விஜய் டிவியில் புது நிகழ்ச்சி.. வெற்றி பெற்றால் 5 லட்சம்.. புதுவிதமான விளையாட்டு.. ஆரம்பமே இவங்களா?
சென்னை: விஜய் டிவியில் மாகாபா தொகுத்து வழங்கும் கம்பெனி என்ற புது நிகழ்ச்சி தொடங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களோடு பொதுமக்களும் கலந்து கொள்கிறார்கள். அதிலும் முதல் வாரத்தில் பாண்டியன் ஸ்டோர் 2 சீரியல் பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
'கம்பெனி' என்ற புதுமையான கேம் ஷோ 15 செப்டம்பர் 2024 முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும். இந்த விளையாட்டில் இரண்டு போட்டியாளர்கள் அல்லது இரண்டு அணிகள் 16 பெட்டிகளுக்கு எதிராக போட்டியிட்டு 5,00,000 ரூபாய் வரை வெல்ல வாய்ப்புள்ளது . இந்த விளையாட்டை தொடர்ந்து ஆடி ஆட்டத்தின் முடிவில் அதிகப் பணத்தைப் பெற்ற போட்டியாளர் வெற்றியாளராக இருப்பார்.

பத்தாயிரம் ரூபாய் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை பணம் மதிப்பு திரையில் காண்பிக்கப்படும் . போட்டியாளர்கள் தங்களின் திறமை மற்றும் அதிர்ஷ்டத்தைப் பயன்படுத்தி 5 லட்சம் வரை வெல்ல முடியும். 8 பணப்பெட்டிகள், 3 வெடிகுண்டு பெட்டிகள், 3 லேடி பாக்ஸ்கள் மற்றும் 2 எக்ஸ்சேஞ்ச் பாக்ஸ்கள் இந்த விளையாட்டில் இடம்பெறும்.
எக்ஸ்சேஞ் பாக்ஸ்: இந்த எக்ஸ்சேஞ் பாக்ஸ் பெட்டியைத் தேர்ந்தெடுக்கும் போட்டியாளர் பணத்தை மாற்றிக் கொள்ள வாய்ப்பளிக்கும் . அடுத்த போட்டியாளருக்கு அந்த வாய்ப்பை அவர் வழங்கிவிடலாம் . மேலும், மற்ற போட்டியாளரிடமிருந்து பணம் பரிமாற்றம் செய்துகொள்ள முடியும் .

லேடி பாக்ஸ்: லேடி பாக்ஸைத் தேர்ந்தெடுத்தால், ஒரு பெண் மேடைக்கு வந்து, அதன் விலை தெரியாமல் சந்தையில் இருந்து ஒரு பொருளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் . அந்தப் பெண் போட்டியார் தேர்ந்தெடுத்த பொருளைத் பேரம் பேசி விற்க வேண்டும். பின்னரே அந்த பொருளின் உண்மையான விலை வெளியிடப்படும்.

பாம் பாக்ஸ்: முதல் இரண்டு பாம் பாக்ஸ் பெட்டிகளைத் தேர்ந்தெடுத்தால், போட்டியாளர் தங்கள் முறையைத் தவிர்த்து, அடுத்த போட்டியாளருக்கு அந்த வாய்ப்பை வழங்க முடியும் . மூன்றாவது பாம் பாக்ஸை தேர்ந்தெடுத்தால் திறந்தவருக்கு 'பூஜ்ஜியம்' கிடைக்கும். அதிர்ஷ்டம் மற்றும் திறமையை அடிப்படையாகக் கொண்ட இந்த விளையாட்டு நிகழ்ச்சி சுவாரஸ்யமாக செல்லும் . இந்த நிகழ்ச்சியை மகாபா ஆனந்த் தொகுத்து வழங்குகிறார். 'கம்பெனி' நிகழ்ச்சி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மதியம் 1.30 மணிக்கு STAR VIJAY இல் ஒளிபரப்பாகும் .

-
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம் எப்போது ரிலீஸ்? ஜெயிப்பாரா இந்த ஜூனியர்? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications