Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரியங்காவிற்கு விஜய் டிவி சார்பாக கொடுக்கப்பட்ட பரிசு.. அட பாவமே இப்படியா யோசிப்பாங்க? பாவம் வசி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்காவிற்கு கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. அவருடைய திருமணத்திற்காக விஜய் டிவி சார்பாக அறந்தாங்கி நிஷா ஒரு பரிசு கொடுத்திருக்கிறார். அந்த பரிசு பார்ப்பவர்களை பதற வைக்கும் வகையில் இருக்கிறது. ஆனால் அந்த பரிசை பிரியங்கா தன்னுடைய கணவர் வசிக்கு கொடுப்பதாக கூறி இருக்கிறார்.

விஜய் டிவியின் செல்லப் பிள்ளையாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரியங்கா பற்றிய செய்திகள் இணையத்தில் எப்போதுமே இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் தன்னை பற்றி பரவி வரும் வதந்திகளுக்கும், சர்ச்சைகளுக்கும் பிரியங்கா எந்த இடத்திலும் விளக்கம் கொடுத்தது கிடையாது. விஜய் டிவியில் பல தொகுப்பாளர்கள் விலகியது கூட பிரியங்காவால் தான் என்று பெரிய குற்றச்சாட்டு இருக்கிறது.

Priyanka Vijay TV

குற்றச்சாட்டு

கடத்த வருடத்தில் மணிமேகலை குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக விலகி இருந்தார். அப்போது அதற்கு காரணம் பிரியங்கா தான் என்று பெரிய குற்றச்சாட்டை மணிமேகலை வைத்திருந்தார். இதனால் பலரும் பிரியங்காவை திட்ட தொடங்கிவிட்டனர். அதோடு டிடி, விஜே பாவனா போன்ற பலர் விஜய் டிவியை விட்டு வெளியேறியதற்கு காரணம் பிரியங்கா தான், பிரியங்காவை எதிர்ப்பவர்களை பிரியங்கா விஜய் டிவியில் வேலை பார்க்க விடாமல் ஏதாவது செய்து விடுகிறார் என்ற பலர் கூறி வருகிறார்கள். ஆனால் இது குறித்து எந்த இடத்திலும் பிரியங்கா தன்னுடைய தரப்பு விளக்கத்தை கொடுக்கவில்லை.

திடீர் திருமணம்

அதே நேரத்தில் வழக்கம் போல தன்னுடைய வேலைகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் பிரியங்காவிற்கு டிஜே வசியுடன் இரண்டாவது திருமணம் நடைபெற்றது. பிரியங்கா ஏற்கனவே விஜய் டிவி பிரபலம் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் சில வருடங்களிலேயே விவாகரத்தில் முடிந்து விட்டது.

Priyanka Vijay TV

இரண்டாவது திருமணம்

யாரிடமும் சொல்லாமல் எளிமையாக இரண்டாவது திருமணத்தை பிரியங்கா நடத்தி இருக்கிறார். திருமண புகைப்படங்களை பிரியங்கா வெளியிட்டதும் பல்வேறு வதந்திகளும் பரவி வருகிறது. அது குறித்து கூட எந்த இடத்திலும் பிரியங்கா விளக்கம் கொடுக்கவில்லை. திருமணத்திற்கு பிறகு ஹனிமூனுக்கு லண்டனுக்கு சென்றிருந்த பிரியங்கா ஒரு வாரம் மட்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை, அதற்கு பிறகு மீண்டும் கலந்து கொண்டு இருக்கிறார்.

அறந்தாங்கி நிஷா செய்த சம்பவம்

சூப்பர் சிங்கர் போலவே விஜய் டிவியில் ஸ்டார் மியூசிக், ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா போன்ற நிகழ்ச்சிகளை பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார். அதில் ஊ.. சொல்றியா ஊ ஊ.. சொல்றியா நிகழ்ச்சியில் இந்த வாரம் சில சம்பவங்கள் நடந்திருக்கிறது. அதாவது இந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு ஒரு வெயிட் மிஷின் கொடுக்கப்பட்டிருக்கிறது, அதில் கால் வைத்து நிற்கும்போது கரண்ட் எர்த் ஆகிறது. இதனால் எல்லோரும் பதறிப் போகிறார்கள்.

பிரியங்காவிற்கு கிடைத்த கிப்ட்

அறந்தாங்கி நிஷா இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும்போது அவர்தான் முதலில் அந்த மிஷினில் நின்று எர்த் ஆனதும் துடிக்கிறார். பிறகு பிரியங்கா, மாகாபா என்று எல்லோரும் அந்த மிஷினில் ஏறி நின்று வலியால் துடிக்கிறார்கள். கடைசியாக அறந்தாங்கி நிஷா பிரியங்காவிடம் உன்னுடைய கல்யாணத்திற்கு விஜய் டிவி சார்பாக இந்த மெஷின் தருகிறோம் கொண்டு போ என்று சொல்ல, பிரியங்காவும் அதை வாங்கி வைத்துவிட்டு இதை என்னுடைய புருஷன் வசிக்கு கொடுக்கப் போறேன் என்று சொல்ல அங்கு இருந்த எல்லோரும் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Priyanka Vijay TV

ரசிகர்களின் எதிர்பார்ப்பு

இதை பார்க்கும்போது சின்னபுள்ள தனமா இருக்கு என்று யோசிக்க தோன்றினாலும் விஜய் டிவி தரப்பில் இருந்து பிரியங்காவிற்கு எந்த கிப்ட்டும் கொடுக்கவில்லையா? அதனால் தான் அறந்தாங்கி நிஷா இந்த மிஷினை கிப்டாக கொடுக்கிறாரா? என்றும் கேள்விகள் எழுகிறது. ஏற்கனவே பிரியங்காவிற்கு முதல் திருமணம் நடைபெற்ற போது விஜய் டிவி தரப்பில் இருந்து அந்த திருமணத்தை நடத்தி வைத்து அதை எபிசோடாக வெளியிட்டனர். அதுபோல வசி- பிரியங்காவிற்கு திருமணம் நடத்தி வைக்கப் போகிறார்களா? இல்லை ஏற்கனவே பட்டபாடு போதும் என்று பிரியங்கா அதற்கு மறுப்பு தெரிவிக்கிறாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+