விஜய் டிவியில் முடிவுக்கு வரும் பிரைம் டைம் சீரியல்.. அதற்கு பதில் வரப்போகுது பிரபல நடிகரின் சீரியல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதனாலயே இந்த சீரியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீரியல் முடிவுக்கு பிறகு எந்த சீரியல் ஒளிபரப்பாக போகிறது என்பதை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். ஆரம்பத்தில் இந்த சீரியல் அதிகமான வரவேற்பு பெற்றது. இந்த சீரியலில் கதாநாயகனாக நடிகர் தீபக் நடிக்கிறார், அவருக்கு ஜோடியாக நடிகை நட்சத்திரா நடிக்கிறார். சில வருடங்களாக இந்த சீரியல் முன்னணி இடத்தில் இருந்த நிலையில் சமீபத்தில் இந்த சீரியலில் கதையில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாமல் இருப்பது ரசிகர்களின் மத்தியில் அதிருப்தியாக இருக்கிறது.

அதே நேரத்தில் இந்த சீரியலில் வில்லன் அர்ஜுன் என்ன செய்தாலும் ராகிணி கண்டுபிடிக்காமல் இருக்கிறார். அதே நேரத்தில் டாக்டருக்கு படித்த இந்த ராகிணி எதையும் ரியலாக புரிந்து கொள்ளாமல் அர்ஜுன் சொல்வதை மட்டுமே நம்பிக் கொண்டு இருப்பது பார்க்கும் ரசிகர்களை அதிருப்தி அடைய வைக்கிறது. அதே நேரத்தில் தமிழ் மற்றும் அர்ஜுன் இடையே பிரச்சனைகள் மீண்டும் மீண்டும் ரிப்பீட்டு மோடில் வந்து கொண்டே இருக்கிறது.
அதே நேரத்தில் கோதை அர்ஜுன் அப்பாவை ஏமாற்றி சொத்துக்களை வாங்கி விட்டார் என்று அர்ஜுன் குடும்பம் சொல்வதை எந்த ஆதாரமும் இல்லாமல் ராகிணி நம்பிக்கொண்டிருக்கிறார். இதே நேரத்தில் இந்த சீரியலில் எல்லா பிரச்சினைகளும் இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. மேக்னா கொலையில் சரஸ்வதி ஜெயிலில் இருந்த நிலையில் இப்போது அவரும் ஜெயிலில் இருந்து வந்து விட்டார்.
இதுவரைக்கும் அர்ஜுன் தன்னுடைய குடும்பத்திற்காக எல்லா வில்லத்தனங்களையும் செய்து கொண்டு இருந்தாலும் இப்போது அவருடைய சொந்த மாமாவே அர்ஜுன் தலையில் அடித்ததால் அவர் கோமாவில் இருக்கிறார். அதே நேரத்தில் இன்று வெளியான ப்ரோமோவில் ராகிணி தமிழ் அடித்ததால் தான்
அர்ஜுனுக்கு இப்படி ஆகிவிட்டது என்று நினைத்து தமிழ் மட்டுமல்லாமல் தமிழுடைய பிறக்காத குழந்தைக்கும் சாபம் விட்டுவிட்டு வந்திருக்கிறார்.
இதை பார்க்கும் ரசிகர்களை கடுப்பாக வைத்திருக்கிறது. ஒரு டாக்டராக இருந்து விட்டு இப்படியா முட்டாள் மாதிரி பேசுவாங்க என்று பலரும் இந்த ப்ரோமோவுக்கு கீழே கமெண்ட் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது. கோமாவில் இருக்கும் அர்ஜுன் தமிழ் குடும்பத்தை பற்றி உண்மைகள் தெரிந்ததும் இந்த சீரியல் முடிவுக்கு வந்துவிடும்.
இந்த சீரியல் இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவடையும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீரியல் முடிவடைந்த பிறகு இந்த சீரியலுக்கு பதிலாக நடிகர் திரவியம் நடிக்கும் வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற சீரியல் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டுக்கு வீடு வாசல் படி என்ற சீரியல் கூட்டு குடும்பத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது.
இதில் ஈரமான ரோஜாவே சீரியலின் மூலம் பிரபலமடைந்த திரவியம் இந்த சீரியலில் கதாநாயகனாக நடிக்கிறார். அதே நேரத்தில் இந்த சீரியலில் பல பிரபலங்கள் இருக்கின்றனர். இந்த சீரியல் பிரைம் டைமில் ஒளிபரப்பானால் அதிகமான வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications