Veera dheera sooran OTT: ஓடிடியில் வெளியாகி கெத்து காட்டும் வீர தீர சூரன்.. எந்த தளம் தெரியுமா?
சென்னை: நடிகர் விக்ரம் நடிப்பில் அருண்குமார் இயக்கத்தில் உருவான வீர தீர சூரன் திரைப்படம் தியேட்டரில் நல்ல வரவேற்பு பெற்றிருந்த நிலையில் இந்த திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. பாக்ஸ் ஆபீஸில் 66 கோடியை வசூலித்த இந்த திரைப்படத்தை இனி வீட்டில் இருந்தபடியே ஓடிடியில் பார்க்கலாம். அதுவும் எந்த தளத்தில் என்று விரிவாக பார்க்கலாம்.
நடிகர் விக்ரம் நடிப்பில் சில ஆண்டுகளாகவே வெளியான படங்கள் பெரிய அளவில் அவருக்கு ஹிட் கொடுக்காமல் இருந்தது. கடந்த ஆண்டு தங்கலான் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா பெரிய பட்ஜெட்டில் தயார் செய்திருந்தார். பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி, பார்வதி திருவோத்து, ப்ரீத்தி கரன் உட்பட பலர் நடித்திருந்தார்கள்.

ரசிகர்களுக்கு வருத்தம்
இப்படத்திற்காக பல வருடங்களாகவே விக்ரமும் கஷ்டப்பட்டு நடித்திருந்தார். ஆனால் ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை என்பது விக்ரம் ரசிகர்களுக்கும் வருத்தம் தான். என்னதான் கடின உழைப்பும் திறமையும் இருந்தாலும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று பலர் விக்ரம்காக பீல் பண்ணிக் கொண்டிருந்தனர்.
விக்ரம் கம்பேக்
அந்த நேரத்தில் தான் தங்கலான் படத்தை தொடர்ந்து சித்தார்த்த நடிப்பில் வெளியான சித்தா படத்தை இயக்கிய அருண்குமார் வீர தீர சூரன் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் விக்ரமின் 62வது படமாக உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க ஆக்சன் திரில்லர் ஜெனரலில் இந்த திரைப்படம் உருவாகி இருந்தது. அதுபோல இந்த திரைப்படத்தில் காளி என்ற கேரக்டரில் விக்ரம் நடித்திருந்தார்.
வீர தீர சூரன் நடிகர்கள்
வழக்கம்போல வீர தீர சூரன் திரைப்படத்திலும் நடிக்காமல் வாழ்ந்தே இருந்தார் என்று சொல்லலாம். இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகம் தான் இப்போது வெளியாகி இருக்கிறது. திரைப்படத்தின் வரவேற்பை பார்த்து முதல் பாகம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டாவது பாகமே பட்டி தொட்டி எல்லாம் ஹிட் அடித்து விட்டது. எஸ் ஜே சூர்யா, துஷாரா விஜயன் உட்பட பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர்.

வீர தீர சூரன் ஓடிடி ரிலீஸ்
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வந்த விக்ரம்க்கு வீர தீர சூரன் திரைப்படம் கம் பேக் கொடுத்திருக்கிறது. கடந்த மார்ச் 27ஆம் தேதி தியேட்டரில் வெளியான இந்த திரைப்படம் ஏப்ரல் 24 தேதி ஆன நேற்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படம் தியேட்டரில் 66 கோடி வசூல் செய்திருந்த நிலையில் இப்போது ஓடிடியில் டாப் இடத்தில் இருக்கிறது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications