மாநாட்டையே மட்டமாக்கிட்டாங்களே.. விக்ரவாண்டியில் விஜய் அப்செட் போல.. எங்கே மிஸ் ஆச்சு? பிரபலம் வேதனை
சென்னை: இது மாநாடா? அல்லது போர்க்களமா? என்று கேட்க வைத்துவிட்டார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ள மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, கட்டுக்கோப்புடன் நடந்துகொள்ள விஜய் ரசிகர்கள் தவறிவிட்டார்களோ? என்ற சந்தேகத்தையும் கிளப்பி இருக்கிறார்.. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
Cheyyaru Balu Official என்ற யூடியூப் சேனலில், செய்யாறு பாலு பேசும்போது, "விஜய் அத்தனை முறை படிச்சு படிச்சு சொல்லியும், அவர் பேச்சை கட்சியினர் கேட்கவில்லை.. மாநாட்டுக்கு வந்தீங்களா? கன்டன்ட் தர வந்தீங்களா? என்று கேட்க வைத்துவிட்டார்கள்..

250 கோடி சம்பளம் வாங்கக்கூடிய ஒரு நடிகர், அத்தனை தயாரிப்பாளர்கள் இப்போதுகூட வரிசையில் காத்திருக்கிறார்கள்.. லைம்லைட்டில் இருக்கக்கூடியவராகவும் இருக்கிறார்.. இவை அத்தனையையும் தூக்கி எறிந்துவிட்டு அரசியலுக்காக வந்திருக்கிறார் விஜய்.
ரசிகர்கள்: கமல்ஹாசனை போலவே, தன்னுடைய ரசிகர்களையும் வேறுவிதமாக மாற்ற முயல்கிறார்.. கட் அவுட் கலாச்சாரம், பாலாபிஷேகம். இதெல்லாம் நிறுத்திவிட்டு, அடுத்தக்கட்டத்துக்கு வருமாறு ரசிகர்களை அழைக்கிறார்.. ஆனால், நீங்க இன்னும் இப்படித்தான் இருப்பீங்களா? என்பது போல இன்றைய நிகழ்வு அமைந்துவிட்டது.
மது அருந்திட்டு வராதீங்க , கைக் குழந்தைகள், கர்ப்பிணிகள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரவேண்டாம் என்று சொல்லியும் அத்தனையும் இன்று மீறப்பட்டுள்ளது.. டாஸ்மாக் சரக்கை உள்ளே கொண்டுபோயிருக்காங்க.. ஒரு செய்தி சேனல் முன்னாடியே, வெச்சு குடிக்க ஆரம்பிச்சிருக்காங்க..
வழிமுறைகள்: நேத்து இரவே பல பேர் கிளம்பிட்டாங்க? இவ்வளவு கூட்டம் எங்கிருந்து வந்தது? மாநாட்டுக்கு வருபவர்களுக்கு வழிமுறைகள் தரப்பட்டதா? மாநாட்டு பந்தலிலிருந்த 4 வரிசையும் அடித்து காலி செய்துட்டாங்க.. வெயில் தாங்க முடியல.. நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கீழே மயங்கி விழுந்துட்டாங்க.. டேங்கில் தண்ணியும் இல்லை.. எத்தனை பேர் மாநாட்டுக்கு வருவார்கள் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியவில்லையா? இவர்கள் எல்லாம் விஜய்யை பார்க்க வந்தவர்களா? கட்சி நபர்களா? தெரியவில்லை.
ஆனால், இந்த மாநாட்டையே சரியாக பண்ண முடியல? என்ற விமர்சனம் இப்பவே கிளம்பிடுச்சு.. மக்களுக்கு படிப்பறிவு இல்லாத காலகட்டத்திலேயே புரட்சித்தலைவர் எம்ஜிஆர் முதல் மாநாடு நடத்தினார்... இதைவிட 3 மடங்கு கூட்டம் அப்போது வந்தது.. ஆனால், அவரது கையசைவு, கண் அசைவுக்கு அத்தனை கூட்டமும் கட்டுப்பட்டது.
விஜயகாந்த்: பிரேமலதா விஜய்காந்த் அறிக்கையில் சொல்வதுபோல, தேமுதிகவின் முதல் மாநாட்டுக்கு 25 லட்சம் பேர் வந்தாங்க.. அமைதியா இருந்துட்டு போனாங்க.. எல்லாத்துக்கும் காரணம் விஜயகாந்த்தின் சொல்லுக்கு கட்டுப்பட்டதுதான்.
மதியம் வரை 3200 வண்டிகள் விக்கிரவாண்டி டோல்கேட்டிற்கு வந்ததாக சொல்றாங்க... இதுக்கே பார்க்கில் இடமில்லை.. இதுபோக கர்நாடகா, கேரளாவிலிருந்தும் வந்திருக்காங்க.. மாநாட்டு ஏற்பாட்டில் குறைபாடா? தெரியவில்லை.. ஆனால், கண்டன்ட் தரும் நபர்களாக ஆயிட்டாங்க.. "அதிமுக, திமுக, பிஜேபிகாரர்கள் உள்ளே வந்துட்டாங்க, களேபரம் பண்ணிட்டாங்க" என்றெல்லாம் கிளப்பி விடறாங்க. அவங்க யாருமே கிடையாது.. எல்லாமே விஜய் ரசிகர்கள்தான்
கட்டுக்கோப்பு: விஜய் சாதாரணமாக வந்த நபர்.. மிகப்பெரிய துணிச்சலுடன் அரசியலுக்கு வந்திருக்கிறார்.. விஜய் பெருமையை காப்பாற்றுவதைவிட்டு, சேர் எடுத்து அடிக்கிறது, பாட்டில் குடிக்கிறது, என ஒழுங்கீனம் இல்லாமல் நடந்து கொண்டுள்ளார்கள்.. இதனால், விஜய் அப்செட்டுன்னு நினைக்கிறேன்.. இப்போதும் புரியவில்லை.. மாநாட்டு கூட்டத்தை கணிக்க தவறிவிட்டார்களா? அப்படியே தவறினாலும், தொண்டர்களிடம் கட்டுக்கோப்பு இல்லையே? " என்று வேதனை தெரிவித்துள்ளார்.
"விஜய் அத்தனை முறை படிச்சு படிச்சு சொல்லியும், அவர் பேச்சை கட்சியினர் கேட்கவில்லை.. மாநாட்டுக்கு வந்தீங்களா? கன்டன்ட் தர வந்தீங்களா? என்று கேட்க வைத்துவிட்டார்கள்..
250 கோடி சம்பளம் வாங்கக்கூடிய ஒரு நடிகர், அத்தனை தயாரிப்பாளர்கள் இப்போதுகூட வரிசையில் காத்திருக்கிறார்கள்.. லைம்லைட்டில் இருக்கக்கூடியவராகவும் இருக்கிறார்.. இவை அத்தனையையும் தூக்கி எறிந்துவிட்டு அரசியலுக்காக வந்திருக்கிறார் விஜய்.
ரசிகர்கள்: கமல்ஹாசனை போலவே, தன்னுடைய ரசிகர்களையும் வேறுவிதமாக மாற்ற முயல்கிறார்.. கட் அவுட் கலாச்சாரம், பாலாபிஷேம் . இதெல்லாம் நிறுத்திவிட்டு, அடுத்தக்கட்டத்துக்கு வருமாறு ரசிகர்களை அழைக்கிறார்.. ஆனால், நீங்க இன்னும் இப்படித்தான் இருப்பீங்களா? என்பது போல இன்றைய நிகழ்வு அமைந்துவிட்டது.
மது அருந்திட்டு வராதீங்க , கைக் குழந்தைகள், கர்ப்பிணிகள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரவேண்டாம் என்று சொல்லியும் அத்தனையும் இன்று மீறப்பட்டுள்ளது.. டாஸ்மாக் சரக்கை உள்ளே கொண்டுபோயிருக்காங்க.. ஒரு செய்தி சேனல் முன்னாடியே, வெச்சு குடிக்க ஆரம்பிச்சிருக்காங்க..
வழிமுறைகள்: நேத்து இரவே பல பேர் கிளம்பிட்டாங்க? இவ்வளவு கூட்டம் எங்கிருந்து வந்தது? மாநாட்டுக்கு வருபவர்களுக்கு வழிமுறைகள் தரப்பட்டதா? மாநாட்டு பந்தலிலிருந்த 4 வரிசையும் அடித்து காலி செய்துட்டாங்க.. வெயில் தாங்க முடியல.. நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கீழே மயங்கி விழுந்துட்டாங்க.. டேங்கில் தண்ணியும் இல்லை.. எத்தனை பேர் மாநாட்டுக்கு வருவார்கள் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியவில்லையா? இவர்கள் எல்லாம் விஜய்யை பார்க்க வந்தவர்களா? கட்சி நபர்களா? தெரியவில்லை.
ஆனால், இந்த மாநாட்டையே சரியாக பண்ண முடியல? என்ற விமர்சனம் இப்பவே கிளம்பிடுச்சு.. மக்களுக்கு படிப்பறிவு இல்லாத காலகட்டத்திலேயே புரட்சித்தலைவர் எம்ஜிஆர் முதல் மாநாடு நடத்தினார்... இதைவிட 3 மடங்கு கூட்டம் அப்போது வந்தது.. ஆனால், அவரது கையசைவு, கண் அசைவுக்கு அத்தனை கூட்டமும் கட்டுப்பட்டது.
விஜயகாந்த்: பிரேமலதா விஜய்காந்த் அறிக்கையில் சொல்வதுபோல, தேமுதிகவின் முதல் மாநாட்டுக்கு 25 லட்சம் பேர் வந்தாங்க.. அமைதியா இருந்துட்டு போனாங்க.. எல்லாத்துக்கும் காரணம் விஜயகாந்த்தின் சொல்லுக்கு கட்டுப்பட்டதுதான்.
மதியம் வரை 3200 வண்டிகள் விக்கிரவாண்டி டோல்கேட்டிற்கு வந்ததாக சொல்றாங்க... இதுக்கே பார்க்கில் இடமில்லை.. இதுபோக கர்நாடகா, கேரளாவிலிருந்தும் வந்திருக்காங்க.. மாநாட்டு ஏற்பாட்டில் குறைபாடா? தெரியவில்லை.. ஆனால், கண்டன்ட் தரும் நபர்களாக ஆயிட்டாங்க.. "அதிமுக, திமுக, பிஜேபிகாரர்கள் உள்ளே வந்துட்டாங்க, களேபரம் பண்ணிட்டாங்க" என்றெல்லாம் கிளப்பி விடறாங்க. அவங்க யாருமே கிடையாது.. எல்லாமே விஜய் ரசிகர்கள்தான்
கட்டுக்கோப்பு: விஜய் சாதாரணமாக முன்னுக்கு வந்த நபர்.. இன்று மிகப்பெரிய துணிச்சலுடன் அரசியலுக்கு வந்திருக்கிறார்.. விஜய் பெருமையை காப்பாற்றுவதைவிட்டு, சேர் எடுத்து அடிக்கிறது, பாட்டில் திறந்து குடிக்கிறது, இப்படி ஒழுங்கீனம் இல்லாமல் நடந்து கொண்டுள்ளார்கள்.. இதனால், விஜய் அப்செட்டுன்னு நினைக்கிறேன்.. இப்போதும் புரியவில்லை.. மாநாட்டு கூட்டத்தை முன்கூட்டியே கணிக்க தவறிவிட்டார்களா? அப்படியே தவறினாலும், தொண்டர்களிடம் கட்டுக்கோப்பு இல்லையா? " என்று வேதனை தெரிவித்துள்ளார்.
முன்னதாக பிரேமலதா விஜயகாந்த் பதிவிட்டிருந்த ட்வீட்டில், "இந்திய அரசியல் வரலாற்றில் சாதனை படைத்த ஒரே மாநாடு! மதுரை தேமுதிக முதல் மாநாடு 150 ஏக்கர் நிலப்பரப்பில் 2.5 லட்சம் சேர் போடப்பட்டு நடத்தப்பட்டது! உட்கார இடம் இல்லாமல் மாநாட்டுப் பந்தலுக்கு வெளியே லட்சோப லட்ச தொண்டர்கள் குவிந்தனர்! மொத்தம் 25 லட்சம் பேர் கலந்து கொண்டனர்! உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது" என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்டாண்ட்: இதனிடையே இன்று மாநாடு மேடையில் விஜய் பேசும்போது, "இனி எதைப்பற்றியும் யோசிக்கவே கூடாது. ஆனால், எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். அரசியலில் நாம் என்ன ஸ்டாண்ட் எடுக்க போகிறோம் என்பது தான் முக்கியம். அது தான் நம்ம எதிரி யார் என்று சொல்லும். இல்ல அவர்களே நம் முன் வந்து எதிர்க்க ஆரம்பிப்பார்கள். களத்தில் வெற்றியை தீர்மானிப்பதே எதிரிகள் தானே?
கட்சியை ஆரம்பித்த போதே அதாவது பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருக்குறளின் உயிர் நாதத்தை நம் அடிப்படை கோட்பாடு கொள்கையாக அறிவித்தபோதே நம்முடைய உண்மையான எதிரிகள் யார் என்று தெரிந்துவிட்டது. பிறப்பை வைத்து ஏற்றத்தாழ்வுகள் இல்லவே இல்லை, கூடவே கூடாது என்று சமதர்ம சமத்துவ கொள்கையை கையில் எடுத்த போதே கொஞ்சம் கதறல் சத்தம் கேட்டது" என்றெல்லாம் விஜய் பேசியிருக்கிறார்
-
டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் போன விஜய்.. பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு! -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க

Click it and Unblock the Notifications