விஜய் டிவி கோபிநாத் மீது திமுக முத்திரை? எப்படி பார்த்தாலும் இது ஆபத்து.. பாஜகவின் தலையீடு: பிரபலம்
சென்னை: சிபிஎஸ்சிஇ படித்தவர்கள் இந்தியில் எழுத படிக்கதெரிகிறதே தவிர, இந்தியில் புலமை பெற்றவர்களாக யாரும் இல்லை. மொத்தமாக பாடத்திட்டத்தை இந்தியில் மாற்றிவிட்டால் அதன்மூலம் யார் பலனடைவார்கள்? இந்தி மொழி பேசுவபர்கள் கூட பலனடைவதில்லை.. அதில் உயர் சாதியினர் மட்டுமே பலனடைகிறார்கள்" என்று மூத்த பத்திரிகையாளர் மதன் அறிவழகன் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
AramNaadu யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் மதன் அறிவழகன் தந்துள்ள பேட்டியில் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை விரிவாகவே தெரிவித்துள்ளார்.. அதன் சுருக்கம்தான் இது

"விஜய் டிவியின் ஸ்பெஷல் என்னவென்றால், பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் பார்க்கக்கூடிய சேனலாக உள்ளது.. பொழுதுபோக்கு சேனலாக மட்டுமல்லாமல், அரசியலாகவும், சமூகம் சார்ந்தும் சில விஷயங்களை புரிந்து கொள்வதற்கு, கற்றுக் கொள்வதற்கு, நம்மை நாமே மறுபரிசீலனை செய்வதற்கு நீயா நானா நிகழ்ச்சி உதவியிருக்கிறது..
கண்களை திறந்த விஜய் டிவி
ஜோதிடம் குறித்தும், மூடநம்பிக்கை, கடவுள் நம்பிக்கை, என அனைத்து விஷயங்களை பற்றியும் நீயா நானா ஷோவில் பேசப்பட்டுள்ளது.. அது பலரது கண்களையும் திறந்துள்ளது.
இந்திதான் பாஜகவின் நோக்கம், அதை மறைமுகமாக திணிக்க மும்மொழி கொள்கையை கொண்டு வருகிறார்கள்.. கடந்த அதிமுக ஆட்சியில் இதற்கு பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இன்றைக்கு அதை திணிக்கும்போது, அதற்கு எதிராக தமிழக அரசு நிற்கிறது. இது விவாதமாக வரும்போது, பிரச்சனையாக மாறுகிறது.
மும்மொழி கொள்கை விவாதம்
துக்ளக் சத்யா என்பவர் தன்னுடைய பதிவில், 'எப்படி பார்த்தாலும் மும்மொழி கொள்கை டேஞ்சர்.. மும்மொழி கொள்கை பற்றின விவாதம் நடந்து கொண்டிருக்கும்போது, அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடியாது.. ஏனென்றால், அதிமுகவும் பாஜகவுக்கு எதிராகத்தான் இந்த விஷயத்தில் பேசியாக வேண்டும்.
அப்படி எதிராக பேசிவிட்டு, கூட்டணி குறித்து பேசவும் முடியாது. அதனால் கூட்டணி பேச்சுவார்த்தை முடித்துவிட்டு, அதற்கு பிறகு 6 மாதம் கழித்து, இந்த மும்மொழி கொள்கை விவகாரத்தை பார்த்து கொள்ளலாம் என்று எடப்பாடி சொல்லிவிட்டார். எனவே, இது பாஜகவுக்கு மன உளைச்சலை தந்துள்ளது. எனவே இந்த பேச்சை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பதுதான் குறியாக உள்ளது.
சமூகம், அரசியல் பின்னணி
விஜய் டிவியை பொறுத்தவரை, ஒளிபரப்புவதற்கான அனுமதியை மத்திய அரசுதான் தரவேண்டும்.. யார் யார் என்னென்ன சமூகம், யார் யார் என்னென்ன அரசியல் பின்னணி கொண்டவர்கள் என்பதை அன்று நியூஸ்7 சேனலில் உட்கார்ந்து விசாரித்தார்கள்.. அதேபோல "யார் யார் என்னென்ன கொள்கை கொண்டவர்கள் என உள்ளேயே தோழர்கள் பேசிக் கொள்கிறார்கள்" என்று மாரிதாஸ் நியூஸ் 18 பற்றி வீடியோ ஒன்றையே பதிவிட்டிருந்தார்.
நாங்கள் எங்களுக்கான வேலையை செய்து கொண்டிருக்கிறோம். அதையும் மீறி இங்கு வலுக்கட்டாயமாக ஒன்றை திணிக்கும்போதுதான், அதை எதிர்க்க வேண்டியிருக்கிறது. இதற்காக 100 வருட கால போராட்டம் இங்கு நடத்தப்பட்டிருக்கிறது.. அதற்காகவே பயிற்றுவிக்கப்பட்டுள்ளார்கள். அதன் பலன்களையும் நாங்கள் இங்கு அனுபவித்து வந்திருக்கிறோம்.
எனினும், பாசிஸ்ட்டுகள் கருத்துரிமையை விரும்ப மாட்டார்கள்.. பெரும்பான்மை மக்களின் கருத்தாக அவர்களது கருத்து என்றுமே இருந்ததில்லை..
உயர்சாதி பின்னணி
மத்திய அரசு பணிகளில் பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு வேலை இல்லை என்றே ஆகிவிட்டது. முழுக்க முழுக்க உயர்சாதி பின்னணி கொண்டவர்களாக பணியில் இருக்கிறார்கள்.. பார்ப்பனர் அல்லாத இதர சமூகத்தினருக்கு வாய்ப்பே இல்லாதபோது, இந்தி படிப்பதால் என்ன பலன்? இந்தி பேசும் மாநிலங்களில், தமிழகத்தில் உடலுழைப்பு சம்பந்தமான வேலைகளை செய்கிறார்கள். பானிபூரி வாங்குவதற்காக இந்தி கற்றுக் கொள்ள வேண்டுமா? இந்திக்கு ஆதரவாக வேறு என்ன பேச முடிகிறது?
இந்தி படித்தால் அமெரிக்காவில் வேலை, ஐடி கம்பெனியில் வேலை கிடைப்பதாக சாதகமாக சொல்ல முடியவில்லையே? மும்மொழி கொள்கை சொல்கிற எந்த மாநிலத்திலுமே மும்மொழி கொள்கை இல்லை.. ஒரே மொழி இந்திதான்.. பீகாரில் 80 சதவீதம் இந்தி பேசி கொண்டிருந்தவர்கள், இன்று 99 சதவீதம் இந்திக்கு ஒருமொழியாக மாறிவிட்டார்கள்.. ஒருமொழிக்கு மாறிவிட்டதால், 2வது மொழியான சொந்த தாய்மொழிக்கு வழியில்லை..
சிபிஎஸ்சிஇ படித்தவர்கள் இந்தியில் எழுத படிக்க தெரிகிறதே தவிர, இந்தியில் புலமை பெற்றவர்களாக யாரும் இல்லை. மொத்தமாக பாடத்திட்டத்தை இந்தியில் மாற்றிவிட்டால் அதன்மூலம் யார் பலனடைவார்கள்? இந்தி மொழி பேசுவபர்கள் கூட பலனடைவதில்லை.. அதில் உயர் சாதியினர் மட்டுமே பலனடைகிறார்கள்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
கோபிநாத்துக்கு அழுத்தம்
Kingwoods சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் தந்திருந்த பேட்டியில், கோபிநாத்துக்கும் அதே அழுத்தம் தரப்பட்டுள்ளது. விஜய் டிவியில் கோபிநாத் இருக்கும்வரை, திமுகவுக்கு ஆதரவாகத்தான் நிகழ்ச்சியை நடத்துவார் என்று பாஜக நினைக்கிறது. ஆகமொத்தம் திமுக நபராகவே கோபிநாத் முத்திரை குத்தப்பட்டுள்ளார்.
ஆனால் உண்மை அதுவல்ல. இங்கே இயற்கையாகவே மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு இருக்கிறது. மும்மொழி கொள்கைக்கு ஆதரவு அதிகமா? இருமொழி கொள்கைக்கு ஆதரவு அதிகமா? என்று பாஜகவே ஒரு சர்வே எடுத்து பார்க்கட்டுமே?
டிவியின் பாலிசி முக்கியம்
விஜய் டிவியின் முகமாக கோபிநாத் விளங்கி வருகிறார் என்றாலும், நிறுவனத்தை பொறுத்தவரை பாலிசி மிகவும் முக்கியம். பாஜக சொல்வதை தட்டவும் முடியாது. பச்சமுத்துவுக்கு அப்படியொரு நிலைமை அன்று வந்ததால்தானே குணசேகரனை வெளியேற்ற வேண்டியிருந்தது.
அன்னபூரணா ஓட்டல் நிறுவனர், நிர்மலா சீதாராமன் காலில் விழுந்தாரே? ஒரு பெண்ணின் காலில், மிகப்பெரிய தொழிலதிபர் விழவைக்கப்பட்டார். அதேபோலத்தான், கோபிநாத்தும், அண்ணாமலையின் காலில் விழுந்தால் மன்னிக்கப்படுவார்.. ரட்சிக்கப்படுவார். அல்லது வேறு தொலைக்காட்சியை கோபிநாத் தேடி செல்ல வேண்டிவரும்" என்று கூறியிருந்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications