விஜயகுமார் பேத்திக்கு மாமியார் வீட்டு சீர் இவ்வளவா? ஆனால் மாப்பிள்ளை இப்படினு எதிர்பார்க்கல..! பிரபலம் ஓப்பன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற விஜயகுமார் பேத்தி தியாவின் திருமணம் பற்றிய செய்திகள் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் விஜயகுமாரின் மகள் அனிதாவின் நெருங்கிய தோழி டாக்டர் வினோதினி பாண்டியன் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் விஜயகுமார் வீட்டு திருமணத்தை பற்றி பல ரகசியங்களை உடைத்திருக்கிறார்.

அதில் அனிதாவின் மகளான தியாவிற்கு அவருடைய மாமியார் வீட்டு சீர் எவ்வளவு கொடுத்தார்கள் என்பது பற்றியும் அவர்களுடைய வழக்கத்தைப் பற்றியும் வெளிப்படையாக பேசி இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

Vijayakumars grand daughter Diya wedding how much her in-laws gave her house seer

அந்த வகையில் சமீபத்தில் விஜயகுமார் பேத்தி தியாவின் திருமணம் கோலாகலமாக நடைபெற்று இருந்தாலும் அது முடிவடைந்த சில தினங்களான பிறகும் அந்த நிகழ்ச்சி பற்றிய பேச்சு இணையத்தில் அதிகமாக இருந்து வருகிறது. அதுபோல விஜயகுமார் வீட்டு புகைப்படங்களும் வீடியோக்களும் பரவி வருகிறது. இந்த நிலையில் விஜயகுமார் வீட்டு திருமண விஷயங்களை குறித்து விஜயகுமாரின் மகள் அனிதாவின் நெருங்கிய தோழி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

அதில் அவர் பேசுகையில் நானும் அனிதாவும் கல்லூரி தோழிகள். கல்லூரியில் தொடங்கிய எங்களுடைய நட்பு இப்போதும் ஒரே குடும்பமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் அனிதாவின் மகள் தியா எனக்கும் மகள் போல தான். நான் தூக்கி வளர்த்த குழந்தை என்று தியாவை சொல்லலாம். அந்த அளவிற்கு எனக்கு தியாவை பிடிக்கும். என்னுடைய பிள்ளையை எவ்வளவு பிடிக்குமோ அதுபோல தியாவும் எனக்கு.

Vijayakumars grand daughter Diya wedding how much her in-laws gave her house seer

லண்டனில் டாக்டர் படித்த தியா அவரோடு படித்த தீலனை காதலித்து வந்த விஷயத்தை பற்றி எங்களிடம் சொன்னார். அதற்கு பிறகு அனிதா குடும்பத்தினர் தீலன் வீட்டில் சென்று விசாரித்து விட்டு வந்தனர். அங்கு போய் பார்த்த பிறகுதான் இப்படி ஒரு மாப்பிள்ளையை நாம தேடி இருந்தாலும் கிடைக்க மாட்டார் என்று எங்களுக்கு தோன்றியது.

அந்த அளவிற்கு மாப்பிள்ளையின் குடும்பத்தினர் ரொம்பவே நல்லவங்க. தீலன் மட்டுமல்லாமல் தீலனின் அம்மாவும் தியா மீது அதிகமாக பாசமாக இருக்கிறார். தீலனில் அம்மாவுக்கு த்ரிஷா என்ற மகள் இருக்கிறார். அந்த மகளுக்கு என்னவெல்லாம் செய்வாரோ அது போலவே தியாவுக்கும் செய்வார். ஆனால் தியா ரொம்பவும் எளிமையான பொண்ணு. காதில் எப்போதும் ஒரு கம்மல் கூட போட மாட்டார்.

Vijayakumars grand daughter Diya wedding how much her in-laws gave her house seer

அப்படியே போட்டாலும் ஒரு பொட்டு போல கம்மல் தான் போடுவார். கழுத்தில் எல்லோரும் திட்டினால் தான் ஒரு சின்ன செயின் போடுவார். கையில் மட்டும் ஒரு வாட்ச் போட்டு இருப்பார். இப்படி எளிமையாக இருக்கும் தியா திருமணத்தில் தேவதையாக ஜொலித்துக் கொண்டிருந்தார். அதை பார்த்து நாங்கள் பிரமித்து போனோம். அதுபோல தியாவின் திருமணம் கடந்த வருடமே முடிவு பண்ணி விட்டோம்.

அதிலும் கடந்த மாதத்தில் அனிதாவின் வீடு கிரகப்பிரவேசத்திற்கு தீலன் குடும்பத்தினரும் வந்திருந்ததால் அன்று திருமண ஓலை படிக்கும் பங்க்ஷனையும் நடத்தி விட்டோம். பிறகு இப்போது ஜனவரி 15ஆம் தேதி பந்தக்கால் நாட்டுதல் தொடங்கியது. அப்போது தியா கட்டியிருந்த மஞ்சள் கலர் மற்றும் ப்ளூ கலர் பார்டர் போட்ட புடவை மாப்பிள்ளை வீட்டில் இருந்து கொடுத்தது.

Vijayakumars grand daughter Diya wedding how much her in-laws gave her house seer

மாப்பிள்ளை தீலன் குஜராத்தை சார்ந்தவர் என்பதால் அவர்களுடைய வழக்கப்படி பொண்ணுக்கு என்கேஜ்மென்ட், கல்யாண புடவை எல்லாமே அவங்க தான் கொடுக்கணுமாம். அதுபோல பொண்ணுக்கு தேவையான வெள்ளி நகைகள் மற்றும் தங்க நகைகளும் அவங்க தான் கொடுக்கணுமாம். அதனால் பந்தக்கால் நாட்டுதல் பங்க்ஷனில் தியா போட்டு இருந்த அத்தனை நகைகளும் மாப்பிள்ளை வீட்டில் இருந்து கொடுத்தது.

நெத்தி சுட்டி முதல் கைகளில் போட்டிருந்த வளையல் வரை எல்லாமே மாப்பிள்ளை வீட்டார் கொடுத்தது தான். அதுபோல தியாவின் திருமணம் ஐந்து நாட்கள் பங்ஷனாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது மாப்பிள்ளை ஒவ்வொரு நாளும் தியாவிற்கு லவ் லெட்டர் கொடுத்துக் கொண்டே இருந்தார். நாங்கள் அதைப் பற்றி கிண்டல் செய்தாலும் அவர் ஜாலியாக சிரித்துக் கொண்டே போய்விடுவார்.

அதுபோல தியா எப்படி எங்க எல்லார் கிட்டயும் பாசமாக பேசுவாலோ அதுபோலத்தான் மாப்பிள்ளையும் எங்கள் குடும்பத்தோடு நன்றாகவே செட்டாகி விட்டார். அதுபோல விஜயகுமார் சாருக்கு தியா தான் ரொம்பவும் செல்ல பிள்ளை. தியாவின் கல்யாணத்தை பார்த்து விஜயகுமார் சார் பல இடங்களில் கண்கலங்கி கொண்டிருந்தார் என்று அந்த பேட்டியில் டாக்டர் வினோதினி பாண்டியன் பேசி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+