பாக்கியலட்சுமியை தொடர்ந்து விஜய் டிவியில் முடிவுக்கு வரும் டாப் சீரியல்.. இனி கதை இதுதானா?
சென்னை: விஜய் டிவி சீரியல்கள் இப்போ மக்களிடையே அதிக வரவேற்பு பெற்று வருகின்றன. வாராவாரம் வெளியாகும் டிஆர்பி ரேட்டிங்கில், சன் டிவிக்குக் கடுமையான போட்டியை கொடுத்து வருகின்றன. இந்த வாரமும், விஜய் டிவியின் டாப் 10 சீரியல்கள் பட்டியல் வெளியாகி, பல சுவாரசியமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.

கிடுகிடுவென உயர்ந்த டிஆர்பி
இந்த வாரம் வெளியான டிஆர்பி பட்டியலில், நம்பர் ஒன் இடத்தை பிடித்தது வேறு எந்த சீரியலும் இல்லை, சிறகடிக்க ஆசை சீரியல்தான். 8.02 புள்ளிகளை பெற்று, முதல் இடத்தைப் பிடித்து சன் டிவி சீரியல்களுக்கே கடும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.
சீரியல்களின் பட்டியல்
அய்யனார் துணை - 7.60 புள்ளிகளுடன் இரண்டாவது இடம். சின்ன மருமகள்- 7.16 புள்ளிகளுடன் மூன்றாவது இடம். பாண்டியன் ஸ்டோர்ஸ் - 6.01 புள்ளிகளுடன் நான்காவது இடம். மகாநதி - 5.01 புள்ளிகளுடன் ஐந்தாவது இடம். சிந்து பைரவி - 4.42 புள்ளிகளுடன் ஆறாவது இடம்.பூங்காற்று திரும்புமா - 3.03 புள்ளிகளுடன் ஏழாவது இடம். மகளே என் மருமகளே - 2.45 புள்ளிகளுடன் எட்டாவது இடம். தென்றலே மெல்ல பேசு - 2.31 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடம். கண்மணி அன்புடன் - 2.09 புள்ளிகளுடன் பத்தாவது இடம்.
ஒரு சீரியல் முடிவுக்கு வருகிறது
இப்படி, சில சீரியல்கள் டிஆர்பியில் முன்னேறிக் கொண்டிருக்க, சில சீரியல்களோ அதளபாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கின்றன. தனம் சீரியல் 2.09 புள்ளிகளையும், சக்திவேல் சீரியல் 2.08 புள்ளிகளையும் பெற்று, மிகவும் மோசமான நிலையில் உள்ளன.
அவற்றுக்கெல்லாம் ஒரு படி மேலே போய், விஜய் டிவி சீரியல்களிலேயே மிகவும் குறைவான டிஆர்பி ரேட்டிங், அதாவது வெறும் 1.89 புள்ளிகளைப் பெற்றது ஆஹா கல்யாணம் சீரியல். இந்த சீரியல், கடந்த 2023-ல் இருந்து திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகி வருகிறது.
டிஆர்பியில் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வந்ததால், இந்த சீரியலை முடிவுக்குக் கொண்டு வர விஜய் டிவி முடிவு செய்துள்ளதாம். சமீபத்தில் ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்ற பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், இப்போது ஆஹா கல்யாணம் சீரியலும் முடிவுக்கு வரப்போகிறது என்பது ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தியாகத்தான் இருக்கிறது. விரைவில் இந்த சீரியலின் கிளைமாக்ஸ் ஒளிபரப்பாக உள்ளது. மேலும், இந்த சீரியலுக்குப் பதில், புத்தம் புதிய தொடர் ஒன்றை களமிறக்கவும் விஜய் டிவி திட்டமிட்டுள்ளதாம்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications