விஜய் டிவி கதாநாயகிக்கு திடீர் நிச்சயதார்த்தம்.. இணையத்தில் வெளியான புகைப்படம்.. குவியும் வாழ்த்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான அன்புடன் குஷி சீரியலில் கதாநாயகியாக நடித்த மான்சி ஜோஷிக்கு என்கேஜ்மென்ட் முடிவடைந்து இருக்கிறது. அப்போது எடுத்த புகைப்படங்களை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
விஜய் டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் புதியது புதியதாக தொடங்கப்படுவது போலவே சீரியல்களும் தொடங்கப்பட்டு வருகிறது. விஜய் டிவியில் சீரியல்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் எளிமையாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள். இணையத்திலும் பயங்கர ஆக்டிவ் ஆக நடிகைகள் இருக்கிறார்கள்.

ஒரு சில சீரியல்களில் விஜய் டிவியில் நடித்து விட்டால் அதே சேனலில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்கள். சீரியலில் அழுகாச்சி காட்சிகளில் நடிக்கும் நடிகைகளின் நிஜ கேரக்டர் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தெரிய வருகிறது.
அதுபோல விஜய் டிவியில் ஒரே ஒரு சீரியலில் நடித்திருந்தாலும் நடிகை மான்சி ஜோஷிக்கு இணையத்தில் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் நடிகர் பிரஜன் நடித்த அன்புடன் குஷி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த சீரியல் சில மாதங்களில் முடிவுக்கு வந்துவிட்டாலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

மான்சி ஜோஷியின் சொந்த ஊர் கர்நாடகா தான். அங்கு 1994 ஆம் ஆண்டு பிறந்த இவர் பள்ளி படிப்பு எல்லாம் பெங்களூரில் முடித்திருந்தாலும் கல்லூரி படிப்பை மங்களூரில் படித்திருக்கிறார். கல்லூரி காலத்தில் இருக்கும் போது இவர் மாடலிங்கில் கவனம் செலுத்தி வந்திருக்கிறார். அதன் மூலமாக இவருக்கு பல வாய்ப்புகளும் கிடைத்திருக்கிறது.
அதுபோல மான்சி நடிகையாக மட்டுமல்லாமல் சிறந்த நடன கலைஞராகவும் இருக்கும் இவர் நடிகையாக மாறுவதற்கு முன்பே டிக் டாக் மூலம் அதிகமான வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாக இருந்திருக்கிறார். ஆரம்பத்தில் கன்னட மொழி சீரியல்களில் தான் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

தமிழில் 2020 ஆம் ஆண்டு விஜய் டிவியில் அன்புடன் குஷி சீரியலில் நடித்திருந்தார். அந்த சீரியல் முடிவடைந்ததும் அதற்குப் பிறகு மலையாளத்தில் சந்திரகாந்தம் என்ற சீரியலில் நடித்து வருகின்றார். இவருக்கு தமிழைப் போலவே மலையாளத்திலும் ரசிகர்கள் இருக்கின்றனர்.
இந்த நிலையில் இவருக்கும் ராகவா எல்லோருக்கும் தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடத்த முடிந்துள்ளது. அவருடைய எங்கேஜ்மெண்டில் கலந்து கொண்ட பல நடிகைகள் இந்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தனர். அதைத்தொடர்ந்து மான்ஸி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருங்கால கணவரோடு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். இவருக்கு சின்ன திரையில் ரசிகர்கள் மற்றும் நடிகைகள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.













Click it and Unblock the Notifications