வடிவேல் பாலாஜி.. இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.. உருகிய புகழ்
சென்னை: இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என மறைந்த வடிவேல் பாலாஜியின் பிறந்தநாளுக்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்து உன்னுடைய ஆசையை நான் நிறைவேற்றுவேன் என உருக்கமாக பதிவிட்டுள்ளார் விஜய் டிவி புகழ்.
Recommended Video
கடந்த இரண்டு வருடத்தில் உலக நாடுகளை் அனைத்தையும் பாடாய் படுத்திக் கொண்டிருக்கும் இந்த கொரோனா தாக்கம் சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரையுமே ஒரு ஆட்டு ஆட்டி விட்டதுது.
சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கை மட்டுமல்லாமல் பல பேரின் இழப்புகளையும் ஏற்படுத்திவிட்டது .
இது சினிமாத் துறையையும் விட்டு வைக்கவில்லை.

தொடர் இழப்பு
தொடர்ச்சியாக நகைச்சுவை நடிகர்கள் பலரையும் இந்த சினிமா துறை இழந்துவிட்டது .அதில் மறைந்த பாலாஜியும் ஒருவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்தவர் .மனதிற்குள் எவ்வளவு கவலைகளையும் அடக்கிக் கொண்டிருந்தாலும் நடிகர்கள் கேமரா முன்னாடி தன்னுடைய சுக துக்கங்களையும் துயரங்களையும் கடந்து விட்டு ரசிகர்களை சிரிக்க வைப்பதையே முழுமூச்சாக கொண்டிருக்கின்றனர் .

மறக்க முடியாத லாக்டவுன்
அந்த மாதிரிதான் போன லாக்டவுன் நேரத்திலும் இவ்வளவு கஷ்டத்தையும் அனுபவித்துக் கொண்டிருந்தாலும் பாலாஜி நடிக்கும்போது தனது கவலைகளை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தான் இருந்து கொண்டிருந்தார். இந்த நேரத்தில் படப்பிடிப்புகள் எல்லாம் ரத்தான நிலையில்தான் இவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு திடீரென இறந்து விட்டார்.

திடீர் மரணத்தால் ஏற்பட்ட சோகம்
அவர் திடீரென இறந்து விட்டார் என செய்தி வெளியானதும் அவருடன் நடித்தவர்களும் ரசிகர்களும் முதலில் நம்ப மறுத்து இருந்தனர். ஆனால் பிறகு உண்மை என தெரிந்ததும் ரொம்பவே வருத்தத்தில் ஆழ்ந்திருந்தனர் .ஆனாலும் தான் ஆசைப்பட்ட இடத்திற்கு வராமல் தன்னுடைய கனவுகளை எல்லாம் நிறைவேற்றாமல் அவர் சென்று விட்டார் என அவருடைய நெருங்கிய தோழனாகவும் சக நடிகராகவும் இருந்த புகழ் உருக்கமாக பதிவிட்டிருந்தார் .

பாலாஜியும் புகழும்
புகழும் பாலாஜியும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக பல்வேறு ரசிகர்களின் மனக்கவலையை தீர்த்து சந்தோசமாக வாய்விட்டு சிரிக்க வைத்தவர்கள் .புகழ் புகழின் உச்சிக்கே செல்ல வேண்டும் என்பதுதான் பாலாஜியின் நீண்ட நாள் ஆசையாக இருந்து இருக்கிறது .அதுவும் இல்லாமல் அடிக்கடி பார்ப்பவர்களிடம் எல்லாரிடமும் சொல்லுவாராம் புகழ் கண்டிப்பாக நல்ல நிலைக்கு வந்து விடுவார் என்று.

பாலாஜி ஆசைப்பட்டது நடந்தது
தற்போது அவர் ஆசைப்பட்டது போலவே புகழும் பிரபலமாகிவிட்டார் .அவருக்காக பெரும் ரசிகர்களும் உருவாகி விட்டனர். தற்போது பாலாஜியின் பிறந்தநாளுக்கு புகழ் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டிருக்கிறார் .அதில் ஹாப்பி பர்த்டே மாமா .நீ எப்பவும் என் கூட தான் இருப்பே. மக்களை எப்போதும் சந்தோஷமாக இருக்க வைக்க வேண்டும் எனும் உன் ஆசையை நான் நிறைவேற்றுவேன் மாமா.

மிஸ் பண்றேன் மாமா
மிஸ் யூ மாமா என்று கேப்ஷன் போட்டு புகழும் பாலாஜியும் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த போட்டோவை பார்த்ததும் ரசிகர்கள் தொடர்ந்து ஹார்ட் பிரேக் இமேஜ் களையும் புகழ் மீதும் பாலாஜி மீதும் தாங்கள் வைத்திருக்கும் பாசத்தையும் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் பலரும் பாலாஜியை நினைவு கூர்ந்து போஸ்ட் போட்டு வருகின்றனர்.
-
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே












Click it and Unblock the Notifications