மனைவி கர்ப்பமாக இருக்கும் போது செல்லம்மா சீரியல் கதாநாயகன் வெளியிட்ட உருக்கமான பதிவு..ஏன் இப்படி..?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலில் கதாநாயகன் வெளியிட்ட வீடியோ ரசிகர்களின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அவருடைய மனைவி கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் இவர் இப்படி சோக வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறாரே என்று ரசிகர்கள் கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.
மனைவி கர்ப்பமாக இருக்கும் போது அருகில் இல்லாத ஏக்கமா?? அல்லது வேறு ஏதும் காரணமா?? என்று நெட்டிசன்கள் வழக்கம் போல குதர்க்கமான கேள்விகளை கமெண்ட்களில் கேட்டு வருகிறார்கள்.

குழந்தையை நேசிக்கும் கேரக்டர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லமா சீரியல் தற்போது தான் ஒளிபரப்பாகி ஒரு சில மாதங்கள் ஆகின்றது. ஆனாலும் ரசிகர்களுக்கு மத்தியில் இந்த சீரியலுக்கு அதிகமான எதிர்பார்ப்பு கூடியிருக்கின்றது. இந்த சீரியலை ரசிகர்கள் பலர் செல்லமா கேரக்டரின் துணிச்சலுக்காக பார்த்தாலும், பலர் சீரியலில் கதாநாயகனான அர்னாவ்க்காக அதிகமாக ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.ஏனென்றால் இந்த சீரியலில் ஒரு குழந்தையின் மீது அர்னாவ் வைத்திருக்கும் பாசத்தை பார்த்து இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். ஒரு தந்தை போல குழந்தையின் ஏக்கத்தை புரிந்து கொண்டு நடந்து கொள்ளும் விதத்தை பார்க்கும் போது பார்க்கும் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி தான் இருந்து வருகிறாராம்.

பிரபலமான சீரியல்கள்
அர்னாவ் விஜய் டிவிக்கு வருவதற்கு முன்பே சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி சீரியலில் அசோக் கேரக்டரில் நடித்திருந்தார். அப்போதே அவருக்கு அதிகமான ரசிகர்கள் இருந்தாலும் தற்போது செல்லமா சீரியலில் மூலம் இவருக்கு பலருக்கும் பரீட்சையமாக மாறிவிட்டார். அர்னாவ் சத்தி, பிரியசகி, கல்யாண பரிசு போன்ற சீரியலிலும்,வெப் சீரிஸில் சிங்க பெண்ணே போன்றவற்றிலும் நடித்துள்ளார். செல்லம்மா சீரியலில் நடிக்கும் அந்த குட்டி குழந்தை யோடு இவர் சீரியலில் மட்டுமல்லாமல் சீரியலை தாண்டியும் பல நேரங்களில் வெளியே சுற்றிக் கொண்டிருக்கிறாராம் அந்த குழந்தையோடு க்யூட்டான பல ரீல்ஸ் வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி பதிவிட்டு வருகிறார். குழந்தையின் மீது பாசத்தை வைத்திருக்கும் அர்னாவ்வின் மனைவி தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.

தந்தையாக போகும் அர்னாவ்
அர்னாவ் கேளடி கண்மணி சீரியலில் நடிக்கும் போது அந்த சீரியலில் அவரோடு நடித்த திவ்யா ஸ்ரீதர் என்பவரை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் முடிந்திருந்தாலும் திருமணத்தை ரகசியமாகத்தான் வைத்திருக்கின்றனர். தற்போது திவ்யா தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை சமூக வலைதள பக்கங்களில் கூறியிருந்தார். ஆனால் அதைப்பற்றி அர்னாவ் எந்த ஒரு தகவலையும் தெரிவிக்கவில்லை. தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் பல சோகமான வீடியோக்களை அடிக்கடி பதிவிட்டு வருகிறார்.

என்னவாக இருக்கும்
அர்னாவ்வின் மனைவி தான் தாயான சந்தோஷத்தை ரசிகர்களோடு பகிர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் அர்னாவ் ஏன் இப்படி சோகமான வீடியோக்களை பகிர்ந்து வருகிறார் என்று ரசிகர்கள் கேள்விகளை கேட்டு வருகிறார்கள். ஆனால் அதைப்பற்றி அர்னாவ் எந்த ஒரு பதிலையும் கூறவில்லை. தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அது தான் காதலிக்கும் நபர் தன்னோடு இல்லாத வலியை சொல்லும் ஒரு வீடியோவாக இருந்து வருகிறது அதற்கு, "காதல் வாழ்க்கை.. நம் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான ஒரு நபரை நாம் உண்மையில் இழக்கும் போது.."என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இந்த போஸ்ட் பார்த்த ரசிகர்கள் பலர் மகிழ்ச்சியாக இருங்கள் கவலை வேண்டாம்!! என்ன நடந்தது?? என்றெல்லாம் கேள்விகளை கமெண்ட் களில் அனுப்பி வருகிறார்கள்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications