பிக் பாஸ்க்கு பிறகு அன்ஷிதாவுக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு.. மேடையில் சொன்ன அந்த விஷயம் இதுதானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அன்ஷிதாவிற்கு விஜய் டிவி மற்றொரு வாய்ப்பு கொடுத்திருக்கிறது. ஏற்கனவே இது குறித்து தான் விஜய் சேதுபதியிடம் பேசி இருந்தார். அது இப்போது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான செல்லம்மா சீரியலில் கதாநாயகியாக நடித்து சின்னத்திரை ரசிகர்களிடம் அன்ஷிதா பிரபலமாகி இருந்தார். அந்த சீரியலில் நடிகர் அர்னவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த சீரியலில் இவர்கள் இருவரும் நடிக்கும்போது காதலிப்பதாக பிரச்சனைகளும் இருந்தது.

அர்னவ் ஏற்கனவே திருமணம் ஆகி இருந்த நிலையில் அவருடைய மனைவியான நடிகை திவ்யா ஸ்ரீதர் கர்ப்பமாக இருந்தபோது அன்ஷிதாவோடு அர்னவ் பழகுகிறார் என்ற காரணத்தை சொல்லி குடும்பத்திற்குள் பிரச்சனை ஏற்பட்டதால் இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் செல்லமா சீரியல் முடிவடைந்ததும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அன்ஷிதா மற்றும் இருவரும் என்ட்ரி கொடுத்திருந்தனர். ஆனால் அர்னவ் இரண்டாவது வாரத்திலேயே எலிமினேட் ஆகி வெளியே வந்தார். அதற்குப் பிறகு அன்ஷிதா பிக் பாஸ் வீட்டில் பல வாரங்கள் இருந்தார். நிகழ்ச்சி முடிவடைவதற்கு சில வாரங்களுக்கு முன்புதான் வெளியே வந்தார்.

அதே நேரத்தில் விஷாலோடு பழகுவதை பார்த்து அனுஷ்காவை விஷால் காதலிக்கிறார் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது. அதை அன்ஷிதா மறுத்திருந்தார். இந்த நிலையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலேவில் விஜய் சேதுபதி எல்லோரிடமும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எல்லோரும் எங்கே போனீங்க? என்ன செஞ்சீங்க என்று கேள்வி கேட்டிருந்தார்.
அப்போது அன்ஷிதா நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வருவதற்கு முன்பு ஒரு நபர் என்னை உடைத்து சின்னாபின்னமாகி தான் உள்ளே அனுப்பினார். மனதளவில் நான் உடைந்து போய் இருந்தேன். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது மூன்றாவது வாரத்தில் இருந்து நான் என்னுடைய விளையாட்டை புரிந்து கொண்டேன். என் மனதையும் மாற்றிக் கொண்டேன்.

அதற்கு பிறகு பிக் பாஸ் முடிந்ததும் நான் வெளியே வந்து அந்த நபரிடம் இனி என்னுடைய வாழ்க்கைக்கு தேவை இல்லை என்று சொல்லிவிட்டேன். அதற்குப் பிறகு வீட்டுக்கு போகவில்லை விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சி கிடைத்திருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் நான் பண்ணிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஒரு ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து ஜோடி ஆர் யூ ரெடி என்ற டான்ஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசன் ஒளிபரப்பாக இருக்கிறது. அதில் போட்டியாளராக அன்ஷிதா களம் இறங்கி இருக்கிறார். ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சி வரும் ஞாயிறு முதல் ஆரம்பமாகி இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியை ரியோ மற்றும் ஏஞ்சலின் தொகுத்து வழங்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் சாண்டி மாஸ்டர், மீனா மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். ஆனால் இப்போதைய இரண்டாவது சீசனில் மீனாவுக்கு பதிலாக நடிகை ரம்பா நடுவராக களம் இறங்கி இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனக்கென ரசிகர்களை உருவாக்கிய அன்ஷிதா இப்போது ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் டான்ஸராக களம் இறங்கி இருக்கும் நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications