விஜய் டிவியில் முடிவுக்கு வரும் முக்கிய நிகழ்ச்சி.. புது ஷோவில் ரீ என்ட்ரி கொடுக்கும் kpy பாலா
சென்னை: விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய கேபிஒய் பாலா பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் டிவியில் புது நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அவரோடு நடிகர் சாந்தனுவின் மனைவியான கீர்த்தி தொகுப்பாளினியாக எண்ட்ரியாக போகிறாராம். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒரு சில பிரபலங்கள் தான் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் கேபிஒய் பாலாவும் ஒருவர். காரைக்காலில் சின்ன கிராமத்தில் பிறந்த பாலா கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலம் அடைந்து விட்டார்.

அதிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு டைமிங் காமெடி செய்து பலருடைய மனதை கவர்ந்து விட்டார். இவருடைய நிஜ பெயரான "பாலன் ஆகாஷ்" என்பது இப்ப வரைக்கும் பலருக்கும் தெரியாது. எல்லோருமே இவரை கே பி ஒய் பாலா என்று தான் செல்லமாக அழைத்து வருகிறார்கள். அதிலும் பாலா கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் வெட்டுக்கிளி பாலாவாக பலரை ரசிக்க வைத்த இவர் இப்போது திரைப்படங்களிலும் முன்னணி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதோடு தனக்கு கிடைக்கும் வருமானத்தில் பலருக்கு உதவிகளை செய்து கொண்டிருக்கும் பாலா இப்போது இணையத்தில் அதிகமாக பிரபலமாகி விட்டார். இந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் டிவியில் புதிய நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க இருக்கிறார். அந்த ரியாலிட்டி ஷோ "டிக் டிக் டிக் "என்ற பெயரிடப்பட்டு விரைவில் தொடங்கப்பட இருக்கிறது என்று கூறப்படுகிறது.
அதோடு பாலாவுடன் அந்த நிகழ்ச்சியை தொகுப்பாளினி கீர்த்தி தொகுத்து வழங்க இருக்கிறார். கீகீ என்று செல்லமாக அழைக்கப்படும் கீர்த்தி ஜீ தமிழில் பல வருடங்களாக தொகுப்பாளராக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் கலைஞர் டிவியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய கீகீ இப்போது ஜீ தமிழில் தான் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் இவர் விஜய் டிவியில் என்ட்ரி கொடுப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிகழ்ச்சி இன்னும் ஒரு சில வாரங்களில் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது. அதற்கான அதிகாரப்பூர்வமான ப்ரோமோ இன்னும் வெளியாகவில்லை. அதே நேரத்தில் இன்னும் சில நாட்களில் இதற்கான ப்ரோமோ வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications