அதிர்ச்சி.. சூட்டிங் ஸ்பாட்டில் விஜே பிரியங்காவிற்கு ஏற்பட்ட விபத்து.. உடல் முழுக்க ஏற்பட்ட காயம்
சென்னை: விஜய் டிவியில் தொகுப்பாளினி பிரியங்காவிற்கு சூட்டிங் ஸ்பாட்டில் வைத்து விபத்து ஏற்பட்டு இருக்கிறது. அதனால் அதில் கை, கால் மற்றும் முகத்தில் அவருக்கு காயங்கள் ஏற்பட்டு இருக்கிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் தனக்கு உதவிய சிலர் பற்றி பிரியங்கா உருக்கமாக வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறார்.
அந்த வீடியோவில் பிரியங்கா தனக்கு அடிப்பட்டு விட்டது என்பதை தெரிந்து கொண்டதும் சில நண்பர்கள் ஓடி வந்திருக்கிறார்கள். அதற்கு பிரியங்கா நாம் வாழ்க்கையில் பெரிய அளவில் பணம் சம்பாதித்து வைப்பது முக்கியமில்லை. இந்த மாதிரி ஒரு சில நபர்களை சம்பாதிக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு சிலர்கள் என்னுடைய வாழ்க்கையில் இருப்பதால்தான் நான் எவ்வளவு கஷ்டங்களிலும் மேலே வந்து கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் விஜய் டிவியில் பல வருடங்களாக தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜே பிரியங்காவிற்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். பிரியங்கா விஜய் டிவியில் மட்டுமல்லாமல் பல மேடை நிகழ்ச்சிகளிலும் திரைப்பட இசை வெளியீட்டு விழாக்களையும் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். அதேபோல சமூக வலைதளத்திலும் பிசியாக இருக்கிறார்.
தன்னுடைய வாழ்க்கையில் நடக்கும் பல முக்கியமான நிகழ்வுகள் குறித்து தன்னுடைய youtube சேனலில் அடிக்கடி வீடியோ வெளியிட்டு வருவதும் வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் இப்போது பிரியங்கா தன்னுடைய youtube சேனலில் வெளியிட்ட வீடியோ தான் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது அதில் கடந்த டிசம்பர் மாதம் இறுதி நாட்களில் இசையமைப்பாளர் மற்றும் பாடகரான தேவா விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும்போது அவர் முன்பு தான் தொகுத்து வழங்கி கொண்டிருக்க போது திடீரென்று அங்கு வழுக்கி விழுந்து விட்டதாகவும் அதில் தன்னுடைய கால் கை முகம் எல்லாம் அடிபட்டு விட்டதாம். ஆனால் தேவா பாட்டு பாடிக் கொண்டிருக்கும் போது தான் பிரியங்கா டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் போது விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
உடனடியாக பிரியங்காவை முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக கூட்டிட்டு போய் இருக்கின்றனர். ஆனால் தேவா பிரியங்கா வரும் வரைக்கும் பதட்டத்தோடு காத்துக் கொண்டிருந்தாராம். பிறகு பிரியங்காவிற்கு ஓரளவு ஓகே என்பது தெரிந்த பிறகு தான் நிகழ்ச்சியை முடித்து இருக்கிறார்கள். அதைத்தொடர்ந்து சில நாட்கள் வீட்டில் ஓய்வில் இருந்த பிரியங்காவை சில விஜய் டிவி பிரபலங்கள் பார்க்க வந்திருக்கின்றனர்.
அவர்களைப் பார்த்ததும் பிரியங்கா உருக்கமாக பேசியிருக்கிறார்.. அதில் எனக்கு அடிபட்டு இருக்கிறது என்பதை தெரிந்ததும் எத்தனையோ பேர் எனக்கு போன் போட்டு என்னுடைய உடல் நலத்தை பற்றி விசாரிச்சுட்டே இருக்காங்க. இதை நினைக்கும் போது எனக்கு சந்தோசமா இருக்கு. நமக்குன்னு நாலு பேரு இருக்காங்க என்று எனக்கு கூடுதல் பலமாக இருக்கிறது. இன்னும் 50 வருடத்திற்கு நான் இதுபோல தொகுப்பாளராக ஜாலியாக உங்களையெல்லாம் மகிழ்விப்பேன் என்று அந்த வீடியோவில் பேசி இருக்கிறார்.

அதுபோல அப்போது நடந்த காமெடியான நினைவுகளையும் பிரியங்கா அந்த வீடியோவில் பகிர்ந்து இருக்கிறார். தற்போது முகத்தில் அடிபட்டு காயத்தோடு இருக்கும் பிரியங்காவின் வீடியோவை பார்த்ததும் ரசிகர்கள் பதறிப்போய் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications