பிக் பாஸ்ல இந்த பொண்ணு தான் ஜெயிக்கணும்! அதிரடியாக வீடியோ வெளியிட்ட குரேஷி மற்றும் புகழ்
சென்னை: விஜய் டிவியில் பிரபலமான புகழ் மற்றும் குரோஷி இருவரும் ஹிந்தி பிக் பாஸில் ஸ்ருதிகாவிற்கு வாக்கு செலுத்த சொல்லி ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்திருக்கின்றனர். அதோடு ஸ்ருதிகா தான் இந்த நிகழ்ச்சியில் ஜெயிக்க வேண்டும் என்று இவர்கள் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8-வது நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. வரும் வாரத்தோடு இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கான இறுதிக்கட்டத்தில் 8 போட்டியாளர்கள் இருக்கின்றனர். அதே நேரத்தில் பிக் பாஸில் இந்த வாரத்தில் பல புது டாஸ்க் கொடுத்திருக்கிறார்.

ஏற்கனவே எவிக்ஷனான போட்டியாளர்கள் மீண்டும் வீட்டுக்குள் வரப் போகிறார்கள். அவர்களுக்கும் இப்போது இருக்கும் போட்டியாளர்களுக்கும் போட்டிகள் நடைபெறும் அதில் இப்போது இருக்கும் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு ரீ என்ட்ரி கொடுக்கும் போட்டியாளர்கள் இருவர் ஃபைனலுக்கு போவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்பட்டிருக்கிறது.
இப்படியான நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் பெரும் சலசலப்பும் சண்டை சச்சரவுகளும் நடந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் தமிழைப் போலவே ஹிந்தியில் 18வது சீசன் கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. தமிழில் அதிகமான விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் ஹிந்தியில் இதுவரைக்கும் நடக்காத ஒரு அதிசயம் நடந்திருக்கிறது.
அதாவது முதல் முறையாக தமிழ் நடிகை ஒருவர் ஹிந்தி பிக் பாஸில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அவர் வேறு யாருமில்லை விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமடைந்த ஸ்ருதிகா தான். ஆரம்பத்தில் இவருடைய நடவடிக்கைகள் ஹிந்தி ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களை சந்தித்தது. போக போக இவருடைய நிஜ கேரக்டரை ரசிகர்கள் புரிந்து கொண்டனர்.

ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் ஸ்ருதிகா சிலரை நண்பர்கள் என்று நம்பி ஒவ்வொரு முறையும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக்கிறார். பிக் பாஸ் வீட்டிற்குள் யாருக்கு எந்த பிரச்சனை என்றாலும் குரல் கொடுக்கும் ஸ்ருதிகாவிற்கு எதுவும் பிரச்சனை வரும்போது பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் யாரும் குரல் கொடுப்பதில்லை. எல்லாருமே அவரே ஒதுக்கி வைக்கிறார்கள்.
ஆனாலும் ஒரு வழியாக இறுதி கட்டத்தில் வந்திருக்கிறார். ஆனால் இந்த வார நாமினேஷனில் அவருடைய பெயர் இடம் பிடித்திருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே அவருடைய இரண்டு நண்பர்கள் தான். அதனால் அவருக்கு ஹிந்தி ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் அலை அடிக்கிறது. அவர் பாவம் என்று பலர் பரிதாபப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதே நேரத்தில் ஒரு சிலர் ஹிந்தி போட்டியாளர்கள் தான் ஹிந்தி பிக்பாஸில் ஜெயிக்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளத்தில் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஸ்ருதிகா இந்த சீசனில் பைனலுக்கு போவாரா இல்லையா என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது. அதனால் இந்த வாரத்தில் தமிழ் ரசிகர்களும் ஸ்ருதிகாவிற்கு வாக்கு செலுத்தி அவரை பைனலுக்கு போக வைக்க வேண்டும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அதே நேரத்தில் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் ஸ்ருதிகாவிற்காக ரசிகர்களிடம் வாக்கு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதில் விஜய் டிவி புகழ் மற்றும் குரேஷி போன்றும் ஸ்ருதிகாவிற்கு வாக்கு செலுத்த கேட்டு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த வீடியோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஸ்ருதிகா ஹிந்தி பிக்பாஸில் விளையாடுவது உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்களும் மறக்காமல் ஓட்டை தட்டி விடுங்க.












Click it and Unblock the Notifications