ராஜா ராணி 2 சீரியல் நடிகரின் திடீர் திருமணம்... திரண்டு வந்த சீரியல் பிரபலங்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வரும் பாலாஜிக்கு தற்போது திருமணம் முடிந்துள்ளது.
நடிகர் பாலாஜி, ராஜா ராணி 2 சீரியலில் அர்ச்சனாவின் கணவராக நடித்து வருகிறார்.

ராஜா ராணியில் அறிமுகம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியல் தற்போது ரசிகர்களின் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றுள்ளது. இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பிரபலங்கள் பலரும் ரசிகர்களின் ஃபேவரட்டாக மாறி இருக்கின்றனர். ஒரு சில நடிகர்கள் சீரியலில் சைட் கேரக்டராக இருந்தாலும் கூட அவர்களும் ரசிகர்களின் மனதில் எளிமையாக பதிந்து விடுகிறார்கள். அந்த மாதிரி தான் இந்த ராஜா ராணி 2 சீரியலின் பாலாஜி ரசிகர்கள் டக்கென என்று அடையாளம் கண்டு கொண்டிருக்கின்றனர்.

அடுத்த திடீர் திருமணமா
ராஜா ராணி 2 சீரியலில் வில்லி கேரக்டரில் நடிக்கும் அர்ச்சனாவின் கணவராக பாலாஜி நடித்துக் கொண்டிருப்பதால் பல நேரங்களிலும் இவருடைய நடிப்பை தெளிவாக காட்ட முடிகிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். என்னதான் வில்லியின் கணவராக இருந்தாலும் பாலாஜி தனது குடும்பத்திற்காக பலமுறை தனது மனைவியை வெறுத்திருக்கிறார். இதனாலே இவரை பலருக்கும் பிடித்து விட்டது என்று கூறி வருகின்றார்கள். தற்போது சின்னத்திரை பிரபலங்கள் பலரும் திடீர் திருமணம் செய்து கொள்வது போலத்தான் பாலாஜியும் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இப்படி எல்லாம் பேசலாமா
பாலாஜியின் திருமணத்திற்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அதிலும் குறிப்பாக அவர் நடிக்கும் ராஜா ராணி 2 சீரியலின் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் அதிகமாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலர் இதற்கு அர்ச்சனா வரவில்லையா? ? அவருடைய கனவருக்கு திருமணமா? ? என்றெல்லாம் கலாய்த்து கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். திருமண புகைப்படங்களை பார்த்ததும் ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

வாழ்த்தும் களைக்கட்டும் கலாய்ப்பும்
பாலாஜி தன்னுடைய திருமணத்தை பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றாலும் திருமண புகைப்படங்களை பார்த்ததும் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். பாலாஜியின் திருமணத்தில் விஜே அர்ச்சனா மட்டும் கலந்து கொள்ளாததால் நெட்டிசன்கள் ஒரு சிலர் அப்போ இது அர்ச்சனாவுக்கு தெரியாத கல்யாணமா என்று கேட்டிருக்கின்றனர்.அது மட்டும் அல்லாமல் ஒரு சில நெட்டிசன்கள் ஏற்கனவே அர்ச்சனாவை வைத்து நீங்க கஷ்டப்படுவது போதாது என்று இப்ப வேற கல்யாணம் பண்ணி இருக்கீங்களா?? என்று கூட கலாய்த்து வருகிறார்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications