சூப்பர் சிங்கர் பூஜாவுக்கு அல்வா கொடுத்த டிஜே பிளாக்.. பாட்டு போட்டு இம்ப்ரஸ் செய்தது இதற்காகத்தானா?
சென்னை: விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் டிஜே பிளாக் பூஜாவிற்காக கொடுத்த அனுப்பிய அல்வாவை பார்த்து ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பூஜா பிரபலம் ஆவதற்கும் காரணம் டிஜே பிளாக் தான்.
அடிக்கடி பூஜாவிற்காக டைமிங் காதல், பாடல்கள் வசனங்கள் போட்டு ரசிகர்கள் மத்தியிலும் பிஜே பிளாக் மற்றும் பூஜா இருவரும் பிரபலம் அடைந்து விட்டனர்.

விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பலர் பிரபலம் அடைந்து இருக்கின்றனர். அந்த வகையில் தற்போது சூப்பர் சிங்கர் பூஜா மற்றும் டிஜே பிளாக் சமூக வலைத்தளத்தில் அதிகமான ரசிகர்களால் தேடப்படும் பிரபலங்களாக மாறிக் கொண்டிருக்கின்றனர்.
பொதுவாக விஜய் டிவி நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு தவறாமல் டிஜே பிளாக் யார் என்பது பற்றி தெரியும். வழக்கமாக டிஜே என்றால் வெவ்வேறு பாடல்களை ஒரே பிளேவில் மாத்தி மாத்தி ப்ளே செய்வார்கள். ஆனால் டிஜே பிளாக் அந்த விதியை மாற்றி பாடல்கள் மட்டுமல்லாமல் கவுண்டர் அடிப்பது பாட்டிலே பதில் சொல்வது கலாய்ப்பது என அதில் பிரபலமானார்.
டிஜே பிளாக்கிற்குள் இது போல் இருக்கும் நகைச்சுவை கேரக்டர் தான் அவரை இந்த அளவிற்கு வெற்றி அடைய வைத்தது. அதன் காரணமாகத்தான் தற்போது சூப்பர் சிங்கர் சாம்பியன் நிகழ்ச்சியிலும் ஒரு போட்டியாளராக டி ஜே பிளாக் கலந்து கொண்டார். டிஜே பிளாக்குக்கு பெரிய அளவில் ஒரு அறிமுகத்தை கொடுத்தது பிரியங்கா தான்.
நிகழ்ச்சியில் அடிக்கடி டைமிங் காமெடி கொடுத்து கலாய்க்கும் டிஜே பிளாக்கை அடிக்கடி பிரியங்கா கலாய்த்து யார் அவர் என்று கேட்கும் அளவிற்கு பிரபலப்படுத்தி விட்டார். பிறகு தான் தன்னுடைய முகத்தை அடிக்கடி இந்த நிகழ்ச்சியில் டிஜே பிளாக் காட்டிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பூஜா அறிமுகமானதும் டிஜே பிளாக் வேற லெவலில் தன்னுடைய வேலையை தொடங்கிவிட்டார்.

ஆரம்பத்தில் இருந்தே பூஜாவிற்கு மட்டும் தனித்துவமாக டிஜே பிளாக் பாடல்கள் வசனங்கள் போட்டு வருவதை பிரியங்கா மற்றும் மாகாபா இருவரும் கலாய்த்து கொண்டிருந்தனர் .இந்த நிலையில் தான் ஒருமுறை சிறப்பு விருந்தினராக வந்த பூஜாவின் பெரியம்மா மேடையில் வைத்து டிஜே பிளாக்கை திட்டி தீர்த்து விட்டார். பயந்து போன டிஜே பிளாக்கிற்கு கடைசியில் இன்ப அதிர்ச்சி கிடைத்தது. காரணம் நாங்கள் உங்கள் ரசிகை நீங்க இப்படி செஞ்சதுனால தான் எங்க பூஜா வெளியே தெரிந்திருக்கிறார்கள் என்று கடைசியில் பிராங்க் செய்து விட்டார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் எபிசோடில் தனக்கு கிடைத்த அதே ஷாக் பூஜாவுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்த டிஜே பிளாக் அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக யுவன் சங்கர் ராஜா கலந்து கொண்டிருக்கும்போது பூஜாவிற்கு அல்வா பார்சல் கொடுத்து அனுப்பி மேடையிலே ஷாக் கொடுத்து விட்டார். எனக்கு கொடுத்த அல்வாவை நான் உங்களுக்கு தந்து விட்டேன் என்று கூடவே ஸ்பெஷல் அறிவிப்பும் வேற கொடுத்து இருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications