டிஜே பிளாக்கை மேடையிலே திட்டிய டி.ராஜேந்திரன்.. மாட்டிக்கொண்டு முழித்த பூஜா.. இவருக்கா இந்த நிலைமை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வாரம் STR ரவுண்ட் ஒளிபரப்பாக இருக்கிறது.
சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியின் ஏப்ரல் 8 மற்றும் 9ஆம் தேதிக்கான 2வது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
வழக்கம் போல டிஜே பிளாக் பூஜாவிற்கு போட்ட பேக்ரவுண்ட் வசனத்தால் டி ராஜேந்திரன் டிஜே பிளாக்கை கலாய்த்து தள்ளி இருக்கிறார்.

9வது சீசன்: விஜய் டிவியில் நாளுக்கு நாள் நிகழ்ச்சிகள் பெருகி கொண்டு வருகிறது. அதில் ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்று விட்டால் அதில் அடுத்தடுத்த சீசன்கள் தொடங்கி விடுவது வழக்கமானது தான். அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பட்டித்தொட்டி எல்லாம் வேற லெவல் வரவேற்பை கொடுத்ததை தொடர்ந்து தற்போது ஒன்பதாவது சீசனுக்கு வந்திருக்கிறது. இந்த சீசனில் ஒவ்வொரு வாரமும் ஒரு ரவுண்டு நடந்து கொண்டிருக்கிறது. வழக்கம்போல இந்த நிகழ்ச்சியை பிரியங்கா மாகாபா தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.
சிறப்பு விருந்தினர்: இந்த நிலையில் வரும் ஏப்ரல் 8ஆம் தேதி மற்றும் 9ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சிறப்பு விருந்தினராக டி ராஜேந்திரன் கலந்து கொண்டிருக்கிறார். இந்த வாரத்தில் சிம்புவின் பாடல்கள் வர இருக்கிறது. அதில் பூஜா பாட எந்திரிக்கவும் வழக்கம்போல, டிஜே பிளாக் பின்னணியில் காதல் பாடல்களை ஒலிக்க செய்துவிட்டார். அதுவும் டி. ராஜேந்திரன் பாடலான, உன் மனசில் நானே தானா..? என் மனசில் நீயே தானா..? என்னும் பாடல் ஒலிக்க அதை சந்தோஷமாக டி. ராஜேந்திரனும் ரசித்து என்ஜாய் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

பாவம் அவரே குழம்பிட்டாரு: இதைப் பார்த்த பிரியங்கா உங்க பாட்டை போட்டு அவன் டிஸ்டன்ஸ்ல இருந்து ஒரு கம்யூனிகேஷன் பண்ணிக்கிட்டு இருக்கிறான் என்று டிஜே பிளாக்கை போட்டுக் கொடுக்க, அதற்கு ராஜேந்திரன் சொன்னால்தான் காதல் என்று இல்லையா, ஒரு பொண்ணுக்காக வந்து நின்னாலே காதல் தான்யா என்று பஞ்ச் வசனம் பேச அதை மாகாபா ஆகா ஓகோ என்று பாராட்டுகிறார். அப்போது டிஜே பிளாக் தன்னுடைய குறும்புத்தனத்தோடு, உலகத்தில் எத்தனையோ பொண்ணுங்க இருந்தாலும் நான் ஏன் சார் பூஜாவை லவ் பண்றேன் என்கிற மாதிரி ஒரு வசனத்தை ஒழிக்க விட அதைக் கேட்டு டி. ராஜேந்திரன் அதிர்ச்சியாகி விடுகிறார்.

பீல் பண்ணும் ராஜேந்திரன்: பாட்டு எல்லாம் வரைக்கும் ஓகே, ஆனா கடைசில உன் ஹார்ட் கொஞ்சம் உதைக்குது என்று ராஜேந்திரன் சொல்ல, அதுக்கு பிரியங்கா நீங்க புனிதமான காதல் பத்தி சொல்றீங்க சார் என்று சொன்னதும், நிலைமையை புரிந்து கொண்ட ராஜேந்திரன் இந்த மாதிரி டூப்ளிகேட் காதலிக்கு எல்லாம் ஏன்யா என்னை பேச வைக்கிறீங்க என்று காமெடியாக கேட்க? அனைவரும் சிரித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்களும் அப்போ இந்த வாரம் தரமான சம்பவம் இருக்கப் போகிறது. இதை பார்க்கும் போதே இவ்வளவு சிரிப்பு வருது என்றால் அங்கே செட்டில் இருக்கிறவங்களுக்கு வயிறு வலியே வந்து இருக்குமே என்று கமெண்ட்கள் குவிந்து வருகிறது.
-
விஜய் சேதுபதி இவ்வளவு ஓபனா பேசுவாருன்னு நினைக்கலையே! வெடவெடுத்து போன VJ பார்வதி! அடுத்த பஞ்சாயத்து -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
“ஏ.ஆர். ரஹ்மானுக்கே இந்த நிலைமை என்றால், எனக்கு..? ‘கருப்பு’ படத்தில் நடந்த அதிர்ச்சி அனுபவம்! நடிகை ஆனந்தி ஓபன்! -
Youth OTT: ஓடிடியில் வெளியாகும் யூத் படம்! எப்போ, எதில் பார்க்கலாம்? கென் கருணாஸ் ரசிகர்களுக்கு குட் நியூஸ் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
சிறகடிக்க ஆசை: போலி சாமியார் பற்றி உண்மையை நிரூபித்த முத்து! விஜயாக்கு தெரிய வந்த இன்னொரு உண்மை! செம சம்பவம் -
அந்த நடிகர் என் நகையை ஏமாற்றி விட்டார்... பிக் பாஸ் தாமரை செல்வி கண்ணீர் வீடியோ! சீரியல் பழக்கம் சீரியஸானது! -
கென் கருணாஸ்க்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் செய்த சிம்பு.. யூத் பட நடிகை நெகிழ்ச்சி போஸ்ட் -
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
விஜய் டிவியில் மீண்டும் சேரும் பாக்கியலட்சுமி கோபி பாக்கியா.. ஹீரோ யாரு தெரியுமா? பிக் பாஸ் பிரபலம் ஹேப்பி -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்!












Click it and Unblock the Notifications