தனலட்சுமி, அசீம் விஷயத்தில் மாற்றம் செய்ய கூறி கமலிடம் வேண்டுகோள் வைத்த "நீங்கள் கேட்டவை” விஜயசாரதி
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் தனலட்சுமி வெளியேற்றம் நடைபெற்றது.
தனலட்சுமி வெளியேற்றம் சரியானது அல்ல என்று அவருக்கு ஆதரவாக ஹேஷ்டேக் பிரபலமாகி ஆகி வருகிறது.
இந்த நிலையில் தனலட்சுமிக்கு ஆதரவாகவும் அதே நேரத்தில் அசீம் தப்பை சுட்டிக்காட்டி சன் டிவி நீங்கள் கேட்ட பாடல் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜயசாரதி பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

ரசிகர்களின் கருத்து
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேறினாலும் ஒவ்வொரு சீசனிலும் ஒரு போட்டியாளரின் வெளியேற்றம் சரியானது அல்ல என்று சொல்லும் வகையில் தான் இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போதைய ஆறாவது சீசனில் தனலட்சுமி வெளியேற்றத்தை ரசிகர்கள் பலரும் இது அண்ஃபேர் என்று கூறி வருகிறார்கள். காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் தனலட்சுமி நிகழ்ச்சிக்கு சுவாரஸ்யம் சேர்க்கும் வகையில் பல நேரங்களில் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அது மட்டுமல்லாமல் விளையாட்டுகளில் அவர் வெறித்தனமாக விளையாட்டினாலும் பல நேரங்களில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் ரசிகர்களின் மத்தியில் அவருக்கு ஆதரவு கிடைத்து வந்தது.

ஆரம்பத்தில் சண்டை
குறைவான வயதிலேயே இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று பல வருடங்களாகவே போராடி வருவதாக கூறி இருக்கிறார். ஒரு சாதாரண பெண்ணாக அறிமுகமான தனலட்சுமி டிக்டாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக சிறுவயதிலேயே நடிப்பின் மீது இருந்த ஆசையால் படிப்பை விட்டு விட்டு நடிப்பின் பக்கத்தில் திரும்பி இருக்கிறார். பறை இசை என்ற ஆல்பத்திலும் நடித்து இருக்கிறார். பிக் பாஸில் கலந்து கொண்ட முதல் நாளிலிருந்து பல சர்ச்சைகளில் சிக்கி இருந்திருக்கிறார். ஆரம்பத்தில் ஜிபி முத்து உடன் சண்டை அதைத் தொடர்ந்து ஆசல் கோளாறு உடன் சண்டை, அதற்கு பிறகு அசீமுடன் சண்டை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்கு பல போட்டியாளர்களுடன் சண்டையிட்டு வந்ததாலே சில நேரங்களில் ரசிகர்களின் மத்தியில் வெறுப்பையும் சம்பாதித்து இருக்கிறார்.

இது சரியா
என்னதான் தனலட்சுமி வெறுப்பை சம்பாதித்து இருந்தாலும் அவர் இந்த வாரம் எலிமினேட் ஆகி இருப்பதை பலராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் பிக் பாஸ் வீட்டிற்குள் ஒன்றுமே செய்யாமல் இருக்கும் கதிர், ரச்சிதா எப்போதுமே புறம் பேசிக் கொண்டிருக்கும் ஏடிகே காமெடி என்கிற பெயரில் ரசிகர்கள் மத்தியில் கிரெஞ்ச் பெயரை எடுத்த மைனா எல்லோரும் பிக்பாஸ் வீட்டிற்கு இருக்கும் போது தனலட்சுமி வெளியேறியது சரியா என்று அவருடைய ரசிகர்கள் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

விஜய சாரதியின் வேண்டுகோள்
இந்த நிலையில் தனலட்சுமி வெளியேற்றத்தை தொடர்ந்து அவருக்கு ஆதரவாக பலர் கருத்து வெளியிட்டு வரும் வகையில் நீங்கள் கேட்ட பாடல் விஜயசாரதி தனது twitter பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் தனலட்சுமி அசீம் மற்றும் அமுதவாணனை விட சிறந்த போட்டியாளர் கமல் சார் நீங்கள் எப்போதும் சொல்வது போல, "பார்வையாளராக எங்களுக்கு தனலட்சுமி மீண்டும் நிகழ்ச்சியில் தொடர வேண்டும். இதை கொஞ்சம் பரிசீலனை செய்யுங்கள்" என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு ரசிகர் ஒருவர் நிகழ்ச்சியில் பார்க்காமல் கமல் கிட்ட கேட்டா எப்படி என்று கூற, அதற்கு பதில் அளித்த விஜயசாரதி, கமல் சாருக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் என்ன நடக்கிறது என்பது எல்லாம் தெரியும், கடந்த வாரம் கூட அசீமை அடுத்தவர்கள் செய்யும் வேலை குறித்து பேசக்கூடாது என்று எச்சரித்தார். ஆனால் அசீம் அதை மீறிவிட்டார். பிக் பாஸ் மதிக்காத ஒரு ஆள் எதற்கு? இது நிகழ்ச்சியின் மேன்மையா? அசீம் ஒரு தவறான உதாரணத்தை செட் செய்கிறார்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications