பாகற்காய் ஜூஸ் குடிக்கறாங்க...தலைகீழா நிக்கறாங்க... சேலஞ்சாமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவிட் 19 தொற்று லாக்டவுன் காலத்துல சின்னத்திரை, சினிமா பிரபலங்கள் சமூக வலைத் தளங்களில் சேலஞ்ச் செய்துக்கறது அங்கே சுத்தி இங்கே சுத்தின்னு ஒரு வளையமா போயிகிட்டு இருக்கு.

ஆரம்பத்தில் டல்கோனா காபி சேலஞ்சில் ஆரம்பிச்ச இந்த விஷயம் இப்போ விஜய் டிவி பிரபலங்களையும் விட்டுவைக்கலீங்க. மணிமேகலை பாகற்காயை ஜூஸ் போட்டு வச்சுக்கிட்டு சேலஞ்ச் பண்றார்...

வீட்டில் தேமேன்னு இருக்கும் புகழுக்கு, மணிமேகலை ஒரு சேலஞ்ச் கொடுக்கிறார். இது போதாதுன்னு விஜய் டிவி தீனா ஒரு சேலஞ்சு செய்து அதை இவர் வேறு ஒரு பிரபலத்துக்கு அனுப்பறார்.

 ஆஹா ஜூஸ் ஐயே ஜூஸ்

ஆஹா ஜூஸ் ஐயே ஜூஸ்

ஆஹா ஜூஸ்னு சொல்லிகிட்டே பாகற்காயை கட் செய்து மிக்சி கப்பில் போட்டு ஒரு அடிஅடித்து ஆஹா சூப்பர் ஜூஸ்... ஜூஸ் கடையில் போடுவது மாதிரியே இந்த ஜூஸ் இருக்கேன்னு ஆஹா ஓஹோன்னு புகழ்ந்தார். எடுத்து வாயில் வச்சவர்...ஐயே ஜூஸ்னு முகத்தை சுளித்தார்.

 புகழுக்கு சேலஞ்சு

புகழுக்கு சேலஞ்சு

பாகற்காய் ஜூசை குடிச்சுட்டு சும்மா இருக்காம, புகழ் தலைகீழா நின்னு டி ஷர்டை போடணும்னு சேலஞ்ச் விட்டார். இதை கேட்டு புகழ் தலை கீழா நின்னு நின்னு டி ஷர்டை போட முயற்சிக்க...போடவே முடியலை. இப்படி தீனா ஒரு சேலஞ்சு செய்தார். அதாவது படுத்து படுத்து முட்டியை மடக்கமா எழுந்துக்கறது...

 ஈரமான ரோஜாவே

ஈரமான ரோஜாவே

ஈரமான ரோஜாவே சீரியலில் மலர் வெற்றிக்கு ஐ லவ் யூ சொல்லி, சீக்கிரம் வந்துருங்க மாமான்னு சொல்றாங்க, வெற்றியும் சரி மலர்னு சொல்லிகிட்டே இருக்க.. இருவரும் இப்படியே போனில் காதல் பண்றாங்க. விஜய் டிவியில் இவங்க ரெண்டு பேரோட காதலை இவங்க இப்போ சொல்லிக்குவாங்களா, அப்போ சொல்லிக்குவாங்களான்னே சீரியலை ஒரு வருஷம் இழுத்தடிச்சாங்க.

 பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா


பாரதி கண்ணம்மா சீரியலை மக்கள் மறந்து இருக்க மாட்டாங்க...அப்படியே மறந்து இருந்தாலும், நாங்க இருக்கோம்னு சொல்ற மாதிரி, பாரதியும், கண்ணம்மாவும் போனில் பேசிக்கறாங்க. அப்போ கூட் கொரோனா பத்தி பேசறான் டாக்டர் பாரதி. பாரு கண்ணம்மா...உலகின் கடைசி கொரோனா நோயாளியும், குணமாகி வீட்டுக்கு போனார்னு செய்தி சீக்கிரம் வரும்னு சொல்றான். கண்ணம்மா சிரிக்கிறாள்.

இதெல்லாம் சேர்ந்த கலவைதான் விஜய் டிவியின் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது நிகழ்ச்சி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+