விஜய் டிவியின் டாப் 10 சீரியல்கள்.. நூல் இலையில் முதலிடத்தை தவறவிட்ட பாக்கியலட்சுமி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் கிராமப்புறங்களில் மற்றும் நகரப்புறங்களில் அதிகமாக ஈர்க்கப்பட்டு டிஆர்பி யில் முன்னணியில் இருக்கும் முதல் 10 சீரியல்களின் விபரங்கள் வெளியாகி இருக்கிறது.
பெண் ரசிகர்களின் ஆதரவோடு இருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் முதல் இடத்தை சில பாய்ண்டுகளில் கோட்டை விட்டிருக்கிறது.
விஜய் டிவியில் பல சீரியல்கள் இந்த முறை அதிகமான பாயிண்டுகளை பெற்று இருக்கிறது.
பின்வரும் தகவல்கள் கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் 2023 ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் டிஆர்பி யின் அடிப்படையில் வெளியாகி இருக்கிறது.

1, பாரதி கண்ணம்மா சீரியல்
பாரதிகண்ணம்மா சீரியலின் முதல் பாகம் முடிவடைய இருக்கிறது என்ற தகவல்கள் வெளியான பிறகு ரசிகர்கள் எதிர்பார்த்த டி என் ஏ டெஸ்ட் மற்றும் கண்ணம்மாவின் விவாகரத்து என அடுத்தடுத்த திருப்பங்கள் வந்த நிலையில் இந்த சீரியல் ரசிகர்கள் அதிகமாக கவர்ந்து டிஆர்பி யில் 7.54 பெற்று முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

2, பாக்கியலட்சுமி சீரியல்
இந்த சீரியலில் ஜெனியின் வளைகாப்பு ராதிகாவின் திடீர் மாற்றங்கள் என எதிர்பாராத திருப்பங்களால் இந்த சீரியலும் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக வரவேற்பை பெற்றிருக்கிறது 7.48 பெற்று இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.

3, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்
இந்த சீரியலில் தற்போது முல்லை கர்ப்பமாக இருக்கும் சீன்கள் ஒளிபரப்பாகி வந்த நிலையில் இந்த சீரியலிலும் அடுத்தடுத்த திருப்பங்கள் சுவாரசியங்கள் காரணமாக 6.72 பெற்று மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.

4, ஈரமான ரோஜாவே சீரியல்
இந்த சீரியலிலும் கல்யாண கொண்டாட்டங்கள் மற்றும் காதல் சுவாரஸ்யம் காரணமாக ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இந்த சீரியல் 5.47 பெற்று நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது.

5, ராஜா ராணி சீரியல்
இந்த சீரியலில் பயிற்சிக்கு சென்று இருந்த சந்தியாவிற்கு அடுத்தடுத்து வந்த பிரச்சனைகள் அதே நேரத்தில் செந்தில் மற்றும் சரவணன் தேர்தல் பிரச்சனைகள் என பல சுவாரசியமான நிகழ்வுகளால் இந்த சீரியல் 4.44 பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.

6, தமிழும் சரஸ்வதியும் சீரியல்
இந்த சீரியலில் தற்போது அர்ஜுனின் உண்மையான முகம் தமிழ் குடும்பத்திற்கு தெரிய வர இருக்கும் நிலையில் கம்பெனியில் நடக்கும் பல பிரச்சனைகளின் காரணமாகவே இந்த சீரியல் ரசிகர்களை கவர்ந்து 3.52 பெற்று ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறது.

7, மௌன ராகம் சீரியல்
இந்த சீரியலில் வருணுக்கு பழையதை எல்லாம் நினைவுக்கு கொண்டு வருவதற்கு சக்தி எடுத்த பல முடிவுகள் காரணமாக இந்த சீரியலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இது 3.38 பெற்று ஏழாவது இடத்தை பிடித்திருக்கிறது.

8, காற்றுக்கென்ன வேலி சீரியல்
இந்த சீரியலில் வெண்ணிலாவின் திருமணத்தில் ஏற்பட்ட பல பிரச்சனைகள் மற்றும் திருமணத்தில் இருந்து வெண்ணிலா தப்பித்து வந்த சுவாரசியமான நிகழ்வுகள் நடந்த நிலையில் இந்த சீரியல் 2.85பெற்று எட்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.

9, தென்றல் வந்து என்னை தொடும் சீரியல்
இந்த சீரியலில் அபி கர்ப்பமாக இருக்கும் நிலையில் வெற்றிக்கு அடுத்தடுத்து வரும் பிரச்சனைகள் மற்றும் அந்த பிரச்சனைகளில் இருந்து தன்னுடைய குடும்பத்தை வெற்றி எப்படி காப்பாற்றுகிறார் என்ற நிகழ்வுகள் நடந்த நிலையில் இந்த சீரியல் 2.82 பெற்று 9-வது இடத்தை பிடித்திருக்கிறது.

10, செல்லம்மா சீரியல்
இந்த சீரியலில் சித்துவின் திருமணம் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெற இருந்த நிலையில் திருமணத்தில் வெளிவந்த பல உண்மைகளின் காரணமாக இந்த சீரியலும் ரசிகர்களை கவர்ந்து 2.75 பெற்று 10-வது இடத்தை பிடித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications