எதிர்நீச்சல் 2 சீரியலில் என்ட்ரி கொடுக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை.. அப்போ செம சம்பவம் இருக்கு
சென்னை: சன் டிவியில் வரும் திங்கள் முதல் எதிர்நீச்சல் 2 சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீரியலிலில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் நடிகையும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் எதிர்நீச்சல் 3 சீரியல் வரும் திங்கள்கிழமை முதல் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. அதுபோல இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் தான் இயக்குகிறார்.

முதல் பாகத்தை இயக்கிய திருச்செல்வம் இரண்டாவது பாகம் வருவதற்கு வாய்ப்பே இல்லை வேறு கோணத்தில் கதை வரும் என்று எதிர்நீச்சல் சீரியல் முடிவடைந்த நேரத்தில் சொல்லியிருந்தார். ஆனால் இப்போது மீண்டும் எதிர்நீச்சல் சீரியலில் முடிவில் இருந்தே இரண்டாவது பாகம் தொடங்குகிறது.
அதே நேரத்தில் முதல் சீசனில் நடித்த ஒரு சில நடிகர்கள் இரண்டாவது சீசனிலும் தொடர்கிறார்கள். ஒரு சிலர் மட்டும் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார்கள். அதில் கதாநாயகியாக நடித்த மதுமிதா சீரியல் இருந்து விலகி இருக்கிறார். ஜனனி கேரக்டரில் விஜே பார்வதி நடிக்கிறார். விஜே பார்வதி ஏற்கனவே ஜீ தமிழில் ஒளிபரப்பான சீரியலில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
தேவயானிக்கு மருமகளாக நடித்த பார்வதி இப்போது இந்த சீரியலில் ஜனனியாக நடிக்கிறார். இது ஒரு பக்கம் இருந்தாலும் ஆதி குணசேகரன் ஆக மீண்டும் அதே வேலராம மூர்த்தி தான் தொடர்வதாக தெரிகிறது. ஏற்கனவே மாரிமுத்து நடித்து வந்த கேரக்டரில் வேலராமமூர்த்தி நடிப்பது குறித்து அதிகமான விமர்சனங்கள் எழுந்து வந்தது.

ஆனாலும் இயக்குனர் வேலராமமூர்த்தி தான் இந்த சீரியலுக்கு சரியாக இருக்கிறார் என்று கூறியிருந்தார். அதனாலயே அவர் இரண்டாவது பாகத்திலும் தொடர்கிறார் போல. அது மட்டுமல்லாமல் முதல் பாகத்தில் வீட்டிற்குள் எதிர்நீச்சல் அடித்த குணசேகரன் வீட்டுப் பெண்கள் இப்போது வெளி உலகத்தில் எதிர்நீச்சல் அடிப்பது போன்று கதை பயணிக்க போகிறது.
அதுபோல சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணியாக நடிக்கும் சல்மா அருண் எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சல்மா அருண் ஏற்கனவே ஜீ தமிழில் ஒளிபரப்பான அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் வில்லியாக நடித்திருந்தார். அதை தொடர்ந்து தான் அவருக்கு சிறகடிக்க ஆசை சீரியலிலும் வில்லி கேரக்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் இவர் எதிர்நீச்சல் சீரியலிலும் வில்லியாக நடிக்கப் போகிறாரா? அல்லது பாசிட்டிவ் கேரக்டரில் வரப்போகிறாரா? என்பது பெரும் கேள்வியாக இருக்கிறது. ஆனால் தற்போது வந்த ப்ரோமோக்களில் சல்மா காட்டப்படவில்லை. அதே நேரத்தில் சல்மா இந்த சீரியலில் எந்த மேக்கப்பும் இல்லாமல் புடவையில் எளிமையாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் இவருடைய கேரக்டர் என்னவாக இருக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications