ரிசல்ட்காக காத்திருக்கும் விஜய பிரபாகரன்.. விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா செய்த நெகிழ்ச்சி
விருதுநகர்: நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இந்த நிலையில் விஜய பிரபாகரனின் அம்மாவான பிரேமலதா தன்னுடைய கணவர் விஜயகாந்த் நினைவிடத்தில் தொண்டர்களுக்கு அன்னதானம் போட்டு இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒட்டுமொத்த உலகமும் எதிர்பார்த்து இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதியோடு முடிவடைந்து இருந்த நிலையில் அதன் ரிசல்ட்காக என்று எல்லோரும் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். அதே நேரத்தில் தமிழகத்தில் ஸ்டார் தொகுதிகளில் ஒன்றான விருதுநகர் தொகுதியில் நடிகர் விஜயகாந்தின் மகன் ஆன விஜய பிரபாகரன் போட்டியிட்டு இருக்கிறார்.

இதே தொகுதியில் விஜய பிரபாகரன் தேமுதிகவின் சார்பாகவும், நடிகை ராதிகா சரத்குமார் பாஜகவின் சார்பாகவும் போட்டியிடுகிறார்கள். அதோடு திமுகவில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பாக இந்த தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்ற மாணிக்கம் தாகூரும் போட்டியிடுகிறார். விஜயகாந்தின் சொந்த தொகுதியான விருதுநகரில் அவருடைய மறைவிற்குப் பிறகு விஜயகாந்த் மகன் போட்டியிட்டு இருப்பதால் அவர் வெற்றி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு மக்களுக்கு அதிகமாக இருக்கிறது.
அதே நேரத்தில் காலையில் இருந்து வெளியான வாக்குகளின் நிலவரத்தின்படி விஜய பிரபாகரன் முதலிடத்தில் இருந்தார். ஆனால் நண்பகலுக்குப் பிறகு வாக்குகளில் வித்தியாசம் ஏற்பட்டது. ஏற்கனவே இரண்டு முறை விருதுநகர் தொகுதியில் எம்பி ஆக இருந்த காங்கிரஸ் கட்சி வேட்பாளரான மாணிக்கம் தாகூர் இப்போது முதலிடத்தில் இருக்கிறார். குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாவது இடத்தில் விஜய பிரபாகரன் இருக்கிறார்.
இதனால் விஜயகாந்தின் ரசிகர்களும் தொண்டர்களும் என்ன நடக்கப் போகிறதோ என்ற பதட்டத்தோடு இருக்கும் நிலையில் விஜயகாந்தின் மனைவியான பிரேமலதா விஜயகாந்த் நினைவு இடத்தில் தொண்டர்களுக்கு வழக்கம் போல அன்னதானம் கொடுத்துவிட்டு, விஜய்காந்தின் சமாதியில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் பரவி வருகிறது. விஜயகாந்தின் மறைவால் அவருடைய ரசிகர்கள் இன்னும் வருத்தத்தில் இருந்து மீண்டு வராத நிலையில் இன்று அவருடைய மகன் வெற்றி பெறுவாரா? இல்லையா? என்ற பதைபதைப்பில் காத்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications