விஜயகுமார் கிராமத்து வீட்டில் பேத்திக்கு பிரம்மாண்ட வரவேற்பு.. ஆனால் அங்கு இத்தனை விஷயங்கள் இருக்கா?
சென்னை: நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவின் திருமணம் சில தினங்களுக்கு முன்பு கோலாகலமாக முடிவடைந்தது. அதற்குப் பிறகு விஜயகுமார் தன்னுடைய சொந்த ஊரில் தான் கட்டி இருக்கும் வீட்டில் ரிசப்ஷன் வைத்திருக்கிறார். அது குறித்து விஜயகுமாரின் மகள் அனிதா நெகிழ்ச்சியோடு பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.
விஜயகுமாரின் இரண்டாவது மகளான அனிதாவின் மகள் தியாவிற்கு அவருடைய காதலனோடு இரு குடும்பத்தின் சம்மதத்தோடு திருமணம் முடிவடைந்து இருக்கிறது. இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு தன்னுடைய பேத்தியை தன்னுடைய சொந்த கிராமத்தில் உள்ள தன்னுடைய பூர்வீக வீட்டில் வரவேற்ற விஜயகுமார் பேத்திக்காக வான வேடிக்கை எல்லாம் போட்டு அசத்தியிருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆக வருகிறது.

பல வருடங்களாகவே சினிமாவில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் விஜயகுமார் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் வெற்றிகரமான நடிகராக இருந்து வருகிறார். தான் நடிக்கும் திரைப்படங்களில் அதிகமாக கௌரவ வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் விஜயகுமார் வெள்ளி திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஆனாலும் இவர் நடித்து பெயர் பெற்ற நாட்டாமை திரைப்படத்திற்கு பிறகு இவரை ரசிகர்கள் நாட்டாமை விஜயகுமார் என்று அழைத்து வருகிறார்கள். ஆனால் இவருடைய நிஜ பெயர் பஞ்சாட்சரம் ராமசாமி பிள்ளை என்பதுதானாம். விஜயகுமாரின் சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை அருகில் உள்ள நாட்டுச்சாலை என்ற கிராமம்தானாம்.

இந்த கிராமத்தில் பிறந்து வளர்ந்த விஜயகுமார் சினிமாவுக்காக தான் தன்னுடைய பெயரை மாற்றி இருக்கிறார். இந்த நிலையில் விஜயகுமார் முத்துக்கண்ணு என்ற பெண்ணை திருமணம் செய்து அவருக்கு கவிதா, அனிதா, அருண் விஜய் என மூன்று பிள்ளைகள் இருக்கும் நிலையில் முத்து கண்ணுவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்திருந்தார்.

நடிகை மஞ்சுளாவிற்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி என்று மூன்று பிள்ளைகள் இருக்கும் நிலையில் குழந்தைகள் எல்லோரையுமே விஜயகுமார் பாசமாகத்தான் பார்த்து வருகிறார். சமீபத்தில் சில வருடங்களுக்கு முன்பு வனிதாவோடு ஏற்பட்ட குடும்ப பிரச்சனை பலருக்கும் தெரிந்ததுதான். அதற்குப் பிறகு நடிகை வனிதா மட்டும் விஜயகுமார் குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக இருக்கிறார்.
அதே நேரத்தில் விஜயகுமாரின் இரண்டு மனைவிகளின் குழந்தைகளும் ஒன்றாக தான் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதாவின் மகளுக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு திரை துறையை சார்ந்த பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர். ஐந்து நாட்களாக களைகட்டிய இவர்களுடைய திருமண பங்க்ஷன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தான் இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் விஜயகுமார் பேத்திக்கு திருமணம் முடிந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் இன்று விஜயகுமாரின் மகள் அனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில வீடியோக்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் தன்னுடைய மகளுக்காக தன்னுடைய தந்தை எங்கள் சொந்த கிராமத்தில் செய்த எதிர்பாராத ரிசப்ஷன் என்று சொல்லி இருக்கிறார்.
அதோடு வீட்டுக்கு வாசலில் தியா குடும்பத்தோடு வந்து நிற்கும்போது வாண வேடிக்கை வர்ணஜாலமாக பல மணி நேரம் வானத்தில் நிகழ்ந்து கொண்டிருந்திருக்கிறது. அதை நடிகர் அருண் விஜய், ஸ்ரீதேவி, பிரீத்தா எல்லோரும் வியந்து பார்த்து இருக்கிறார்கள். அந்த வீடியோவை அனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தன்னுடைய தந்தையின் பாசத்தை பெருமைப்படுத்தி இருக்கிறார்.

அதோடு மணப்பெண்ணான தியாவும் தன்னுடைய தாத்தா தன் மீது வைத்திருக்கும் அன்பை பெருமையாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பதிவு செய்திருக்கிறார். அதுபோல விஜயகுமார் சொந்த ஊரில் இப்போது தன்னுடைய பேத்தியின் ரிசப்ஷன் நடத்தும் வீடு விஜயகுமாரின் குடும்ப வீடு தானாம். இந்த வீடு ஆரம்பத்தில் பழமையாக இருந்ததாம். பிறகு அதை விஜயகுமார் புதுப்பித்து அழகாக கட்டியிருக்கிறார்.

இந்த வீட்டில் மொத்த குடும்பமும் தங்கி செல்லும் வகையில் இவர் அதை பிரம்மாண்டமாக மாற்றி இருக்கிறார். இந்த வீட்டில் 10 பெட்ரூம் இருக்கிறதாம். மேலும் இந்த பிரம்மாண்ட வீட்டின் நுழைவு வாயிலில் விஜயகுமார் முதல் மனைவி மற்றும் இரண்டாம் மனைவியின் சிலை அமைத்திருக்கிறார்.
அது மட்டும் அல்லாமல் விஜயகுமார் அந்த வீட்டில் தன்னுடைய தாய் தந்தைக்குமே சிலை வைத்திருக்கிறார். அதுபோல நடிகர் அருண் விஜய் தன்னுடைய ஒவ்வொரு திரைப்படத்தின் ரிலீஸ் போதும் அந்த வீட்டிற்கு வந்து தன்னுடைய பாட்டி தாத்தாவின் சிலை முன்பு பேனர் வைத்து வணங்கிவிட்டு தான் போவாராம்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications