கமல்ஹாசனை சந்தித்த விக்ரமன்.. காரணம் இதுதானா? சிறப்பான பதிலடி... குவியும் வாழ்த்துக்கள்
கமல்ஹாசனை சந்தித்த விக்ரமன்.. காரணம் இதுதானா? சிறப்பான பதிலடி... குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு முதல் முறையாக நடிகர் கமல்ஹாசனை விக்ரமன் சந்தித்து புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மரியாதை நிமித்தமாக கமல்ஹாசனை சந்தித்ததாக விக்ரமன் கூறியிருக்கிறார்.
கமலை சந்தித்திருக்கும் விக்ரமனிடம் அரசியல் காரணமாக இருக்குமா? இல்லை இருவரும் அடுத்த திரைப்படத்தில் ஒன்றாக நடிக்க வாய்ப்பு இருக்கிறதா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

எதிர்பார்க்காத தோல்வி
சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி போட்டியாளராக அறிமுகமான விக்ரமன் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருக்கும் கமல்ஹாசனை நேரடியாக சந்தித்து வாழ்த்து பெற்று இருக்கிறார். பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் விக்ரமன் தான் ஜெயிக்கப் போகிறார் என்று கடைசி வரை நம்பிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு கடைசி நேரத்தில் அதிர்ச்சி கிடைத்தது. அது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் தனக்கும் தான் அதிர்ச்சியாக இருந்தது என்று விக்ரமன் கூறியிருந்தார். கடைசி வரைக்கும் தான் வெற்றி பெறுவேன் என்று நம்பி இருந்த விக்கிரமனுக்கு தோல்வி கிடைத்து விட்டாலும் அறமே ஜெயிக்கும் என்று கமல் பாராட்டியது தனக்கு பெரிய சந்தோஷத்தை கொடுத்தது என்று விக்ரமன் கூறியிருந்தார்.

கமலுடைய சப்போர்ட்
இந்த நிகழ்ச்சியில் விக்ரமன் இருக்கும்போது ஒவ்வொரு வாரமும் அவர் கமலால் பாராட்டப்பட்டு வந்த நிலையில், ஒரு அரசியல் பிரமுகராக பிக் பாஸ் வீட்டிற்குள் அடி எடுத்து வைத்திருந்த விக்ரமன் வேறு கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் அவருடைய சிந்தனை செயல்பாடு எல்லாவற்றையும் பற்றி கமல் ஒவ்வொரு இடத்திலும் பாராட்டிக் கொண்டிருந்தார். இது அதிகமான நெட்டிசன்களை கோவப்பட வைத்திருந்தது. கமல் விக்ரமனுக்கு தான் ஒவ்வொரு வாரமும் சப்போர்ட் செய்கிறார் என்று பலர் குற்றம் கூறி வந்தனர்.

அசீம் கருத்து
அது மட்டுமல்லாமல் அசீம் அதிகமான வாக்குகள் ஒவ்வொரு வாரமும் பெற்றுக் கொண்டிருந்தாலும் அவர் கடைசியில் அதிகமான முறை சேவ் செய்யப்பட்டது அதிகமான அசீம் ரசிகர்களை பாதிப்படையை செய்திருந்தது. அதனாலேயே கமலுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை கூறி வந்தனர். ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் செய்த அசீமை விட்டுவிட்டு கமல் விக்ரமனுக்கு தோலை தட்டிக் கொடுத்து அறமே வெல்லும் என்று கூறியது மேலும் அதிகமான நெகட்டிவ் கருத்துக்களை பெற்றது. ஆனாலும் அசீம் அதுவெல்லாம் சரி இல்லை. கமல் எனக்கு அறிவுரை கூறி, ஒரு சிற்பியாக இருந்து என்னை செதுக்கி எடுத்து இருக்கிறார் என்று கூறிக் கொண்டிருந்தார்.

சந்திப்பதற்கான காரணம்
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விக்ரமன் தான் ஜெயிக்கவில்லை என்றாலும் ரசிகர்களை மனதை வென்று விட்டேன் அதுவே போதும் என்று கூறி பல நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வரும் நிலையில் இன்று முதல் முறையாக கமல்ஹாசனை சந்தித்து இருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து, "இன்று மதிப்பிற்குரிய அண்ணன் திரு கமல்ஹாசன் அவர்களின் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றேன்" என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த பதிவை ரசிகர்கள் பலர் பாராட்டி வருகின்றனர். இன்னும் ஒரு சில ரசிகர்கள் இன்று விக்ரமன் சென்று விட்டால் நாளை அசீம் கப்போடு சென்று கமலை சந்திக்க இருக்கிறார் என்று இப்போதும் கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications