Vijayakanth: இந்த டயலாக்கை இதுவரை பேசாதவர்கள் விஜயகாந்தும் ராமராஜனும்! அப்படி என்னய்யா வசனம் அது?
சென்னை: இது போன்ற ஒரு டயலாக்கை பேசி நடிக்காதவர்கள் என்றால் அவர்கள் விஜயகாந்தும் ராமராஜனும்தான்! அப்படி என்னதான் அந்த வசனம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: யேய்.. இஞ்சாருய்யா... நம்ம மருதக்காராம்ல... இப்படி டயலாக் பேசி நடிக்காத மருதக்காரெங்கென்னா அது விஜய்காந்த்தும்...அப்புறம் ராமராஜனும் தான்....
ஆனா ரொம்ப ரொம்ப 'மதுரையான்'னு இவங்க படங்கள் பார்க்கும் போதே பீத்தலில் தெரிஞ்சிக்கலாம்... குமரேசன் மதுரைக்கு அடுத்துள்ள மேலூர்க்காரர். மேலூர் கணேஷ் திரையரங்கத்தில் டிக்கெட் கிழித்துக் கொண்டிருந்தார். மேலும் கணேஷ் திரையரங்கம் ஓனர் மீனாட்சி சுந்தரம் நல்ல மனுஷன்.
இயக்குனர் காரைக்குடி நாராயணன் அச்சாணி படமெடுக்க காசில்லாமல் தவித்த போது பண உதவி செய்தவர். அந்த நட்புல குமரேசனை "அழைச்சுட்டு போய் சினிமால ஏதாவது வேலை இவனுக்கு கொடுங்க"ன்னு அனுப்பி வைக்கிறார்.
எம்.ஆர்.குமரேசனும் காரைக்குடி நாராயணன் அலுவலகத்தில் ஆல் இன் ஆல். ஏறக்குறைய ஆஃபீஸ் பாய் மாதிரி தான்... அப்படி அவர் அலுவலகப் பையனாக இருந்த காலத்தில் மதுரையிலிருந்து ஒரு சிபாரிசு கடிதத்தோடு ஒரு இளைஞர் நாராயணனை காண வருகிறார். வாசலில் நிற்கும் நபர் நாராயணனை காண வந்திருப்பதாக சொல்ல, From மதுரை என்றால் திடீர் சென்னைவாசியான குமரேசனுக்கு சந்தோஷம் இருக்கும் தானே..
உள்ளே ஓடிப் போய் தகவல் தெரிவிக்கிறார். "சார்.. மதுரையிலிருந்து ஒருத்தர் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார்..." குமரேசன் சொன்னதும் உள்ளே வந்த விஜயராஜ் என்கிற அந்த இளைஞர் காரைக்குடி நாராயணனிடம் அவரின் சிபாரிசு கடிதத்தை படிக்கிறார். ஆனாலும் சான்ஸ் தர முடியாததை விளக்கி சொல்லி அனுப்புகிறார் நாராயணன்....
பின்னாளில் 82ல் அலுவலக பையன் குமரேசன் துணை இயக்குனராகி வசனம் சொல்ல சிபாரிசு கடிதத்தோடு வந்தவர் நாயகனாக நடித்தது என்பது இயற்கை செய்த உழைப்பின் நீதி. துணை இயக்குனர்: ராமராஜன். கதாநாயகன்: விஜயகாந்த்.
படம்: சிவந்த கண்கள். வருடம்: 1982.
இது தான்யா வாழ்க்கையின், இயற்கையின், கடவுளின் நியதி...
மூன்று நான்கு வருடங்கள் கழிந்தன...1987ம் வருடம் பிறந்த போது அந்த இரண்டு மதுரைக்காரன் படங்களும் போட்டி போட்ட சம்பவம் நடந்தது. ஆம்..வெற்றி ஹீரோவான சிபாரிசுக் கடித நடிகரின் படமும், அலுவலகப் பையன் படமும் போட்டியிட்டன...
87 தமிழ் புத்தாண்டில் அலுவலக பையனின் 'எங்க ஊரு பாட்டுக்காரன்' படமும், சிபாரிசு கடிதம் தந்த விஜய்காந்தின் 'வீரபாண்டியன்' படமும் போட்டி போட்டன... இது தான் கடவுளால் எழுதப்பட்ட சரித்திரம்..சரித்திரம் அதோடு நின்று விடவில்லை... பின்னாளில் அரசியலில் இருவரும் எதிரெதிர் துருவங்களாக நின்றார்கள்..... எல்லாம் இயற்கை நியதி...
ராமராஜன் Come back கொடுத்திருக்கிறார். விஜயகாந்த் பிரிந்து விட்டதை எண்ணி அவர் கலங்கி இருப்பார். அவர் அஞ்சலி செலுத்தி விட்டு விஜய்காந்த் பற்றி பேசி இருக்கிறார். மருதக்காரெங்கென்னாலே பாசக்கார பயலுக தானே..... இவ்வாறு செல்வன் அன்பு தெரிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications