பிரபல நடிகையின் "மிதப்பு".. நான் யார் தெரியுமா? வானத்தை போல விஜயகாந்த் போல வருமா? வியந்த விக்ரமன்
சென்னை: எப்படியும் விஜயகாந்த் சார் மீண்டு வந்துடுவார்னுதான் நாங்கெல்லாம் நம்பிட்டு இருந்தோம்.. கிரேட் மனிதர்.. அப்படியெல்லாம் ஒரு நடிகரை இனி பார்க்கவே முடியாது" என்று பிரபல டைரக்டர் விக்ரமன், ஒரு பேட்டியில் நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.
Rani Online யூடியூப் சேனலுக்கு டைரக்டர் விக்ரமன் தந்துள்ள பேட்டியில், "விஜயகாந்த் சார் மாதிரியான ஒரு ஜென்டில்மேனை பார்க்கவே முடியாது.. டெக்னீஷியன்களுக்கு மரியாதை தரக்கூடியவர். வானத்தைபோல நடிக்கும்போது, எப்படியும் அவர் 140 படங்களில் நடித்திருப்பார் என்று நினைக்கிறேன்..

புத்திசாலி: எல்லாமே அவருக்கு தெரியும்.. டைரக்ஷன் தெரியும், லென்ஸ் தெரியும், சிவாஜி சார் மாதிரியே இவருக்கும், லைட்டிங் தெரியும்.. ரொம்ப புத்திசாலி.. ஆனால், எங்குமே தனக்கு எல்லாமே தெரியும் என்று காட்டிக் கொண்டதில்லை..
எந்த டைரக்டர் அவர்கிட்ட கதை சொன்னாலும், அந்த கதை புடிக்கலன்னு, திருப்பி அனுப்பியதே இல்லை.. நீங்க வேணும்னா, அவர் வீட்டில் மேடம்கிட்ட கேட்டுப்பாருங்க.. ஒரு புரொடியூசர் நம்மள படம் எடுக்கறாங்க, டைரக்டர் நம்பி வந்திருக்கிறார் என்று, தனக்கு படம் பிடிக்கலேன்னாகூட நடிப்பார்.. அவங்க நம்பிக்கையை எப்போதும் குலைக்க மாட்டார்.. எங்கியுமே தலையிட மாட்டார். தப்பான ஷாட் எடுத்தால்கூட அது அவருக்கு தெரியும். ஆனாலும் காட்டிக்க மாட்டார்.. அதை பக்கத்தில் யார்கிட்டயும் கமெண்ட் அடிக்க மாட்டார்.
சீனியர் நடிகை: இந்த நேரத்தில் ஒரு சீனியர் நடிகையை பற்றி சொல்லணும்.. அவங்க என் படத்தில் நடிச்சாங்க.. பூவே உனக்காக படத்துக்கும் முந்தி இந்த சம்பவம் நடந்தது. அப்போதெல்லாம் மானிட்டர் கிடையாது..
எனவே, ஒரு காட்சி சரியில்லை என்று அவரிடம் திருத்தம் சொன்னேன். மறுபடியும் அந்த சீனை நடிக்க சொன்னேன்.. ஆனால், உடனே அந்த நடிகை என் அசிஸ்டென்ட்டிடம், "நான் எவ்வளவு பெரிய டைரக்டர்களிடம் எல்லாம் நடிச்சிட்டு வந்திருக்கேன்.. பாலச்சந்தர், பாக்யராஜ், பாரதிராஜா படத்தில் நடிச்சிருக்கேன். எனக்கே கரெக்ஷன் சொல்றாரே உங்க டைரக்டர்" என்று முணுமுணுத்திருக்கிறார்.
ஆனால், மேற்கண்ட டைரக்டர்களிடம் மட்டுமல்ல, புது டைரக்டர்களிடமும் நடித்து, அந்த படத்தை ஹிட்டாக்கியவர் விஜயகாந்த்.. அப்படியிருந்தும்கூட, இதுவரை எந்த டைரக்டரிடமும், ஒருவார்த்தைகூட தப்பா சொன்னதில்லை. அப்படியெல்லாம் ஒரு நடிகரை இனி பார்க்கவே முடியாது.
தூக்கமே இல்லை: அவர் இறப்பதற்கு 6 மாசம் முன்னாடிகூட, நான், டைரக்டர்கள் செல்வமணி, ஆர்.வி.உதயகுமார் எல்லாரும் வீட்டுக்கு போய் பார்த்தோம்.. எப்படி பார்த்த உருவம்? மாஸ்க் போட்டிருந்தார்.. அவரை 2 பேர் தாங்கி பிடிச்சிட்டு நின்னுட்டு இருக்காங்க. அவரால் பேச முடியல.. அவரை பார்த்துட்டு அன்னைக்கு எங்களுக்கெல்லாம் தூக்கமே இல்லை.. எப்படியும் மீண்டு வந்துடுவார்னுதான் நாங்கெல்லாம் நினைச்சோம்... கிரேட் மனிதர்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications