சூப்பர் சிங்கர் ஜூனியர் தொடங்கியாச்சு.. எப்போ இருந்து தெரியுமா? இந்த முறை இப்படி ஒரு ஸ்பெஷல் இருக்கு
சென்னை: விஜய் டிவியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் சிங்கர் ஜூனியர் தனது 10வது சீசனுடன் ஒளிபரப்பாகவுள்ளது! நவம்பர் 16, 2024 முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகும். 6 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தங்களது பாடல் திறமைகளை வெளிப்படுத்தும் மேடையாகத் திகழும் சூப்பர் சிங்கர் ஜூனியர், இப்போது 10வது சீசனுடன் மீண்டும் மக்களின் மனதில் கொண்டிருக்கும் உற்சாகத்தை மீண்டும் மெருகூட்ட வருகிறது.
முதல் முறையாக, இசை மேதை டி. இமான் சீசன் 10ல் புதியதாக இணைந்து கே.எஸ். சித்ரா மற்றும் மனோவுடன் பாடகர்களுக்கு வழிகாட்டும் நடுவர்களில் இணைந்துள்ளார். நிகழ்ச்சியின் மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே மீண்டும் தொகுப்பாளர்களாக இணைந்துள்ளனர்.

இதனை முன்னிட்டு, சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 தனது ப்ரோமோக்களை வெளியிட்டுள்ளது, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு ப்ரோமோவும், 'ஒவ்வொரு குரலும் ஒரு கதை சொல்லும்! என்ற வரிகளை உள்ளடக்கியது, இதன் மூலம் இதற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது.

2006-ஆம் ஆண்டு முதல் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி சிறுவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் அரிய வாய்ப்பாக திகழ்ந்து வருகிறது. கிருஷ்ணமூர்த்தி, அல்கா அஜித், ஆஜீத், ஸ்பூர்த்தி, ப்ரிதிகா, ஹ்ரிதிக், கிரிஷாங் மற்றும் ஸ்ரீநிஷா போன்ற முன்னாள் வெற்றி பெற்ற பங்கேற்பாளர்கள் இன்று புகழ்பெற்ற பின்னணி பாடகர்களாக திரையுலகில் பிரகாசிக்கின்றனர்.

தங்கள் திறமையை உலகுக்கு அறிமுகப்படுத்திய இந்த மேடையில், பிரபல இசையமைப்பாளர்கள் ஏ.ஆர். ரகுமான், அனிருத், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோருடன் பணிபுரியும் வாய்ப்பும் கொடுத்துள்ளது. சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 வரும் நவம்பர் 16 முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் மாலை 6.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கண்டுகளிக்கத் தவறாதீர்கள்!

-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications