விஜயகாந்த் மூத்த மகனுக்கு கல்யாணம்! அண்ணி பற்றி இளைய மகன் சொன்ன விஷயம்.. குவியும் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமாவிலும் அரசியலிலும் பிரபலமடைந்த நடிகர் விஜயகாந்த் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு உடல்நிலை குறைபாட்டால் காலமானார். அவருடைய மறைவுக்கு பிறகு அவருடைய மூத்த மகன் அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இளைய மகன் சண்முக பாண்டியன் திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சண்முக பாண்டியன் நடித்த படைத்தலைவன் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் தன்னுடைய அண்ணன் விஜய பிரபாகரனுக்கு விரைவில் திருமணம் நடைபெறப்போகிறது என்று சண்முக பாண்டியன் கூறி இருக்கிறார்.

நடிகர் விஜயகாந்துக்கு அறிமுகமே தேவையில்லை. நடிகராகவும் அரசியல் பிரமுகராகவும் தன்னால் முடிந்த அளவிற்கு பலருக்கும் உதவிகள் செய்து இருக்கிறார். இவர் பிரேமலதா என்பவரை திருமணம் செய்திருந்த நிலையில் அவருக்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். விஜயகாந்த்தை சினிமாவில் பலரும் பார்த்து வியந்து இருக்கிறார்கள். அவர்களுடைய நிஜ வாழ்க்கையிலும் அவர் ஒரு ஹீரோ போல தான் வாழ்ந்து வந்தார்.

Vijayakanth Shanmuga Pandian

விஜயகாந்த் செய்த சாதனை

நடிகர் சங்கம் கடனில் தவித்த போது அதன் தலைவராக வந்து நடிகர் சங்கத்தை கடனிலிருந்து மீட்டெடுத்தார். அதேபோல தேமுதிக என்ற கட்சியை உருவாக்கி சினிமா வாழ்க்கையில் இருந்து விலகி அரசியலில் முழு ஈடுபாட்டுடன் நடந்து எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்திருந்தார். ஆனால் அவருடைய உடல்நிலை பிரச்சனையால் பல வருடங்களாக துவண்டு போயிருந்த விஜயகாந்த் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு மறைந்தார். பிரபலங்களும் பொதுமக்களும் அவர் செய்த உதவிகள் குறித்து இப்ப வரைக்கும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

விஜயகாந்தின் மகன்கள்

விஜயகாந்த் மறைவில் கூடிய மக்கள் கூட்டம் சென்னை நகரத்தையே அதிர்வடைய வைத்தது. விஜயகாந்த் செய்த உதவிக்காகவே இப்ப வரைக்கும் அவரை பலரும் பாராட்டி வருகின்றனர். விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரன் அப்பாவைப் போல அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அதேபோல இளைய மகன் சண்முக பாண்டியன் விஜயகாந்த் உயிரோடு இருக்கும்போது இரண்டு திரைப்படங்களில் நடித்திருந்தார். மூன்றாவதாக நடித்த படைத்தலைவன் திரைப்படத்தின் டிரைலர் காட்சிகளை விஜயகாந்த் தான் வெளியிட்டு இருந்தார்.

சண்முக பாண்டியன் பேட்டி

ஆனால் படம் வெளியாவதற்கு முன்பு அவர் காலமாகிவிட்டார். படைத்தலைவன் திரைப்படம் இப்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படைத்தலைவன் திரைப்படத்தை தொடர்ந்து கொம்பு சீவி திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் உடன் சண்முக பாண்டியன் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் சூட்டிங் முடிவடைந்து இருக்கிறது.

Vijayakanth Shanmuga Pandian

விஜய பிரபாகரனுக்கு திருமணம்

இந்த நிலையில் படைத்தலைவன் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பின்போது சண்முக பாண்டியன், "எங்க வீட்டுக்கு அண்ணி விரைவில் வருவார். எங்கள் அண்ணனுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கும். அதற்கான நேரம் வர இருக்கிறது" என்று தெரிவித்து இருந்தார். இதனால் விஜய பிரபாகரனுக்கு விரைவில் திருமணம் நடக்கலாம் என்று பலரும் கூறி வருகின்றனர். அதேபோல கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஜய பிரபாகரனுக்கு நிச்சயதார்த்தம் நடந்திருந்தது. அப்போது விஜயகாந்தின் உடல்நிலை பிரச்சனை இருந்ததால் இந்த திருமணம் நடக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+