அமெரிக்காவில் நெப்போலியன் வீட்டில் டிஜே பிளாக் செய்த அதிரடி.. கடைசியில் ட்விஸ்ட்.. லீக்கான வீடியோ
சென்னை: நடிகர் நெப்போலியன் அமெரிக்காவில் குடும்பத்தோடு செட்டில் ஆகி இருக்கும் நிலையில் அவருடைய வீட்டிற்கு விஜய் டிவி பிரபலமான டிஜே பிளாக் தன்னுடைய நண்பர்கள் உடன் சென்றிருந்த நிலையில் அங்கு எடுத்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அது பலருடைய பாராட்டுகளை பெற்று வருகிறது.
நடிகர் நெப்போலியன் 80ஸ் காலகட்டத்தில் வில்லனாகவும், கதாநாயகனாகவும் பலரையும் தன்னுடைய நடிப்பால் மிரட்டி இருக்கிறார். அதிலும் அவர் நடித்த பல திரைப்படங்கள் இப்போதும் பலருடைய ஃபேவரைட், அதிலும் சீவலப்பேரி பாண்டி படத்தில் இவருடைய நடிப்பை நிஜம் என்று நம்பி பல ரசிகர்கள் அந்த நேரத்தில் அவருக்கு ரசிகர் மன்றங்களை தொடங்கி விட்டனர்.

அதுபோல "எட்டு பட்டி ராசா" திரைப்படமும் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றது தான். இந்த திரைப்படத்தில் நெப்போலியனுக்கு ஜோடியாக நடிகை குஷ்பூ மற்றும் ஊர்வசி நடித்திருப்பார்கள். அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற எல்லா பாடல்களுமே பட்டி தொட்டி எல்லாம் கலக்கியது. அதிலும் பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பாடல் இப்ப வரைக்கும் ரீல்ஸ்களில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் இந்த பாடலுக்கு நடிகர் நெப்போலியன் தன்னுடைய வீட்டில் பாட்டு பாடி இருக்கிறார். அதுவும் நெப்போலியன் வீட்டிற்கு டிஜே பிளாக் மற்றும் பல பிரபலங்கள் போயிருக்கும் நிலையில் அங்கு தான் டிஜே பிளாக் தலைமையில் ஒரு பார்ட்டி நடைபெற்றிருக்கிறது. அந்த பார்ட்டியில் எட்டு பட்டி ராசா பாட்டுக்கு நெப்போலியன் பாட்டு பாட மொத்த குடும்பமும் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கின்றனர். இந்த வீடியோவை டிஜே பிளாக் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அது அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
நெப்போலியன் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் 2009 ஆம் முதல் தன்னுடைய நடிப்பை குறைத்து விட்டு அரசியலில் கவனம் செலுத்த தொடங்கினார். அதிலும் ஒரு முறை எம்எல்ஏவாகவும், மன்மோகன் சிங் அமைச்சரவையில் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சராகவும் இருந்திருக்கிறார். அதுபோல திமுக பிரபலமான கேஎன் நேரு நெப்போலியனின் சொந்த மாமன் தான்.
அதுபோல நெப்போலியன் ஜேசுதா என்பவரை திருமணம் செய்த பிறகு அவருக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அதில் தனுஷ் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் 4 வயதிலேயே அந்த நோயை கண்டறிந்த நெப்போலியன் குடும்பத்தினர் அதற்காக சிகிச்சை எடுத்து வந்த நிலையிலும் 10 வயதிற்கு மேலே தனுஷால் எழுந்து நடக்க முடியாமல் ஆகிவிடும்,
அதுபோல விமானத்தில் பறந்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு விடும் என்றெல்லாம் டாக்டர்கள் சொல்லி இருந்த நிலையில் தன்னுடைய மகனுக்காக பல இடங்களில் பல்வேறு சிகிச்சைகளை எடுத்து வந்த நெப்போலினுக்கு அவருடைய மகனால் பத்தாவது வயதில் அதிர்ச்சி தான் கிடைத்தது. காரணம் டாக்டர்கள் சொன்னது போலவே 10 வயதுககு மேலே தனுஷால் எழுந்து நடக்க முடியாமல் ஆகியிருக்கிறது.
அதற்குப் பிறகு பல இடங்களில் சிகிச்சை பார்த்து வந்த நெப்போலியனுக்கு ஒருவர் மூலமாக திருநெல்வேலி பக்கத்தில் உள்ள ஒரு ஊரில் இந்த நோய்க்கு மருந்து கொடுக்கப்படும் என்று தெரிய வந்திருக்கிறது .உடனே அங்கு சென்று நெப்போலியன் தன்னுடைய மகனுக்கு சிகிச்சை அளிக்க தொடங்கி இருக்கிறார். பிறகு சில வருடங்களில் அவருடைய உடலில் சில மாற்றங்கள் தெரிய தொடங்கி இருக்கிறது.

அதற்கு பிறகு அரசியல் மற்றும் சினிமாவிலிருந்து விலகி மனைவி மற்றும் மகன்களோடு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அங்கு இயற்கை விவசாயம் செய்து வரும் நெப்போலியனிடம் 70-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நெப்போலியன் மகன் தனுஷை பார்ப்பதற்காக விஜய் டிவி பிரபலமான மாகாபா மற்றும் டிஜே பிளாக் அமெரிக்காவிற்கு சென்றிருக்கின்றனர். அங்கு தான் டிஜே பிளாக், நெப்போலியனை எட்டுப்பட்டி ராசா பாடலை மீண்டும் பாட வைத்திருக்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
-
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications