் நிதிஷ்.. பாக்யா கேட்ட கேள்வி! செம சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் நிதிஷ் போதை பொருள் வழக்கில் கைதாகிறார். அதை பாக்யா பார்த்து அதிர்ச்சியில் இருக்கிறார். இனி என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் 5 வருடங்களை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது‌. இந்த சீரியலில் இப்போது கதையில் வேகம் எடுத்திருக்கிறது. இனியா ஸ்கூல் படிப்பது போன்று தான் இந்த சீரியல் கதை தொடங்கப்பட்டது. ஆனால் இப்போது அவருக்கு திருமணமே முடிந்துவிட்டது. இது ஒரு பக்கம் இருக்க இனியாவிற்கு கோபி நிதிஷ் என்ற ஒரு பணக்கார வீட்டுப் பையனை பாக்கியாவை எதிர்த்து திருமணம் செய்து வைத்தார்.

Baakiyalakshmi Serial vijay TV

தன்னுடைய மகளுக்காக இனியாவின் மாமனாரிடம் தன்னுடைய ரெண்டு ரெஸ்டாரண்டையும் பாக்கியா இழந்திருந்தார். ஆனாலும் தன்னுடைய முயற்சியால் தான் மீண்டு வருவேன் என்னுடைய மகள் வாழ்க்கை நல்லா இருந்தால் சரி என்று பாக்கியா தியாகியாக இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்கும்போது இனியாவின் முதல் காதலை தெரிந்து கொண்ட நிதிஷ் அதை சொல்லியே இனியாவை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார். நிதிஷ் மட்டுமல்லாமல் அவருடைய அம்மாவும் அதையே சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் நிதிஷ் ஏற்கனவே போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவர் என்று உண்மையை இனியா கண்டுபிடித்து இருக்கிறார். இது பற்றி கோபியிடம் சொல்லும் இனியா உங்களுடைய சந்தோஷத்துக்காக என்னுடைய வாழ்க்கையை கேள்விக்குறியாக ஆக்கிட்டீங்க அப்பா என்று கதறி அழுதிருந்தார். இதை கேட்டு கோபி அதிர்ச்சியில் விடுகிறார். அதோடு சுதாகரிடம் என்னுடைய மகளை என் வீட்டிற்கு கூட்டிட்டு போறேன் என்று சொல்லி இருந்தார். ஆனால் இனியா நான் இப்போ வீட்டுக்கு வந்தா அம்மாவும் பாட்டியும் கஷ்டப்படுவாங்க இப்போதைக்கு இங்கேயே இருக்கிறேன் என்று சொல்லி இருந்தார்.

சுதாகர் இனியாவிடம் இனி நிதிஷ் ஒழுங்காக இருப்பான் அதை நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லியிருந்தார். இந்த நிலையில் அடுத்த வாரத்திற்கு என்று வெளியான ப்ரோமோவில் பாக்கியா ஒரு ஹோட்டலில் இருக்கிறார். அங்கு போலீஸ் வந்து சில இளைஞர்களை கைது செய்து கொண்டு போகிறார்கள். அதில் நிதிஷும் இருக்கிறார். நிதிஷ் போதையில் தள்ளாடியபடி இருக்க அவரை போலீஸ் அரெஸ்ட் செய்து வண்டியில் ஏற்றுகிறார்கள். இதை பார்த்து அதிர்ச்சியான பாக்கியா நிதிஷிடம் என்னாச்சுப்பா ஏன் உன்னை கைது பண்ணி இருக்காங்க என்று கேட்கிறார்.

ஆனால் நிதிஷ் பாக்கியாவிடம் பேசும் நிலைமையில் கூட இல்லை அங்கிருந்த போலீஸ்காரர்கள் இந்த பையன் உங்களுக்கு தெரிஞ்சவரா? என்று விசாரிக்கிறார்கள். கோபிக்கு மட்டும்தான் நிதிஷ் உடைய போதை பொருள் பழக்கம் தெரியும் ஏற்கனவே கோபியின் நடவடிக்கை சரியில்லை என்று பாக்கியா இனியாவுக்கு ஏதாவது பிரச்சனையா என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார். ஆனால் இனியாவும் சரி கோபியும் சரி பாக்யாவிடம் உண்மையை சொல்லாமல் மறைத்திருக்கிறார்கள். இப்போது நிதிஷி பாக்யாவின் கண் முன்பே போலீசால் கைது செய்யப்படுகிறார். இதனால் அடுத்த வாரத்தில் சரியான சம்பவங்கள் காத்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+