விஜயகாந்த் படத்தை அவங்க கூட கம்பேர் பண்ணாதீங்க! கோபப்பட்ட அம்பிகா! சப்போர்ட்டுக்கு வந்த பிரபலம்
சென்னை: நடிகர் விஜயகாந்தின் 100வது திரைப்படமான 'கேப்டன் பிரபாகரன்' தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் மற்றும் நடிகை அம்பிகா ஆகியோர் ரசிகர்களுடன் இணைந்து படத்தை பார்த்தனர். அப்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில் நடிகை அம்பிகா பேசியது, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அம்பிகாவின் பிரமிப்பு
அம்பிகா, "இந்த படம் இத்தனை வருடம் கழித்து வந்த போதும், முதல் முறை வருவது போல ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவு பார்ப்பதற்கே சந்தோஷமாக இருக்கிறது" என்று கூறினார். "இப்போதுள்ள படங்களில் பல கிராபிக்ஸ், சிஜி எல்லாம் செய்கிறார்கள். ஆனால் 'கேப்டன் பிரபாகரன்' படத்தில் அப்படி எதுவுமே கிடையாது. இதில் நடித்த மனிதர்கள், குதிரைகள் என எல்லாமே ரியலாக எடுக்கப்பட்டது தான்" என்று அவர் குறிப்பிட்டார்.
அதிசயமான வரவேற்பு
"இந்த படத்திற்கு முதல் முறை எந்த வசனத்திற்கு எல்லாம் கைதட்டல் கிடைத்ததோ, அதேபோல இப்போது ரீ-ரிலீஸ் ஆகி இருக்கும்போதும் ரசிகர்கள் கைதட்டுகிறார்கள். இது பார்ப்பதற்கே வியப்பாகவும் இருக்கிறது" என்று அம்பிகா ஆச்சரியத்துடன் கூறினார். மேலும், "இந்த படத்தை விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனுடன் பார்ப்பது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது" என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
புஷ்பா ஒப்பீடு - அம்பிகாவின் கோபம்
அப்போது, ஒரு செய்தியாளர், "கேப்டன் பிரபாகரன் படத்தை 'புஷ்பா' படத்துடன் ஒப்பிடுகிறார்களே?" என்று கேள்வி எழுப்ப, அம்பிகா கோபத்துடன் பதிலளித்தார். "யார் அப்படி ஒப்பிடுவது? வேண்டுமானால், 'கேப்டன் பிரபாகரன்' படத்தைப் போல 'புஷ்பா' இருக்கிறது என்று சொல்லுங்கள். ஏனென்றால், எந்த படம் முதலில் வந்தது? இந்த படம் எந்த படத்தையும் பார்த்து எடுத்தது கிடையாது. இப்படி ஒப்பிடும் வேலையெல்லாம் வைத்துக்கொள்ளாதீர்கள், இந்த லொள்ளு வேண்டாம்" என்று ஆவேசமாக பேசினார்.
மன்சூர் அலிகானின் ஆதரவு
அம்பிகாவின் பேச்சைக் கேட்ட நடிகர் மன்சூர் அலிகான், "தேவையில்லாத முடிச்சுகளெல்லாம் போடாதீர்கள் ப்ரோ. இப்படி மத்த படத்தோட ஒப்பிடாதீர்கள். இந்த படமும் 100 நாள் ஓட வேண்டும், அதுதான் எங்களுடைய ஆசை" என்று அமைதியாக கூறினார்.
படத்தின் வெற்றி
'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் முதல் வெளியீட்டில் வசூலில் சாதனை படைத்தது. அதேபோல, இந்த ரீ-ரிலீஸிலும் மகத்தான வெற்றியை பெறும் என்று கணிக்கப்படுகிறது. சென்னை கமலா தியேட்டரில் இன்று காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டபோது, முதல் காட்சி ஹவுஸ்புல்லாகி ரசிகர்கள் விஜயகாந்தை முதல் முறை பார்ப்பது போலவே ஆர்ப்பரித்து விசில் அடித்து உற்சாகப்படுத்தியுள்ளனர்.
அம்பிகா, மன்சூர் அலிகான் ஆகியோரின் இந்த கருத்துக்கள், விஜயகாந்தின் ரசிகர்கள் மட்டுமல்லாமல், தமிழ் திரையுலகினரிடையும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications