பெரியாரிஸ்ட் புகழுக்கு வந்த சோதனையா இது? இணையத்தில் லீக் ஆன வீடியோவால் நெட்டிசன்கள் கலாய்ப்பு
சென்னை: விஜய் டிவியை சார்ந்த புகழ் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்களால் அதிகமாக கலாய்க்கப்பட்டது.
ஒரு பெரியார்வாதியாக இருக்கும் விஜய் டிவி புகழ் தற்சமயம் சபரிமலை ஐயப்பன் சாமிக்கு மாலை அணிந்து கோவிலுக்கு கிளம்பும் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
பெரியாரை பின்தொடரும் புகழ் கடவுளை நம்புவதை குறித்து சமூக வலைத்தளத்தில் இரு வேறு கருத்துக்கள் பரவி வருகிறது.

குக் வித் கோமாளி பிரபலம்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக சின்னத்திரையில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த புகழ் கடலூரை சேர்ந்தவர். இவர் 500 ரூபாயை வைத்துக்கொண்டு சென்னைக்கு வேலை தேடி வந்த நிலையில், முதலில் மெக்கானிக் கடையில் வேலை செய்து பின்பு பல கடைகளில் வேலை செய்து 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்புடா என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்களின் மத்தியில் தன்னுடைய முகத்தை காட்டி இருக்கிறார். அதனை தொடர்ந்து விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று இருந்தாலும் இவர் மக்கள் மத்தியில் அந்த அளவிற்கு பிரபலமாகாமல் தான் இருந்து வந்தார் ஆனால் அவருக்கு பெரிய திருப்புமுனையை கொடுத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

திருமணம்
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்கள் வாய்ப்புகள் புகழுக்கு கிடைத்திருக்கிறது. ஆரம்ப காலகட்டத்தில் இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் அதிகமான வித்தியாசம் இருக்கும் நிலையில் சமீபத்தில் தான் புகழுக்கு திருமணமும் நடைபெற்று இருக்கிறது. திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் புகழ் திருமணத்தில் வித்தியாசமாக செய்திருந்தார். இந்து முறையில் திருமணத்தை செய்திருந்த புகழ் அதற்கு முன்பே ஒரு வருடத்திற்கு முன்பு பெரியார் திராவிட கழகப் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் என்பவரின் தலைமையில் பெரியார் படிப்பகத்தில் சுயமரியாதை முறைப்படி ரெஜிஸ்டர் திருமணம் செய்து இருக்கிறார்.அந்த புகைப்படங்களும் புகழ் உடைய திருமணத்திற்கு பிறகு வெளியாகி பல விமர்சனங்களை பெற்றது .

ரித்திகா வெளியிட்ட வீடியோ
இந்த நிலையில் தற்போது விஜய் டிவி பிரபலமான ரித்திகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கன்னி சாமியாக குக் வித் கோமாளி சக்தியும் மற்றும் அந்த நிகழ்ச்சியின் மூலமாக புகழ் அடைந்த புகழும் மலைக்குப் போகும் தினம் என்று பதிவு வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் புகழ் மாலை போட்டு இருமுடி கட்டி யாத்திரை செல்லும் காட்சிகள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி லைக்குகள் மற்றும் கமெண்ட்களை பெற்று வருகிறது.

நெட்டிசன்களின் கேள்வி
விஜய் டிவி பிரபலங்களோடு நட்பாக இருக்கும் ரித்திகா திருமணத்திற்கு பிறகு தன்னுடைய நண்பர்களை சந்தித்து எடுத்து வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகவே அதுவும் புகழ் அந்த வீடியோவில் சபரிமலைக்கு மாலை அணிந்து செல்வதை பார்த்து பலர் திருமணத்தை பெரியார் படிப்பகத்தில் சுயமரியாதை முறைப்படி ரெஜிஸ்டர் திருமணம் செய்துவிட்டு தற்போது சபரிமலைக்கு மாலை போட்டு இருக்கிறார் என்றும் என்ன "பெரியாரிஸ்டுக்கு வந்த சோதனை" என பலர் கிண்டல் செய்து புகழை கலாய்த்து வருகின்றனர். இந்த நிலையில் புகழின் ரசிகர்கள் பலர் அவர் பெரியார் வழியில் திருமணத்தை முடித்து இருந்தாலும் அவருடைய திருமணம் ஊர் அறிய இந்து முறைப்படி தானே கோவிலில் நடைபெற்றது. அதை மறந்து விட்டீர்களா? என்று நினைவுபடுத்தியும் வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications