காதலர் தினத்தில் அய்யனார் துணை ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! நடேசனுக்கு ஜோடி வந்தாச்சு.. அதுவும் பிக் பாஸ் பிரபலம் தான்
சென்னை: காதலர் தினத்தையொட்டி விஜய் டிவி சீரியல் ரசிகர்களுக்கு இன்று ஒரு சின்ன சர்ப்ரைஸ் கிடைச்சிருக்குது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் இருக்கும் பிரபல ஜோடிகளை வைத்து ஒரு ஸ்பெஷலான ஏஐ வீடியோ உருவாக்கி வெளியிட்டிருக்காங்க. இந்த வீடியோ வெளியான கொஞ்ச நேரத்திலேயே சோசியல் மீடியாவில் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல ரிசீவ் கிடைச்சு இருக்கு.
இந்த வீடியோவில் முதலில் ரசிகர்கள் ரொம்பவே விரும்பும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வரும் கோமதி - பாண்டியன் ஜோடி, அடுத்ததாக சிறகடிக்க ஆசை சீரியலில் அண்ணாமலை - விஜயா ஜோடி என ஒவ்வொரு சீரியலிலிருந்தும் பெரியவர்கள் கேரக்டர்களை காதலர் தினம் கொண்டாடுற மாதிரி க்யூட்டாக காட்சிப்படுத்தியிருக்காங்க.

சாதாரணமா இவங்களை நம்ம டிவியில் குடும்ப பிரச்சனை, பாசம், கண்டிப்பு எல்லாம் கலந்த கேரக்டராகத்தான் பார்ப்போம். ஆனா இந்த வீடியோவில் ரொமான்டிக்கா, ரோஸ் கொடுத்து, வெட்கப்பட்டு சிரிக்குற மாதிரி காட்டியிருப்பது பலருக்கும் புதுசா இருந்தது.
ஆனா இந்த வீடியோல எல்லாரையும் விட அதிகமா பேசப்பட்ட அன்எக்ஸ்பெக்டட் ஜோடி யாருன்னா, அய்யனார் துணை சீரியலில் நடிக்கும் நடேசன் தான். அந்த சீரியலில் நடேசன் எல்லாருக்கும் அப்பா மாதிரி இருப்பார். அதே நேரத்தில் ஜாலியா பேசுவார், பாசமா இருப்பார், சில நேரம் கண்டிப்பாவும் நடப்பார் - இந்த கலவையான கேரக்டர் தான் ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா அவருக்கு அந்த சீரியலில் ஜோடி இல்லாததால், இந்த ஏஐ வீடியோவில் மட்டும் அவரை தனியா ரோஸ் கையில் பிடிச்சுக்கிட்டு நிக்க வச்சிருக்காங்க.
அப்போ அடுத்த ஷாட்ல, விஜய் டிவி பிரபலமான ஜாக்லின் வந்த மாதிரி காட்டி, நடேசன் அவருக்கு பூ கொடுத்து ப்ரபோஸ் பண்ணுற மாதிரி காட்சிகள் வச்சிருக்காங்க. இதை பார்த்ததும் ரசிகர்கள் "அய்யனார் துணை சீரியலுக்கு ஜாக்லின் வர போறாங்களா?", "நடேசனுக்கு ஜோடியா ஜாக்லின் தான் வருவாங்களா?", "இதை நாங்க எதிர்பார்க்கவே இல்லையே"ன்னு ஆச்சரியத்தோடு கமெண்ட்ஸ் போட்டு வர்றாங்க.
இந்த வீடியோவுக்கு ஜாக்லினே சிரிக்கும் ரியாக்ஷனுடன் கமெண்ட் போட்டிருக்கிறார். அதையும் பார்த்த ரசிகர்கள் "அப்படின்னா சீரியலுக்குள் அவர் வருவது கன்பர்மா?"ன்னு சந்தேகமும், எதிர்பார்ப்பும் கலந்த கேள்விகளை எழுப்பி வர்றாங்க.

அதேபோல இந்த சீரியலில் சோழன் கேரக்டரில் நடிக்கும் நடிகரும், "இந்த வீடியோவில் எல்லா கேரக்டரும் நல்லா இருக்கு. ஆனா நடேசன் - ஜாக்லின் ஜோடி தான் செம க்யூட்"ன்னு கமெண்ட் போட்டிருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் இன்னும் ஜாலியா அந்த ஜோடியை பற்றி பேச ஆரம்பிச்சுட்டாங்க.
இப்படி சீரியல்களில் எப்பவும் சீரியஸா இருக்கும் கேரக்டர்களை காதலர் தின ஸ்பெஷலா ஒரு லைட்டான, க்யூட்டான ஃபீல்ல காட்டியது தான் இந்த வீடியோவோட பெரிய பிளஸ். "வயசான கேரக்டருக்கே இப்படி ஒரு ரொமான்டிக் டச் கொடுத்திருக்காங்கன்னா, இதுதான் ஏஐ மேஜிக்"ன்னு பலரும் ஷேர் பண்ணி ரசிச்சுக்கிட்டு இருக்காங்க.
இதற்கிடையில் இன்று உலகம் முழுக்க காதலர் தினம் கொண்டாடப்படுற நாளு. காதலர்கள் மட்டும் இல்லாமல், கணவன்-மனைவி, குடும்பத்தினர், நண்பர்கள் என எல்லாரும் ஒருவருக்கொருவர் பாசத்தை வெளிப்படுத்துற நாளாக இது மாறி இருக்கு. அந்த வகையில், விஜய் டிவி சீரியல் குழு வெளியிட்ட இந்த ஸ்பெஷல் வீடியோவும், ரசிகர்களுக்கு ஒரு சின்ன ஸ்மைல், ஒரு சின்ன சந்தோஷம் கொடுத்திருக்கு.
-
Pandian Stores 2 promo: பாண்டியன் வீட்டிற்குள் நடந்த விபரீதம்.. மயில் எடுத்த முடிவு! சரவணனுக்கு 2வது கல்யாணம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா?












Click it and Unblock the Notifications