என்னாது.. வேலைக்கார பெண்ணுக்கு தனி டம்ளரா? டீச்சருக்கு பாடம் எடுத்த கோபிநாத்.. விளாசல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமுதாயத்தில் இன்னும் எவ்வளவு ஏற்றத்தாழ்வு இருக்கிறது என்பதை இன்றைய நீயா நானா நிகழ்ச்சி பலருக்கும் வெட்ட வெளிச்சமாகி இருக்கின்றது.

திரைப்படங்களில் இதுவரைக்கும் ஏழை பணக்காரர்கள் ஏற்றத்தாழ்வுகளை பார்த்து வந்தவர்களுக்கு இப்போ தற்போதைய நீயா நானாவின் ப்ரோமோ பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.

வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களை வீட்டின் உரிமையாளர்கள் நடத்துவதை பார்த்ததும் பலர் உங்களுக்கு எல்லாம் எத்தனை பெரியாரும், அம்பேத்கரும் வந்தாலும் திருத்தவே முடியாதா என்று வேதனையோடு பதிவிட்டு வருகிறார்கள்.

மாறாத ஏற்றத்தாழ்வுகள்

மாறாத ஏற்றத்தாழ்வுகள்

பொதுவாகவே சமுதாயத்தில் அடித்தட்டித்தில் இருப்பவர்கள் எப்போதும் அப்படியே தான் இருக்க வேண்டும் என்றும் மேல் மட்டத்தில் இருப்பவர்கள் அடிமட்டத்தில் இருப்பவர்களை மனிதர்களாக கூட நினைப்பது இல்லை என்று பல நேரங்களில் பலரும் நினைவுபடுத்தி வருகிறார்கள். அதை தற்போது வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் விதண்டாவாதங்கள் அடிக்கடி வெளிச்சத்துக்கு வரும் அதுபோல தற்போது வீட்டு வேலை செய்வதற்காக பணியாளர்களை பணி அமர்த்திய குடும்ப தலைவிகள் சிலர் வீட்டில் பணி செய்பவர்கள்களை நடத்தும் விதமும் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

அதிகமாக பகிரப்படும் ப்ரோமோ

அதிகமாக பகிரப்படும் ப்ரோமோ

ஒரு சிலர் தங்களின் வசம் பணம் இருந்தாலே தாங்கள் கடவுளுக்கு சமம் என்று நினைத்து விடுவார்கள் போல. அதனால் தான் அந்த பணத்திற்காக தங்களிடம் வேலைக்கு வருபவர்களை எப்போதும் அடிமைகள் என்று நடத்தி வருகிறார்கள். இது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தான் நடந்தது என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு தற்போதும் கூட அதே நிலைமையில் தான் நாம் இருந்து கொண்டிருக்கிறோம் என்பதை பலரும் தங்களுடைய வாயிலிருந்து உளறி இருக்கிறார்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் கோபிநாத் நடுவராக இருந்து இருதரப்பு நியாயங்களையும் பேசி வருகிறார். இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ சமூக வலைத்தளத்தில் பலராலும் பகிரப்பட்டு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இது சரியான சாக்குபோக்கு

இது சரியான சாக்குபோக்கு

படிக்காத பாமரர்களாக மக்கள் இருந்த காலகட்டங்களில் தான் இந்த வேற்றுமை, ஏற்றத்தாழ்வுகள் எல்லாம் இருந்தது. ஆனால் தற்போது படித்து பலரும் பலவித பொறுப்புகளில் இருந்தாலும் இன்னும் அதே கண்மூடித்தனமான மூடநம்பிக்கையில் தான் மூழ்கி இருக்கின்றனர். அதற்காக பலரும் சாக்குப் போக்கு சொல்லி தாங்கள் செய்யும் கேவலமான செயலை நியாயப்படுத்தி வருகிறார்கள். அதுபோலத்தான் தற்போது நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு பெண் கோபிநாத் இடம் பேசி மாட்டியிருக்கிறார். தங்கள் வீட்டில் வேலை பார்க்கும் பெண்களுக்கு அவர்கள் வீட்டில் தனியாக டம்ளர் சாப்பாடு தட்டு கொடுத்து தான் சாப்பிட சொல்வார்களாம். இதற்கு அந்தப் பெண் நான் இதை மாற்ற வேண்டும் என்று நினைத்தாலும் எங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் எங்களை திட்டுவார்கள். அதற்காகத்தான் நாங்கள் இந்த முறையை பின்பற்றி வருகிறோம் என்று தன் மீது தப்பில்லை என மைக்கை பிடித்து பேசி இருக்கிறார்.

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

அழகாக சிரித்தபடியே அந்தப் பெண் தன் மீது தப்பில்லை வீட்டில் இருக்கும் பெரியோருக்காக தான் இப்படி எல்லாம் செய்கிறேன் என்று கூறியதை கேட்ட கோபிநாத், உங்கள் பாட்டி இதற்குத்தான் திட்டுவாரா என்று கேட்டதும் அதற்கு அந்தப் பெண் ஆமாம் என்று கூறியிருக்கிறார். அதற்கு நீங்கள் உங்கள் பாட்டி சொல்பேச்சை கேட்டு நடப்பவரா? ?என்றதும் ஆமாம் என்று அந்த பெண் கூறியதும், அப்போ உங்கள் கையில் நீங்கள் டாட்டூ போட்டு இருக்கீங்களே அதற்கு எல்லாம் உங்க பாட்டி திட்ட மாட்டாங்களா.!!??என்று கேட்க அதற்கு அவர் மழுப்பலாக சிரித்திருக்கிறார். திட்டுவாங்க என்று தன்னுடைய தப்பை ஒத்துக் கொள்ளவும் செய்திருக்கிறார். அடுத்து கோபிநாத் நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள் என்று அந்தப் பெண்ணிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அந்தப் பெண் தான் எம்ஏ இங்கிலீஷ் லிட்ரேச்சர். தான் ஒரு டீச்சர் என்று பெருமையாக பேசி இருக்கிறார். இதை கோபிநாத் மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி தான்.

ரசிகர்களின் கருத்து

ரசிகர்களின் கருத்து

சமுதாயத்தில் என்னதான் படித்து பொறுப்பான வேலையில் இருந்தாலும் இந்த மாதிரி செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று இந்த ப்ரோமோ பார்த்த ரசிகர்கள் பலர் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். ஏற்கனவே தற்போது காலேஜில் வேலை பார்க்கும் ஒரு ப்ரோபோசர் சாதியை குறித்து பேசியது போல தான் இந்த படித்தவர்களும் வீட்டில் வேலை செய்பவர்களை அடிமைகளாகவும், குறைவாகவும் பார்த்து வருகிறார்கள் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+