Bigg Boss 8 promo: தொடக்க தேதி அறிவிப்பு.. ஆனால் ஏன் இந்த சொதப்பல்? இதை மாற்றி இருக்கலாமே!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி வரும் அக்டோபர் ஆறாம் தேதி தொடங்க இருக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் ப்ரோமோவில் அரைச்ச மாவையே அரைத்து இருக்கிறார்கள். அது பற்றி பார்க்கலாம்.
விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி வரும் வாரத்தோடு முடிவுக்கு வர இருக்கும் நிலையில் அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி தொடக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே ஏழு சீசன்கள் முடிவுக்கு வந்த நிலையில் எட்டாது சீசன் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். காரணம் ஏழு சீசன்களாக தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன் இந்த எட்டாவது சீசனில் இருந்து விலகி இருக்கிறார்.

அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதால் அவருடைய செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக ரசிகர்கள் ஆர்வத்தில் இருக்கின்றனர். இது குறித்த ப்ரோமோக்கள் வெளியாகி இருக்கிறது அந்த வரிசையில் இன்று பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி வரும் அக்டோபர் ஆறாம் தேதி சனிக்கிழமை தொடங்க இருக்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது.
இதற்கு முந்தைய சீசன்களில் எல்லாம் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் போது நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பு ஒவ்வொரு வாரமும் புது புது ப்ரோமோ வெளியாகும். ஆனால் இந்த சீசனில்
முதலில் தொகுப்பாளர் விஜய் சேதுபதி தான் என்று அறிவிக்கும் வகையில் ஒரு ப்ரோமோ வெளியானது. அதைத் தொடர்ந்து ஒரு ப்ரோமோவில் பொதுமக்கள் விஜய் சேதுபதிக்கு அறிவுரை சொல்வது போல வெளியாகி இருந்தது.

இந்த இரண்டு ப்ரோமோக்கள் தான் வெளியாகி இருக்கிறது. இதை வைத்து தான் சில வாரங்களாக ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் இன்று வெளியான ப்ரோமோவில் கூட இதே காட்சிகள் தான் இருக்கிறது. ப்ரோமோவிற்கு கீழேதான் வரும் அக்டோபர் ஆறாம் தேதி நிகழ்ச்சி லான்ச்சாக இருக்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது. இது பார்க்கும் ரசிகர்களை சலிப்படைய செய்து இருக்கிறது.
ஏன் இப்படி செய்கிறார்கள் என்று கேள்விகளும் அதிகரிக்கிறது. விஜய் சேதுபதி சூட்டிங்கில் பிஸியாக இருப்பதால் அதிக ப்ரோமோக்கள் எடுக்க முடியவில்லையா? அதனால் தான் இரண்டு ப்ரோமோக்களை வைத்து இந்த நிகழ்ச்சிக்கான ஆர்வத்தை மக்களிடம் உண்டு பண்ணுகிறார்களா? என்று யோசிக்க வைக்கிறது. ஒவ்வொரு முறையும் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே அந்த நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பை உருவாக்கும் வகையில் ப்ரோமோக்கள் இருக்கும்.

ஆனால் இந்த முறை ஒரு ப்ரோமோ மட்டும் தான் சுவாரஸ்யம் உள்ளதாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து இனி அடுத்த வாரத்திலாவது புது ப்ரோமோ வருகிறதா? என்று பார்க்கலாம். அது போல கடந்த சீசன்களை போலவே இந்த சீசனிலும் 24 மணி நேரமாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பிக் பாஸ் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இந்த முறை ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற வசனம் தான் முக்கியமாக இருக்கிறது. புது ஆளின் ஆட்டம் எப்படி இருக்க போகிறது என்று வரும் அக்டோபர் ஆறாம் தேதியிலிருந்து பார்க்கலாம்.

-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications