கோலாகலமாக நடந்த சிறகடிக்க ஆசை சீரியல் நடிகரின் திருமணம்.. குவிந்த விஜய் டிவி பிரபலங்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் வெற்றி வசந்துக்கும், விஜய் டிவியில் பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் வைஷ்ணவிக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த திருமணத்தில் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தி இருக்கிறார்கள்.
நவம்பர் மாதம் பிறந்தது தான் பிறந்தது பல திருமண அப்டேட் வரிசை கட்டி வந்து கொண்டே இருக்கிறது. யாரும் எதிர்பார்க்காத சில பிரபலங்கள் கூட திடீர் திருமண அறிவிப்பு வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நடிகை கீர்த்தி சுரேஷ் நேற்று தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய காதலரோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார்.

அவருக்கு அடுத்த மாதத்தில் திருமணம் நடக்க இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. அதுபோல ரம்யா பாண்டியன் சில வாரங்களுக்கு முன்பு திடீர் திருமணம் செய்திருந்தார். இந்த வரிசையில் சின்னத்திரை பிரபலங்கள் சிலரும் அடுத்தடுத்து திருமண செய்தியை பகிர்ந்து கொள்கிறார்கள். அதிலும் சின்னத்திரையில் பலருக்கும் பரீட்சையமான நடிகர் வெற்றி வசந்த் விஜய் டிவியில் நடிக்கும் நடிகையை காதலிக்கும் செய்தியை இரண்டு மாதங்களுக்கு முன்பே தெரிவித்து இருந்தார்.
அதோடு தாங்கள் இரண்டு மாதங்களாக காதலிக்கிறோம் எங்களுடைய திருமணம் விரைவில் நடைபெற போகிறது என்று அறிவித்திருந்தார். அவர் சொன்னது போலவே இன்று அவருக்கு திருமணம் நடைபெற்றிருக்கிறது. திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பே கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டது.

சங்கீத், மெஹந்தி ஃபங்சனில் எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இன்று வெற்றி வசந்த் மற்றும் வைஷ்ணவியின் திருமண புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதோடு திருமணத்திற்கு பிறகு ரிசெப்ஷன் மேடையில் வைஷ்ணவி மற்றும் வெற்றி வசந்த் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது.

அதில் விஜய் டிவி மற்றும் சன் டிவி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அதிலும் சிறகடிக்க ஆசை சீரியலில் வெற்றி வசந்துடன் நடிக்கும் நடிகர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள் அதுபோல பொன்னி சீரியலில் வைஷ்ணவி ஓட நடிக்கும் சபரி உட்பட பல நடிகர் நடிகைகள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதுபோல இந்த தம்பதிக்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரை பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.













Click it and Unblock the Notifications