சில பொண்ணுங்க தான் புரிஞ்சுக்காம பேசுறாங்க.. பொடிவைத்து பேசிய பிரியங்கா.. இந்த பதில் அவருக்கா?
சென்னை: விஜய் டிவியில் தொகுப்பாளினியாக கலக்கி கொண்டிருக்கும் பிரியங்கா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது சில பெண்கள் பெண்களுக்கு சப்போர்ட் செய்வதில்லையே என்ற கேள்விக்கு, சில பொண்ணுங்க தான் புரிஞ்சுக்காம பேசுறாங்க என்று சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளினியாக கலக்கி கொண்டிருக்கும் பிரியங்கா பற்றி ஆரம்பத்தில் இருந்தே பாசிடிவ் ஆன கமெண்ட்கள் வந்து கொண்டிருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போனாலே பலரும் நெகட்டிவ் இமேஜ் பெற்று விடுவார்கள் என்று இவருடைய ரசிகர்கள் எல்லாம் இவரை பயமுறுத்திய பிறக்கும் இவர் தைரியமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

மணிமேகலை பதிவு
அப்போது கூட மக்கள் மனதில் பாசிட்டிவ் பெற்று தான் வெளியே வந்தார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை திடீரென வெளியேறியதற்கு காரணம் பிரியங்கா என்பது போன்று ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதில் இந்த சீசனில் போட்டியாளராக வந்த தொகுப்பாளினி ஒருவர் என்னை வேலை செய்யவிடாமல் தடுக்கிறார்.
மணிமேகலையின் வெளியேற்றம்
அவரால் நான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறேன் என்று பிரியங்கா பெயரை குறிப்பிடாமல் மணிமேகலை பதிவு வெளியிட்டிருந்தார். அப்போது இணையத்தில் அதிகமானோர் பிரியங்காவை திட்ட தொடங்கி விட்டனர். ஆனால் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் பிரியங்காவிற்கு ஆதரவாக வீடியோக்கள் வெளியிட்டு வந்தனர்.
பிரியங்கா- மணிமேகலை மோதல்
அப்போது மணிமேகலையின் ரசிகர்கள் மற்றும் பிரியங்காவின் ரசிகர்கள் கருத்து மோதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில் பிரியங்கா தன்னை பற்றி மணிமேகலை போட்ட போஸ்ட்க்கு எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. தன்னுடைய வழக்கமான வேலையை செய்து கொண்டிருந்தார்.
அவார்டு ஃபங்க்ஷன்
இப்போது மணிமேகலை ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளனியாக மாறிவிட்டார். பிரியங்கா வழக்கம் போல விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருக்கிறார். இந்த நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பிரியங்காவிற்கு அவார்ட் ஃபங்க்ஷன் நடைபெற்றது.

குழந்தை கேட்ட கேள்வி
அப்போது ஒரு குழந்தை பிரியங்காவிடம் சில கேள்விகளை கேட்டு இருந்தது. அதில் "முன்னாடி எல்லாம் ஆண்கள் தான் பெண்களுக்கு சப்போர்ட் செய்ய மாட்டார்கள் என்று சொல்லுவாங்க. ஆனால் இப்போ உள்ள சூழலில் பெண்களே பெண்களுக்கு சப்போர்ட் செய்ய மாட்டேன் என்கிறார்களே அது பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?" என்று கேட்டிருக்கிறார்.
பிரியங்காவின் விளக்கம்
அதற்கு பிரியங்கா சிறிது நேரம் யோசித்து, "அப்படி எல்லாம் சொல்ல முடியாது. சில பெண்கள் மட்டும் தான் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்கள் மனதில் நினைப்பதுதான் சரி என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எல்லா பெண்களும் அப்படி கிடையாது. இந்த கூட்டத்தில் கூட இத்தனை பெண்கள் நமக்கு சப்போர்ட் செய்து வந்திருக்கிறார்கள் என்றால் பெண்ணுக்கு பெண் ஆதரவாக இருப்பதால் தானே வந்திருக்கிறார்கள்.
அதுபோல நான் ஒரு பெண் என்னிடம் கேள்வி கேட்கும் நீங்களும் ஒரு பெண். இதில் இருந்தே பார்த்துக் கொள்ளுங்கள் பெண்களுக்கு பெண்கள் சப்போட்டாக தான் இருக்கிறார்கள். ஒரு சிலர் மட்டும்தான் புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்கிறார்கள்" என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.
இந்த வீடியோவிற்கு கீழே அதிகமான ரசிகர்கள் பிரியங்கா மணிமேகலையை குறிப்பிட்டு தான் இப்படி பதில் கொடுத்து இருக்கிறார் என்று கமெண்ட் கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும் இது குறித்து பிரியங்கா விளக்கம் கொடுத்தால் தான் உண்மை என்ன என்பது தெரிய வரும்.












Click it and Unblock the Notifications