Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாக்கியலட்சுமி கிளைமாக்ஸ் எப்போ தெரியுமா? இனி இதுதான் கதை! கோபி வெளியிட்ட வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ஐந்து வருடங்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வர இருக்கிறது. இது குறித்து இந்த சீரியலில் கோபி கேரக்டரில் நடிக்கும் நடிகர் சதீஷ் உருக்கமாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒரு சில சீரியல்கள் ரசிகர்களின் மனதில் தனி வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலுக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சீரியலில் கதாநாயகி பாக்கியா ஒரு குடும்பத் தலைவியாக தன்னுடைய அடையாளத்தை நிலை நிறுத்திக் கொள்வதற்காக ஒவ்வொரு இடங்களிலும் போராடிக் கொண்டிருக்கிறார். இது பல பெண்களுடைய நிலைமை ஆக இருந்தாலும் அவர்களுக்கெல்லாம் முன் மாதிரியாக பாக்கியா இருக்கிறார்.

Vijay TV Baakiyalakshmi Serial

பாக்கியா தன்னை சுற்றி எவ்வளவோ பிரச்சனைகள் வந்தாலும் அதனால் மனம் தளராமல் ஒவ்வொரு இடத்திலும் முன்னேறிக் கொண்டிருக்கிறார். இதனால் இவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சில நேரங்களில் பாக்கியா செயல்கள் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றனர்‌. ஒரு சில கேரக்டர் மட்டும் மாறி இருக்கின்றனர்.

பாக்கியலட்சுமி சீரியல் கதை

இந்த சீரியலில் பாக்கியாவாக நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். அவர் ஏற்கனவே சைவம் உட்பட ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அவருக்கு கணவராக கோபி கேரக்டரில் நடிகர் சதீஷ் நடித்து வருகிறார். கோபி ஆரம்பத்தில் பலருடைய திட்டலை வாங்கிக் கொண்டிருந்தாலும் இப்போது கோபியின் மனமாற்றம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த சீரியல் இப்போது முடிவுக்கு வர இருக்கிறது என்று அது குறித்து அதிகாரப்பூர்வமான ப்ரோமோக்களும் வெளியாகிவிட்டது.

நடிகர் சதீஷ் வீடியோ

இதனால் இந்த சீரியலில் கிளைமேக்ஸ் எப்போது வெளியாகும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது குறித்து இந்த சீரியலில் கோபியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் சதீஷ் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பகிர்ந்து இருக்கிறார். வழக்கமாக சதீஷ் ஒவ்வொரு நாள் காலையிலும் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் என்று சொல்லி ஒரு வீடியோ வெளியிடுவார்.

பாக்கியலட்சுமி சீரியல் முடிவு

அதில் தன்னுடைய மனதை பாதித்த சில விஷயங்களையும் பகிர்ந்து கொள்வார். சில நேரங்களில் சந்தோஷமான நினைவுகளையும் பகிர்ந்து கொள்வார். அதுபோல இன்று வாக்கிங் போயிட்டு வந்த சதீஷ் பகிர்ந்த வீடியோவில் "எல்லோருக்கும் வணக்கம்! எல்லோரும் கேட்டுக் கொண்டிருந்தது போல பாக்கியலட்சுமி சீரியல் இப்போது முடிவுக்கு வரப்போகிறது. இந்த விஷயம் உங்களுக்கு ஏற்கனவே தெரியவந்திருக்கும். ஆனாலும் அது வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தோடு முடிவுக்கு வரப்போகிறது.

நடிகர் சதீஷ் வேண்டுகோள்

இன்னும் சில நாட்கள் தான் இந்த சீரியல் வரப்போகிறது என்பது பலருக்கு வருத்தமாக இருக்கிறது. நான் எப்போதும் சொல்வது தான் எந்த ஒரு தொடக்கம் வந்தாலும் அதற்கு ஒரு முடிவும் உண்டு. இந்த முடிவு வருத்தத்தை கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும் என்று கூறி இருக்கிறார். அதோடு தான் இத்தனை வருடங்களாக சீரியலில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் போது தனக்கு ஆதரவு தந்த ரசிகர்களுக்கு நன்றி கொடுத்து சொல்லி இருக்கிறார். இன்னும் ரசிகர்கள் தனக்கு ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.

கிளைமேக்ஸ் காட்சி

அதோடு இந்த சீரியலின் கிளைமேக்ஸ் ஷூட்டிங் இன்று என்பது போல தெரிகிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த சில புகைப்படங்களையும் சதீஷ் பகிர்ந்து இருக்கிறார். அதில் எழில் மற்றும் செழியன் உடன் இருக்கும் புகைப்படங்களும் இடம் பிடித்திருக்கிறது. அதோடு இந்த சீரியலின் ஒளிப்பதிவாளர் மற்றும் கோபியின் அம்மா உடனும் புகைப்படங்கள் எடுத்து இருக்கிறார். அதுபோல இந்த சீரியலின் கடைசி காட்சிகள் இனியா மற்றும் ஆகாஷுக்கு கல்யாணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் தற்போது சதீஷ் வெளியிட்ட புகைப்படங்களில் கல்யாண வீடு போல டெக்கரேஷன் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் இனியாவிற்கு இரண்டாவது கல்யாணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+