இந்த வாரம் விஜய் டிவியில் சீரியல் இல்லை.. 5 மணி நேரம் லைவ் நிகழ்ச்சி.. வந்து குவிய போகும் பிரபலங்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு மணி நேரம் ஸ்பெஷல் சீரியல் எபிசோடு ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் இந்த வரம் சூப்பர் சிங்கர் சீசன் 10 நிகழ்ச்சியில் கிராண்ட் ஃபினாலே லைவ் இருப்பதால் இந்த வாரம் எந்த சீரியலும் இல்லை என்று தெரியவந்திருக்கிறது.
பொதுவாக சேனல்களில் டிஆர்பி அதிகரிப்பதற்காக புதிது புதிதாக நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். அதேபோல ஆரம்பத்தில் சீரியல்கள் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகி வந்தது. இப்போது திங்கள் முதல் சனிக்கிழமை வரை பல சேனல்களில் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

அதைத்தொடர்ந்து இப்போது சன் டிவி, விஜய் டிவி போன்ற சேனல்களில் மட்டும் ஞாயிற்றுக்கிழமையும் ஏதாவது ஒரு சீரியலில் ஸ்பெஷல் எபிசோடு என்று இரண்டு மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் சமீபத்தில் விஜய் டிவியில் டாப்பில் போகும் சீரியல்களை ஞாயிற்றுக்கிழமை 2 மணி நேரம் எபிசோடுகளாக ஒளிபரப்பு செய்து வருகிறார்கள்.
கடந்த வாரத்தில் கூட பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி வந்தது. அதில் இனியாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து பாக்யாவிற்கும் பழனிச்சாமிக்கும் கல்யாணம் செய்து வைப்பதற்காக பழனிச்சாமியின் குடும்பத்தினர் முடிவு எடுத்திருந்த நிலையில் அது கோபிக்கு தெரிய வந்திருந்தது.
இந்த நிலையில் அடுத்த வாரத்தில் எந்த சீரியல் ஸ்பெஷல் எபிசோடாக வரும் என்பது பலருக்கும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதிலும் ரசிகர்கள் அதிகமானோர் சிறகடிக்க ஆசை சீரியல் 2 மணி நேர எபிசோடு வேண்டும் என்று கூறி வருகிறார்கள். ஆனால் இந்த வாரத்தில் எந்த சீரியலின் எபிசோடுகளும் ஸ்பெஷல் ஆக ஒளிபரப்பாக போவது கிடையாது.
காரணம் இந்த வாரம் சூப்பர் சிங்கர் சீசன் 10 நிகழ்ச்சி முடிவடைய இருக்கிறது. அதன் கிராண்ட் ஃபினாலே வரும் ஜூன் 23 நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் லைவாக நடைபெற இருக்கிறது. மதியம் மூன்று மணிக்கு விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது. அதில் பல பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பைனலுக்கு 5 போட்டியாளர்கள் தேர்வாகி இருக்கிறார்கள்.
அதில் விக்னேஷ், ஜீவிதா, ஜான், வைஷ்ணவி, ஸ்ரீநிதி என ஐந்து போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இவர்களில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் படிக்கட்டில் அந்த சத்தம்! யாருமே கவனிக்காத நடிகர் திலகத்தின் கை ரகசியம் -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications