மகாநதி சீரியல் குமரன் யார் தெரியுமா? முதல் சீரியல் வாய்ப்புக்கு காரணம் இதுதானாம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் குமரன் கேரக்டரில் நடிக்கும் நடிகரின் பெயர் கம்ருதீன் தானாம்.
நடிகர் கம்ருதீன் முதல் முறையாக மகாநதி சீரியல் மூலமாகத்தான் சீரியலில் அறிமுகம் ஆகி இருக்கிறார்.
இந்த நிலையில் மகாநதி குமரன் பற்றிய பல தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியல் தற்போது ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்கள் மத்தியில் நன்றாக பிரபலம் அடைந்து விட்டனர். இந்த சீரியலில் குமரன் கேரக்டரில் நடிக்கும் கம்ருதீன் முதல் சீரியல் இதுதானாம்.
முதல் சீரியலிலே இந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் என்று கம்ருதீன் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார். அந்த அளவிற்கு தற்போது குமரன் பெயரில் அவருக்கு அதிகமான வரவேற்பு கிடைத்திருக்கிறது. பார்ப்பதற்கு அமைதியின் சொரூபமாகவும் கங்காவின் மீது அதிகப்படியான பாசத்தை வைத்திருக்கும் குமரன் தற்போது பல பெண்களின் கிரஷ் ஆக இருந்து வருகிறார்.
நடிகர் கம்ருதீனின் சொந்த ஊர் சென்னை தானாம். இவர் பள்ளி படிப்பு எல்லாமே சென்னையில் தான் படித்து இருக்கிறார். இவருக்கு காலேஜ் படிக்கும் போது இருந்தே மாடலிங் துறையில் அதிகமான ஆர்வத்தில் இருந்திருக்கிறார். அப்போது இருந்து பல மாடல்களோடு சேர்ந்து மாடலிங் செய்திருக்கிறாராம். அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து பல விளம்பர படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.

அதைத்தொடர்ந்து இவர் மேகமோ இவள், டெக்கோர்ட் ,கல்யாணம் என பல ஷார்ட் பிலிம்களிலும் வெப் சீரிஸ்களிலும் இவர் நடித்துக் கொண்டு இருந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் பல வீடியோ ஆல்பங்களிலும் நடித்திருக்கிறார். சின்னத்திரை நடிகையான நட்சத்திரா உடன் ஒரு மேட்ரிமோனியல் விளம்பரத்தில் கூட கம்ருதீன் சேர்ந்து நடித்திருக்கிறாராம். அதோடு கம்ருதீன் ஒரு ஹோண்டா கார் ஒன்றையும் வைத்திருக்கிறாராம்.
இந்த நிலையில் முதல் முறையாக பிரவீன் பென்னட் இக்கத்தில் மகாநதி சீரியலில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது பெரும் அதிர்ஷ்டம் என்று இவர் கூறியிருக்கிறார். அதோடு தற்போது இவருக்க அதிகமான ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஃபேன்ஸ் பேஜ் தொடங்கி கொண்டிருக்கின்றனர். இவருடைய நடிப்பையும் பலர் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
