விஜய் டிவி சீரியல் ஹீரோவுக்கு நடந்த திடீர் கல்யாணம்..அவர் பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் அண்ணன்தான்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வீட்டுக்கு வீடு வாசல் படி என்ற சீரியலில் கதாநாயகனாக கண்ணன் கேரக்டரில் நடிகர் அவினாஷ் நடித்து வருகிறார். இவர் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கேரக்டரில் நடித்து வரும் நடிகை அக்ஷிதாவின் அண்ணன் தான். இந்த நிலையில் தான் அவினாஷ் 13 வருடங்களாக காதலித்து வந்த பெண்ணையே திருமணம் செய்து இருப்பதாக புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
நடிகர் அவினாஷ் ஆரம்பத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான அழகு சீரியல் மூலமாகத்தான் சின்னத்திரையில் அறிமுகமானார். அதற்கு பிறகு டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருந்தார். அதிலும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு இறுதிவரை அந்த நிகழ்ச்சியில் பயணித்திருந்தார். ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு டான்ஸ் பிராக்டீஸ் செய்து கொண்டிருக்கும் போது அவருடைய காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சில மாதங்களாக ரெஸ்ட்டில் இருந்தார்.

அதேபோல சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலிலும் கயலின் தம்பியாக அவினாஷ் நடித்திருந்தார். ஆனால் அந்த சீரியலில் பாதியில் இருந்து விலகி விட்டார். இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் வீட்டுக்கு வீடு வாசல் படி என்ற சீரியலில் கண்ணன் கேரக்டரில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகனாக நடிகர் திரவியம் நடித்தாலும் அவரை தொடர்ந்து அடுத்த கதாநாயகனாகத்தான் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அவினாஷ் தங்கை அக்ஷிதா ஏற்கனவே பல சீரியல்களிலும் வில்லி கேரக்டரில் நடித்திருக்கிறார். அதிலும் காற்றுக்கென்னவேலி சீரியலில் சூர்யாவின் தங்கையாக வெண்ணிலாவுக்கு வில்லியாக நடித்திருப்பார். இப்போது அமிர்தாவாக பாக்கியலட்சுமி சீரியலில் பாசிட்டிவ் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவினாஷ் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய திருமண புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

அதில், 13 வருடங்களாக காதலித்து வந்த என்னுடைய காதலியை நான் கரம் பிடித்து விட்டேன். ஆரம்பத்தில் நட்பாக தொடங்கிய எங்களுடைய பயணம் காதலின் மூலமாக இன்று கல்யாணத்தில் இணைந்திருக்கிறது. இறுதியில் நாங்கள் இரு வீட்டாரின் சம்மதம் பெற்று திருமணம் நடத்திவிட்டோம் என்று சந்தோஷமாக அவினாஷ் தன்னுடைய திருமண புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

இன்று தம்பதிக்கு சின்னத்திரை ரசிகர்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications