விஜய் டிவியில கல்யாணம் முடிச்சு வைக்கறாங்க... ஆசையையும் தீர்த்து வைக்கறாங்க...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவிக்கு மக்களின் நாடி பார்க்க தெரியலை.. அப்படீன்னு மக்கள் பேசிக்கறாங்க. டிடிக்கு கல்யாணம்னா விஜய் டிவி ஒரு வாரம் கொண்டாடடாறங்க... அதுவும் எப்படி அதை ஒரு ஷோவா ஒளிபரப்பு செய்து.

நீங்க கொண்டாடுங்க.. பாருங்க... அதை ஏன் எங்க மேல திணிக்கறீங்க... இன்னின்னாருக்கு, கல்யாணம் ஆயிருச்சுன்னு ஒரு போட்டோ பார்த்தா எங்களுக்கு போதாதான்னு ஜனங்க அங்கலாய்ச்சாங்க.

இப்படி சில ஷோக்களை மக்களின் நாடி பிடிக்க தெரியாம விஜய் டிவி செய்துடுவாங்க. சரி விஷயத்துக்கு வரலாம். இப்போ மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை ஷோன்னு சொல்றாங்க.இதுல சின்னத்திரையில் பிரபலமானவங்க... கூடவே சில பல ஆசைகளையும் நிறைவேத்தி வைக்கறாங்க.

திருமணம்

திருமணம்

சன் டிவி புகழ் மணிமேகலை டான்ஸ் மாஸ்டர் அசாத்தை காதலித்து, பெற்றோர் சம்மதமில்லாமல் திருமணம் செய்துகிட்டார். நாட்டுப்புற பாடல் ஜோடி புகழ் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி ஜோடி உட்பட எல்லாரும் காதல் திருமணம், பெற்றோரை எதிர்த்து ...அதனால சில நிறைவேறாத ஆசைகள் இருக்குமில்ல அதை நிறைவேத்தறாங்க.

அசாத் திருமணம்

அசாத் திருமணம்

மணிமேகலைக்கும் , அசாத்துக்கும் ஊரைக் கூட்டி திருமணம் நடக்கலையாம். அதை விஜய் டிவி பெருந்தன்மையுடன் செய்து வச்சுது. அதையும் ஒரு நிகழ்ச்சியாக்கி விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்ததுதான் ஏன்னு தெரியலை. இனிமே அவங்களுக்கு வளையக்காப்பு, குழந்தை பிறப்பு, அந்த பொறுப்பை விஜய் டிவி ஏத்துக்கிட்டு, அதையும் ஒரு ஷோவாக்கி விளம்பரம் கேட்பாங்களோ என்னமோ...

நிறைவேறாத ஆசைகள்

நிறைவேறாத ஆசைகள்

செந்தில் கணேஷ், ராஜலட்சுமி, அந்தோனிதாஸ், விஜயா, அறந்தாங்கி நிஷா ஜோடின்னு மொத்தம் 7 ஜோடிகள் இருக்காங்கங்க.. அவங்களோட கல்யாணத்துல நிறைவேறாத ஆசைகள், இன்னும் இப்படி செய்திருக்கலாம் என்கிற கனவுகள் எல்லாத்தையும் விஜய் டிவி இந்த நிகழ்ச்சி மூலமா நிறைவேத்தி வைக்க போறாங்களாம்.

அப்பளம் உடைத்தல்..

அப்பளம் உடைத்தல்..

குடத்தின் தண்ணீரில் மோதிரத்தை போட்டு எடுக்க சொல்வது, தலையில் அப்பளம் உடைப்பதுன்னு நலுங்கு நிகழ்ச்சி வேற. பாலும் பழமும் ஊட்டி விடுவதை ஒரு போட்டியாக்கி நிகழ்ச்சி நடத்திய விஜய் டிவி. சில விஷயங்களில் மக்களின் நாடி பிடிக்க தவறி விட்டது.

நிஷா முத்தம்

நிஷா முத்தம்

அறந்தாங்கி நிஷா விஜய் டிவியில ரொம்ப ஃபேமஸ்.. இவரில்லாம ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியும் நடக்காது. நிஷாவையும், அவர் கணவரையும் கூப்பிட்டு மாலையை மாத்திக்க சொன்னாங்க. மாலையை மாத்தும்போது, தன் புருஷனுக்கு ஆசையா முத்தம் கொடுத்தார் நிஷா.

மட்டும்தான்...

மட்டும்தான்...

ஹலோ மாலை மட்டும்தான் மாத்த சொன்னோம்..முத்தம் யாரு குடுக்க சொன்னதுன்னு நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்க, என் புருஷன் மூஞ்சியை கிட்டத்துல பார்த்து ரொம்ப நாளாச்சுப்பா... விஜய் டிவியில ஷூட்டிங் ஷூட்டிங்னு வச்சுடறீங்க.. என் புருஷன் முகத்தை கூட பார்க்க முடியலைன்னு சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்தார். என்னதான் ஜோக்னாலும் அதிலிருக்கும் உண்மை சுடாது?

தம்பதிய வாழவிடாம ஷூட்டிங் நடத்தறாங்க... இன்னொரு பக்கம் கல்யாணம் பண்ணி வைக்கறாங்க...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+