ராஜா ராணி 2 சீரியலில் இப்படி ஒரு முடிவா? கடைசியில் கதறவிட்ட டீம்.. வெளியான புகைப்படங்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல் விரைவில் முடிவடைய இருக்கிறது.
இந்த நிலையில் இந்த சீரியலில் கடைசி நாள் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.
சீரியலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சீரியலை முடித்து வைத்திருக்கின்றனர்.
விஜய் டிவியில் பரபரப்பாக போய்க்கொண்டிருந்த ராஜா ராணி 2 சீரியல் திடீரென்று முடிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில் தற்போது அந்த செய்தி உண்மைதான் என்று சொல்லும் விதமாக கடைசி நாள் சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

டிஆர்பி குறைவடைந்ததை தொடர்ந்து ராஜா ராணி சீரியல் திடீரென்று முடிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில் இதுவரைக்கும் ராஜா ராணி சீரியலில் சந்தியா போலீஸ் அதிகாரியாக பெரும் போராட்டத்திற்கு பிறகு மாறி இருக்கிறார். தன்னுடைய மாமியார் எத்தனையோ முட்டுக்கட்டை போட்டாலும் அதையெல்லாம் தடை கற்களைத் தாண்டுவது போல தாண்டி கடைசியில் அவர் நினைத்த போலீஸ் ஆபிஸராக மாறி இருக்கிறார்.
தற்போது சிவகாமி தன்னுடைய மகள் பார்வதியின் மானத்தை காப்பாற்றுவதற்காக செய்த கொலைக்காக சரவணன் தான் தான் அந்த கொலையை செய்தேன் என்று ஜெயிலில் இருக்கிறார். இந்த நிலையில் சரவணனை சந்தியா எப்படி வெளியே கொண்டு வருவார் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதே நேரத்தில் சீரியலில், அப்போது தற்காப்புக்காக தான் அந்த கொலையை சிவகாமி செய்தார் என்று சந்தியா நீதிமன்றத்தில் நிரூபிக்க இருக்கிறார்.
அதைத்தொடர்ந்து இன்றைய எபிசோட்டில் ஏற்கனவே சந்தியாவிற்கு வாமிட் வருகிறது. அதை பார்த்த அர்ச்சனா என்ன ஏதேனும் விசேஷமா என்று கேட்கிறார். அதற்கு சந்தியா சமாளித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கடைசி நாள் சூட்டிங் புகைப்படத்தில் சந்தியா கர்ப்பமாக இருப்பது போன்று இருக்கிறது. இந்த சீரியல் வேறு மொழி சீரியலாக இருப்பதால் அந்தக் சீரியலில் கதையில் சந்தியா தன்னுடைய போலீஸ் வேலையை ரிசைன் செய்து விட்டு குழந்தையை பெற்று எடுப்பார். அதுபோலத்தான் தற்போது சந்தியாவும் முடிவெடுத்து இருப்பார் என்று தெரிய வருகிறது.
ஏற்கனவே இந்த சீரியலில் கதாநாயகி அடிக்கடி மாற்றப்பட்டு வந்தது, இயக்குனர் சீரியலை விட்டு விலகியது என அடுக்கடுக்கான விலகல்களால் இந்த சீரியல் திடீரென்று முடிவுக்கு வரும் நிலையில் அனைவரும் எதிர்பார்த்தபடியே இந்த சீரியலின் சுமுகமான முடிவை பலரும் பாராட்டி வருகின்றனர்.
-
ரகுவரனின் I Know I Know மேனரிசத்துக்கு பின்னால் உள்ள நிஜ மனிதர் யார்? வெளிவரும் அதிர்ச்சி பின்னணி -
சிறகடிக்க ஆசை: சத்யாவை நினைத்து சந்தோஷப்பட்ட விஜயா.. ஆனால் முத்து குடும்பத்திற்கு செக் வைத்த ரோகிணி.. அதிரடி சம்பவம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்!












Click it and Unblock the Notifications