மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிய விஜய் டிவி.. ட்ரெண்டிங்கில் முதலிடம்.. எதிர்பார்க்காத சம்பவம்
சென்னை: விஜய் டிவி சீரியல் சமீப காலமாகவே டிஆர்பியில் பின்தங்கியிருந்தது. ஆனால் நேற்று விஜய் டிவி சீரியல் எதிர்பார்க்காத சம்பவம் செய்திருக்கிறது. அதாவது நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியான சில விஜய் டிவி சீரியல்களின் ப்ரோமோக்கள் youtube சேனலில் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. அதுவும் எந்த சீரியல் என்று விரிவாக பார்க்கலாம்.
ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பெயர் வாங்கிய விஜய் டிவியில் புதியது புதியதாக பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் சீரியல்களும் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் விஜய் டிவியில் மற்ற மொழி சீரியல்கள் தான் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வந்தது. அதுவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பிடிக்கத்தொடங்கியது. நீயா நானா, பிக் பாஸ், சூப்பர் சிங்கர் போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும் நடத்த தொடங்கினார்கள். இந்த நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியது.

ட்ரெண்டிங்கில் டாப் 10 இடம்
அதற்குப் பிறகு தமிழ் சீரியல்களும் ஒளிபரப்பாக தொடங்கியது. சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவியில் பல சீரியல்கள் இப்போது டிஆர்பியில் இடம் எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் எல்லாம் டாப் 10 இடங்களில் சன் டிவி சீரியல்கள் தான் அதிகமாக இருக்கும். ஆனால் இப்போது சமீப காலமாகவே விஜய் டிவி சீரியல்களும் சன் டிவி சீரியல்களோடு போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது.
விஜய் டிவி சீரியல்கள்
அதுபோல இந்த போட்டியில் அவ்வபோது ஜீ தமிழ் சீரியல்களும் எட்டிப் பார்க்கிறது. ஆனாலும் முதல் இடத்தில் தொடர்ந்து சன் டிவி சீரியல்கள் இருக்கிறது. இந்த நிலையில் தான் youtube சேனலில் ஒவ்வொரு வார ஞாயிற்றுக்கிழமையும் விஜய் டிவி தங்களுடைய சீரியல் ப்ரோமோக்களை வெளியிட்டு வருகிறது. இது எதிர்பார்க்காத அளவிற்கு சோசியல் மீடியாவில் வைரலாகி விடுகிறது.
முதல் இடத்தில் மகாநதி சீரியல்
நேற்று காலை 10 மணிக்கு பாக்கியலட்சுமி சீரியல், சிறகடிக்க ஆசை, மகாநதி போன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் ப்ரோமோக்கள் அடுத்தடுத்து வெளியானது. அந்த சீரியல்கள் தான் தற்போது சோசியல் மீடியாவில் டாப் 10 இடத்தை பிடித்திருக்கிறது. முதல் இடத்தில் மகாநதி சீரியல் இருக்கிறது. இந்த சீரியலில் காவிரியின் கர்ப்பத்தை விஜய் அறிந்து கொண்டிருக்கிறார்.

காவிரி கர்ப்பத்தை அறியும் விஜய்
காவேரி தன்னுடைய கர்ப்பத்தை விஜயிடம் சொல்லாமல் மறைத்து வைத்திருந்த நிலையில் இப்போது அந்த ரகசியம் டாக்டர் மூலமாக விஜய்க்கு தெரிய வந்திருக்கிறது. குழந்தை குறித்த உண்மை தெரிய வந்ததும் விஜய் கண்கலங்கி எமோஷனலாக காவேரியிடம் பேசுகிறார். இந்த உணர்ச்சி பூர்வமான ப்ரோமோ தான் இப்போது டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது.
2வது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ்
அதைத் தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இருக்கிறது. இந்த சீரியலில் அரிசியை பார்ப்பதற்காக குமாரவேல் வந்திருந்தபோது குமார வேல்லை பார்த்ததும் அரசி கத்தி விடுகிறார். இதனால் கோமதி, மீனா, ராஜு எல்லோரும் அங்கு வந்து விடுகின்றனர். அப்போது குமாரவேல் அரசியை தொந்தரவு செய்வதை பார்த்ததும் மீனா கோபத்தில் அங்கு இருக்கும் தோசை கல்லை தூக்கி குமரவேல் தலையில் அடித்து விடுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கதை
இதனால் குமாரவேல் பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கிறார். இந்த சீரியலில் இந்த திருப்பத்தை யாரும் எதிர்பார்க்காத நிலையில் இந்த ப்ரோமோ தான் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. அதைத்தொடர்ந்து மூன்றாவது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியல் இருக்கிறது. பாக்கியாவின் ரெஸ்டாரன்டை சுதாகர் ஏற்கனவே தன்னுடைய பெயருக்கு மாற்றிவிட்டார். இப்போது பாக்கியா வாடகைக்கு நடத்திக் கொண்டிருக்கும் மற்றொரு ரெஸ்டாரண்டையும் விலைக்கு வாங்கி இருக்கிறார்.
எதிர்பார்க்காத சம்பவம்
இதனால் பாக்யாவிற்கு சப்போர்ட் சுதாகரிடம் பேசுகிறார். இதனால் இந்த ப்ரோமோ மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. ட்ரெண்டிங்கில் டாப் மூன்று இடங்களை தொடர்ந்து விஜய் டிவி சீரியல்கள் பிடித்திருப்பது சீரியல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. விஜய் டிவியின் உரிமை கலர்ஸ் தமிழ் சேனல் குழுவினரிடம் மாறியிருக்கும் நிலையில் இப்போது விஜய் டிவி சீரியல்கள் மீண்டும் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்திருப்பது சோசியல் மீடியா பக்கங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications