சிறகடிக்க ஆசை சீரியல் மீனா யார் தெரியுமா? ஆரம்பத்தில் இந்த நிலைமையிலா இருந்தார்?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை என்னும் சீரியலில் கதாநாயகி மீனா பற்றி பல தகவல்கள் இங்கே பார்க்கப் போகிறோம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் நிஜப்பெயர் கோமதி பிரியா தானாம்.

சமூக வலைத்தளத்தில் பல வீடியோக்களை வெளியிட்டு வந்த கோமதிக்கு சீரியலில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
நாளுக்கு நாள் புது புது சீரியல்கள் அறிமுகம் ஆகி வருகிறது. அதுவும் விஜய் டிவியில் சமீபத்தில் அறிமுகமான சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுகிறது. கதாநாயகி ஒரு ஏழை குடும்பத்தை சார்ந்தவராக இருக்கிறார். பொதுவாக சின்னத்திரை என்றாலே அங்கே கதாநாயகி கஷ்டப்பட்டவராக இருப்பார். கதாநாயகன் பெரிய பணக்காரராக இருந்து அம்மா பேச்சை தட்டாதவராக இருப்பார்.
ஆரம்பத்தில் யாரோ ஒருவரின் வற்புறுத்தலினால் திருமணம் செய்து கொள்வார்கள். பிறகு இருவரும் காதலிப்பார்கள் ஆனால் கதாநாயகனின் அம்மா இவர்கள் இருவரையும் சேர விடாமல் பிரச்சனை செய்வார்கள். இது பல வருடங்களாகவே சின்னத்திரையில் ஒரு தொற்று நோயாக தொற்றிக் கொண்டு வருகிறது. எந்த சேனலிலும் இதே கதை தான் ரிப்பீட்டாகி கொண்டிருக்கிறது. கொஞ்சம் பட்டரிங் டிங்கரிங் மட்டும் செய்யப்படுகிறது.
அதுபோலத்தான் சிறகடிக்க ஆசையும் சீரியலும் இருக்கிறது. ஆனால் இங்கே கதாநாயகன் பெரிய பணக்கார வீட்டு பையனும் இல்லை அதுபோல அம்மாவுக்கும் பிடிக்காத பையன். கதாநாயகி மீனா பார்த்தாலே ஐயோ பாவம் என்கிற மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு வீட்டு வேலைகளையும் குடும்பத்தின் பாரத்தையும் தலையில் சுமக்க தொடங்கி இருக்கிறார். இந்த நிலையில் இந்த சீரியலில் மீனாவாக மனதில் பதிந்து இருக்கும் நடிகையின் பெயர் கோமதி பிரியா என்பது பலருக்கும் தெரியாது.

கோமதி பிரியா 1993 ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி பிறந்திருக்கிறார். இவருக்கு சொந்த ஊரு மதுரை தானாம். வேலைக்காக சென்னைக்கு வந்திருக்கிறார். 30 வயசாகும் இவர் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்திருக்கிறார். அதுவும் பல ரீல்ஸ் வீடியோக்களை இவர் அடிக்கடி வெளியிட்டு வர அது இவரை பிரபலம் ஆக்கி இருக்கிறது. அது மூலமாகத்தான் இவருக்கு சின்ன திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

2018 ஆம் ஆண்டில் இருந்து சீரியலில் நடிக்கும் இவர் ஓவியா என்ற சீரியல் மூலமாகத்தான் சின்ன திரையில் அடி எடுத்து வைத்திருக்கிறார். அதற்குப் பிறகு வேலைக்காரன் என்னும் சீரியலிலும் நடித்திருக்கிறார். சின்னத்திரையில் மட்டுமல்லாமல் தனியா ஒரு youtube சேனல் நடத்தி இவரும் தன்னுடைய வீடியோஸ்களை அதில் அடிக்கடி அப்லோடு செய்து வருகிறார். இந்த நிலையில் தற்போது சின்ன திரையில் அதிகமான ரசிகர்களால் பாராட்டப்படும் நாயகியாக இவரும் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications