பல அவமானங்களுக்கு பிறகு கனவு நனவானது, நெகிழ்ந்த டிஜே பிளாக்.. துணை நின்ற மாகாபா மற்றும் பிரியங்கா
விஜய் டிவி டிஜே பிளாக் புதியதாக கார் வாங்கி இருக்கிறார்.
சென்னை: விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளுக்கு டிஜே பிளாக் பின்னணி பாடல்களை ஒலிக்க செய்து கொண்டிருக்கிறார்.
அந்தந்த நேரங்களுக்கு தகுந்தது போல டைமிங் பாடல்களையும், வசனங்களையும் ஒலிக்க செய்வது டிஜே பிளாக்கின் தனித்திறமையாக இருக்கிறது.
விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் வெற்றி பெறுவதற்கு காரணமாக டிஜே பிளாக் இருந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் புதியதாக கார் ஒன்றை வாங்கி இருக்கிறார்.

டைமிங் வசனம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து ரியாலிட்டி ஷோக்களும் வெற்றிகரமாக செல்வதற்கு முக்கியமான காரணங்களில் ஒருவராக இருப்பவர் விஜே பிளாக். இவர் ரியாலிட்டி ஷோக்களின் போது அந்த சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி பின்னணியில் வடிவேலு மற்றும் கவுண்டமணி போன்றவர்களின் குரல்களை ஒலிக்க விட்டு அங்கு இருப்பவர்களை கலாய்த்து பார்த்து ரசிக்கும் ரசிகர்களுக்கு என்டர்டைன்மென்ட் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

எடிட்டிங் வேற லெவல்
ஒரு ரியாலிட்டி ஷோவின் சுவாரசியத்தை என்ன மாதிரி எல்லாம் மெருகூட்டினால் தற்போது உள்ள இளைஞர்களுக்கு பிடிக்குமோ அந்த மாதிரி புது புது டெக்னிக் பயன்படுத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதுவும் குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவருடைய பங்களிப்பு மிகப்பெரியது. இந்த நிகழ்ச்சி இவ்வளவு தூரம் வெற்றி பெற்றது என்று என்பதற்கு இவரும் ஒரு முக்கியமான காரணம் தான். அதுபோல சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் டிஜே பிளாக் போட்டியாளராக இருக்கும் அனைவருக்கும் பாடல்கள் வசனங்கள் போட்டு வந்தாலும் பூஜா வரும்போது அவருக்கு ஏற்றார் போல பின்னணியில் பிக்கப் லைன்களை பிளே பண்ணுவார்.

மேடையில் பிராங்க்
இதனால் தான் கடந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்த பூஜாவின் உறவினர்கள் டிஜே பிளாக்கை மேடையிலே திட்டி அவரை அதிர்ச்சி அடைய வைத்திருந்தனர். கடைசியில் அது பிராங்க் என்று கூறப்பட்டிருந்தாலும் அந்த ப்ரோமோ ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அதற்கு பிறகு இது ஒரு பிராங்க் என்று பூஜாவும் தன்னை மன்னித்து விடும்படி டிஜே பிளாக் உடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்து இருந்தார்.

புது கார் வாங்கியாச்சு
இந்த நிலையில் டிஜே பிளாக் புதியதாக கார் ஒன்று வாங்கி இருக்கிறார். அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அந்த வீடியோவிற்கு உருக்கமான சில வார்த்தைகளையும் பதிந்திருக்கிறார். அதில்," இது ஒரு கனவு நனவாகும் தருணம். ஓலா காரில் இருந்து சொந்தக்கார் வரை உங்கள் அன்பு ஆதரவு மற்றும் ஆசீர்வாதங்களுடன் இந்த மாற்றங்களை ஏற்படுத்திய அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும் எனது சிறந்த நண்பர்களுடன் ஒரு இந்த சிறந்த தருணத்தை பெற்றது நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்..." என்று கூறியிருக்கிறார். அதைத்தொடர்ந்து பிரியங்கா மற்றும் மாகாபா இருவரும் டிஜே பிளாக் உடன் கார் வாங்க சென்றிருக்கின்றனர். அவர்களுக்கும் டிஜே பிளாக் நன்றி கூறியிருக்கிறார்.
-
இதுவும் கடந்து போகும்.. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் மறுபக்கம்.. நீயா நானாவில் கண் கலங்கிய அம்மா -
நீயா நானாவில் யாமினி சொன்ன காதல் கதை.. கண்கலங்கி நின்ற கோபி நாத்.. கடைசியில் சொன்ன ‘நச்’ அட்வைஸ் -
சித்திரை திருநாளில் கிடைத்த பரிசு.. இரண்டு வருடம் கழித்து பிறந்த குழந்தை.. பிரதீப் ஆண்டனி நெகிழ்ச்சி பதிவு -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications