விஜய் டிவியில் ‘திரவியம்’ நடிக்கும் புது சீரியல்.. சன் டிவி கதாநாயகி தான் வில்லி.. இதை கவனிச்சீங்களா?
சென்னை: விஜய் டிவியில் நடிகர் "திரவியம்" நடிக்கும் புது சீரியலுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அந்த சீரியலுக்கு வீட்டுக்கு "வீடு வாசல் படி" என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
ஏற்கனவே இதே பெயரில் ஒரு திரைப்படத்தின் பாடலும் இருக்கிறது. அதுபோல ஒரு பாடலின் முதல்வரையும் இதுதான் சமீபத்தில் பல திரைப்படங்களில் பெயர்களையே சீரியலுக்கு வைத்து வரும் நிலையில் அந்த வரிசையில் என்ன பெயரோ இந்த சீரியலும் இடம் பிடித்திருக்கிறது.

நடிகர் திரவியம், "ஈரமான ரோஜாவே" சீரியலின் மூலமாகவே சீரியலில் அறிமுகமாகி இருந்தார். முதல் சீரியலில் இவர் கிராமத்து கெட்டப்பில் இருந்தார். அதைத் தொடர்ந்து ஈரமான ரோஜாவே சீரியலில் இரண்டாவது பாகத்தில் பணக்கார வீட்டு பையனாகவே நடித்திருந்தார். ஆனாலும் அந்த சீரியல் மூலமாகவே அதிகமான ரசிகர்களை கவர்ந்திருந்தார். இவருக்கு முதல் பாகத்திலேயே அதிகமான ரசிகர்கள் உண்டு.
அதற்கு பிறகு இரண்டாவது சீசனிலும் பல இளம் பெண்களை ரசிகைகளாக பெற்றிருந்தார். இந்த நிலையில் ஈரமான ரோஜாவே சீரியல் முடிவடைந்த பிறகு இவர் அடுத்ததாக எந்த சீரியலிலும் காணவில்லையே என்று திரவியத்தை ரசிகர்கள் தேடிக் கொண்டிருந்த நிலையில் இப்போது வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற சீரியலில் புதுவிதமாக கெட்டப்பில் களம் இறங்கி இருக்கிறார்.
இந்த சீரியலில் திரவியம், "ஒரு குழந்தைக்கு அப்பாவாக, பணக்கார பிசினஸ்மேனாக இவர் நடிக்கிறார். அந்த குழந்தை விஜய் டிவியில் ஒளிபரப்பான "தென்றல் வந்து என்னை தொடும்" சீரியல் அபியின் குழந்தையாக நடித்த குட்டி பாப்பா தான் இப்போது இந்த சீரியலில் திரவியத்தின் குழந்தையாக நடிக்கிறார்.
அதுபோல இந்த சீரியலின் ப்ரோமோவில் புள்ளி வைத்து அழகாக மொத்த குடும்பத்தின் கதையையும் சொல்லிவிட்டார்கள். அதே நேரத்தில் சீரியலில் வில்லி இல்லாமல், எந்த சீரியலும் இல்லை என்று சொல்லும் வகையில் தான் இந்த சீரியலும் இருக்கிறது. இந்த சீரியலில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த "பாண்டவர் இல்லம்" சீரியலில் கதாநாயகியாக நடித்தி ஆர்த்தி தான் இந்த சீரியலில் வில்லியாக களம் இறங்கி இருக்கிறார்.
அதுபோல இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் பாரதிகண்ணம்மா சீரியலில் அகிலனாக நடித்த நடிகர் சுதீஷும் இதில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அதுபோல இன்னும் பல பிரபலங்கள் இதில் நடிக்கிறார்கள். இந்த சீரியலை இயக்குனர் பிரவீன் பென்னட் தான் இயக்குகிறார். ஆனால் சீரியலுக்கான ப்ரோமோ வெளியானதுமே இதற்கு அதிகமான நெகட்டிவ் கருத்துக்களும் வந்து கொண்டிருக்கிறது. சீரியல் எப்போது ஒளிபரப்பாக போகிறது என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.
-
விஜய் டிவியில் மீண்டும் சேரும் பாக்கியலட்சுமி கோபி பாக்கியா.. ஹீரோ யாரு தெரியுமா? பிக் பாஸ் பிரபலம் ஹேப்பி -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு












Click it and Unblock the Notifications