மகள் மட்டுமல்ல மனைவியும் எனக்கு தெய்வம் தான்... உருக்கமாக கூறிய நீயா நானா சூப்பர் அப்பா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியின் மூலமாக சூப்பர் அப்பா எனும் பட்டத்தை பெற்ற சீனி ராஜா தற்போது தன்னுடைய மனைவியைப் பற்றி கூறியுள்ளார்.

தான் படிக்கவில்லை அதனால் அடுத்தவர்களிடம் சரியாக பேசத் தெரியாது என்று தயங்கி தயங்கி பேசிய சீனி ராஜா தற்போது தனது மனதில் இருக்கும் காதலை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

நீயா நானா நிகழ்ச்சிக்கு பிறகு தனது மனைவியை பலர் கலாய்த்து வருவதை பார்த்து வருந்தி சூப்பர் அப்பா மட்டும் அல்ல நான் சூப்பர் கணவர் என்று சீனி ராஜா நிரூபித்துள்ளார்.

விஜய் டிவி நிகழ்ச்சி

விஜய் டிவி நிகழ்ச்சி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல ரியாலிட்டி ஷோக்கலில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் ஒரு சில நேரங்களில் அவர்கள் எதிர்பார்க்காத வகையில் பிரபலம் அடைந்து விடுகிறார்கள். அந்த வகையில் தற்போது நீயா நானா நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமடைந்திருக்கும் சூப்பர் அப்பா சமூக வலைத்தளங்களில் எங்கும் மிளிர்ந்து வருகிறார். எதார்த்தமான பேச்சால் அனைவருடைய மனதை கவர்ந்த சூப்பர் அப்பாவின் நிஜ பெயர் சீனி ராஜாவாம். தூத்துக்குடியின் அருகில்தான் இவருக்கு சொந்த ஊர் இருக்கிறதாம். சென்னையில் 20 வருடங்களுக்கு முன்பு வந்து குடி பெயர்ந்து இருக்கிறாராம்.

அரேஞ்ச் மேரேஜ் தான்

அரேஞ்ச் மேரேஜ் தான்

ஆரம்பத்தில் மளிகை கடையில் வேலை செய்த சீனி ராஜா பின்பு சொந்தமாக முட்டை கடை நடத்தி பிசினஸ் செய்திருக்கிறார். ஆனால் இவருக்கு சரியாக படிக்க தெரியாததால் லாப நட்டம் பார்க்க தெரியாமல் அந்த தொழிலில் வெற்றி பெற முடியவில்லையாம். இவருடைய திருமணம் வீட்டில் பார்த்து முடிவு செய்ததாம். ஆனாலும் அவருடைய மனைவி இவரிடம் நன்றாக அன்பாக இருந்து வருவதால் இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் என்று தான் பார்ப்பவர்கள் எல்லாம் கூறி வருகிறார்கள்.

மனைவியின் பெருமை

மனைவியின் பெருமை

நீயா நானா நிகழ்ச்சியின் மூலமாக தன்னுடைய மகளின் மீது தனக்கு இருக்கும் பாசத்தை வெளிப்படுத்திய சீணி ராஜா இந்த நிகழ்ச்சியில் தனது மனைவியின் மீது எனக்கு இருக்கும் பாசத்தை நிரூபிக்க முடியாமல் ஆகிவிட்டது என்று உருக்கமாக கூறியிருக்கிறார். எனக்கு மகள் மட்டுமல்ல என்னுடைய மனைவியும் தெய்வம் தான் என்று கூறியிருக்கிறார். தனக்கு உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் இப்போதைய நேரத்தில் கூட வாரம் இவருக்காக ஐந்தாயிரம் ரூபாய் செலவு செய்து வருகிறாராம். மருத்துவ செலவுக்காக சீனி ராஜாவுக்கு மாதம் 25 ஆயிரம் ரூபாய் தன்னுடைய மனைவி செலவு செய்து வருவதாகவும் கூறி இருக்கிறார்.

சூப்பர் கணவர்

சூப்பர் கணவர்

வீட்டில் எப்போதும் ஜாலியாக பேசுவது போல தான் இந்த நிகழ்ச்சியிலும் என்னுடைய மனைவி என்னை கிண்டல் செய்து பேசி விட்டார். ஆனால் எப்போதும் என்னுடைய மனைவி என்னை மட்டம் தட்டி குறை கூறவில்லை. ஜாலியாக பேசியதை வைத்து பலரும் அவரை தப்பாக நினைத்து கலாய்த்து வருவது பார்க்க தான் வேதனையாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார். தனக்கு மகள் எவ்வளவு முக்கியமோ அது போல தன்னுடைய மனைவியும் முக்கியம் என்று மனைவியை விட்டுக் கொடுக்காமல் சீனி ராஜா பேசியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இவர் சூப்பர் அப்பா மட்டுமல்ல சூப்பர் கணவரும் கூட இவருடைய மனைவி கொடுத்து வைத்தவர் தான் என்று இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+